AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
ஸ்ரீ ராம நவமியும் அதன் சிறப்புகளும் | இராம நவமி 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஸ்ரீ ராம நவமியும் அதன் சிறப்புகளும்

ஸ்ரீ இராமர் அவதரித்த திருநாளே ராம நவமி என கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி. ராம நவமி சித்திரை  மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் நவமி திதியில் கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் இது பங்குனி மாதமே வருவதும் உண்டு. இந்த நாளில் விரதம் இருந்து ராமரை வழிபடுபவர்களுக்கு ஸ்ரீ இராமரின் பரிபூரண அருளும், ஸ்ரீ ஆஞ்சஜ்நேயரின் பரிபூரண அருளும் கிட்டும் என்பது ஐதீகம்.

இரண்டு விதமான விரதம்

ராமநவமி விரதம், இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர், பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.

இராமரின் அவதாரம் 

ராம நவமி விழாவின் வரலாறும் முக்கியத்துவமும் அயோத்தியின் மன்னரான தசரதரின் மகனான ராமரின் பிறந்தநாளை நினைவுபடுத்துவதாகும். தசரத மன்னன் கௌசல்யா, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று அரசிகளை மணந்தார்.மிக நீண்ட காலமாக, மூன்று ராணிகளுக்கும்  குழந்தைகள் இல்லை. மன்னன் தசரதர்,  வசிஷ்ட முனிவர் பரிந்துரைத்த புத்திரகாமேஷ்டி ஹோமம் செய்தார். யாகத்தின் விளைவாக இந்து தமிழ் மாதமான சித்திரையின்  ஒன்பதாம் நாளில் மன்னர் நான்கு ஆண் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டார். ராணி கௌசல்யா பகவான் ராமரைப் பெற்றெடுத்தார், கைகேயி பரதனைப்  பெற்றெடுத்தார், சுமித்ரா லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் என்ற இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தார்.அயோத்தி மக்களை தீமையிலிருந்து காப்பாற்றவும், தனது ராஜ்ஜியத்தில் அமைதியும் செழிப்பும் நிலவுவதை உறுதி செய்வதற்காக ராமர் பிறந்தார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி பூஜை மற்றும் விரதம்

பூஜை அறையில் இராமர் பட்டாபிஷேகப் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டு வைத்து, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். ராமரை பற்றிய நூல்களை படித்தும், இராமாயணத்தை பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

ஸ்ரீராம நவமி நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நாமம் ஜெபித்து விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி தினம்

2024 ஆம் ஆண்டு ராம நவமி ஏப்ரல் 17 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ராம நவமி முஹுர்த்த நேரம்   – 17 ஏப்ரல் 2024 அன்று காலை 11:08 முதல் மதியம் 01:36 வரை

நவமி திதி தொடக்கம்  – 16 ஏப்ரல் 2024 அன்று இரவு 09:07 மணி

நவமி திதி முடிவு      – 17 ஏப்ரல் 2024 அன்று இரவு 11:30 மணி

ஸ்ரீ ராமநவமி சிறப்புகள்

இந்த நாளில் ராம பக்தர்கள் தீவிர விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

ராம நவமி அன்று  நாள் முழுவதும் பல்வேறு கோவில்களில் ராமாயணம் பாராயணம் செய்யப்படுகிறது.

பத்து நாட்கள் வரை கோவிலில் கதா காலட்சேபம் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் அயோத்தியில் தங்கள் அன்புக்குரிய மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பெரிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில், இது ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவின் ஒரு பகுதியாகும்.

அயோத்தியின் தெருக்களில் ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணர் மற்றும் அனுமன் சிலைகளின் ‘ஷோபா யாத்திரை’ ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றது.

‘ஓம் ஸ்ரீ ராம்’ என்ற புனித மந்திரம் நாள் முழுவதும் பல முறை ஓதப்படுகிறது.

ராம நவமி நாளில் ஹோமம் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ ராமர் கோயில்கள்  விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.  மேலும் ராமர் சிலைகள் சிறந்த ஆடை மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

பல இடங்களில், இந்த நாள் ராமர் மற்றும் அன்னை சீதையின் திருமண நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில், ராம நவமி நாளில் கல்யாணோத்ஸவம் நடத்தப்படுகிறது. இந்த நாளில், ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை குறிக்கும் வகையில் சம்பிரதாயமான திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு, இனிப்பான  ‘பானகம்’ அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு பானம் இது.

பின்னர், சிலைகள் நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

சில ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.