கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் நமது நினைவிற்கு வரும். கார்த்திகை தீபத் திருநாள் அன்று நாம் அனைவரும் வீட்டில் விளக்குகளை ஏற்றுவோம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றியவுடன் நாமும் நமது வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். அன்று இருபத்திஏழு நட்சத்திரங்களைக் குறிக்கும் விதமாக இருபத்தி ஏழு தீபங்களை ஏற்ற வேண்டும். இதில் ஐந்து விளக்குகளை வீட்டின் வாசலில் வைப்போம். மேலும் அன்றைய தினம் விளக்குகளை எல்லா இடத்திலும் வைக்க வேண்டும். துளசி மாடம், மாடிப்படி, வராண்டா, காம்பவுண்டு சுவர் கிணற்றடி, பம்பு செட்டு, கழிவறை, குளியலறை என்று எல்லா இடங்களிலும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பொதுவாக விளக்கு ஏற்றும் போது நமது வேண்டுதலையும் சேர்த்து வைப்போம். எனவே வேண்டுதல் வைத்து விளக்கு ஏற்றும் போது அது அணைவது நமக்கு அபசகுனமாக தெரியும். நாம் ஏற்றும் விளக்கு காற்றில் அணையாமல் எரிவதற்குண்டான சில பயனுள்ள குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
முதலில் விளக்கு ஏற்றுவது பற்றிக் காண்போம். தீபத் திருநாள் அன்று விளக்கு ஏற்ற நம்மிடம் பழைய அகல் விளக்குகள் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் என்றாலும் புதிய அகல் விளக்கு ஏற்றுவது நல்லது..நீங்கள் பழைய விளக்குகளை பயன்படுத்துகிறீர்கள் என்றால் எண்ணெய் பிசுக்கு இல்லமல் பார்த்தக் கொள்ளுங்கள். பழைய விளக்கோ அல்லது புதிய விளக்கோ அதனை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். \தண்ணீரில் ஊற வைத்த விளக்கை வெயிலில் காய வைக்கக் கூடாது ஒரு காட்டன் துணியைக் கொண்டு துடைக்கலாம். சிறிது ஈரப்பதம் இருந்தாலும் பரவாயில்லை அதனை அப்படியே பயன்படுதிக் கொள்ளலாம்
அவ்வாறு ஊற வைப்பதன் மூலம் அகல் விளக்கு எண்ணெய் உறிஞ்சாது. எண்ணெய் வெளியிலும் கசியாது. இல்லாவிடில் அதில் ஊற்றப்படும் எண்ணெயை அகல் விளக்கு உறிஞ்சி விடும். எண்ணெய் வெளியில் கசியும்.
மற்றுமொரு குறிப்பு என்னவெனில் விளக்கின் அடிப்பாகத்தில் நாம் விரலுக்கு வைக்க பயன்படுத்தும் நெயில் பாலிஷை தடவலாம். இதுவும் எண்ணெய் கசிவை தடுக்கும்.
இப்பொழுது அகல் விளக்கு ரெடியாகிவிட்டது அல்லவா? அதற்கு மஞ்சள் குங்குமம் பூச/தடவ வேண்டும் அல்லவா? அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தை பேஸ்ட் போல செய்து கொண்டு பட்சால் விளக்கிற்கு வைக்கவும் இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் கீழும் சிந்தாமல் இருக்கும். வைப்பதற்கும் எளிதாக இருக்கும். வேலையும் விரைவில் முடியும்.
அடுத்ததாக திரியை தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் நீட்டு திரி போடுகிறீர்கள் என்றால் அது தடிமனாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது பஞ்சு கொண்டு நீங்களே நேராக நிற்கும் திரியை தயார் செய்து கொள்ளலாம். இதனை பூந்திரி என்று கூறுவார்கள். அடிபாகம் தடியாகவும் அதன் மேல் நீண்ட தண்டு இருப்பது போன்றும் இந்த திரி இருக்கும். இந்த திரிகளை சிறிது நேரம் எண்ணெயில் ஊற விடுங்கள். பிறகு அதன் முனையில் கற்பூரம் தேய்த்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் விளக்கு அணையாமல் பாதுகாக்கலாம்.
மேலும் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் விளக்கில் இரண்டு துண்டு கற்பூர கட்டிகளை போட்டால் விளக்கு அணையாமல் இருக்கும்.
அடுத்ததாக நீங்கள் விளக்கு வைக்கும் இடத்தில் ஒரு சார்ட் பேப்பர் அல்லது தடிமனான கார்ட்போர்ட் பேப்பரை வைத்தது அதன் மீது விளக்கினை வைக்கவும். இது கீழே எண்ணெய் சிந்தாமல் இருக்க உதவும்.
அப்படியே கீழே சிந்திவிட்டால் ஏதாவது ஒரு மாவு அந்த இடத்தில் தூவி அதனை துடைத்து எடுத்து விட எண்ணெய் பிசுக்கு இருக்காது.
ஒரு பெரிய தாம்பூலத் தட்டில் விளக்குகளை வரிசையாக அடுக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் எண்ணெய் ஊற்றுங்கள். பிறகு விளக்கை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு கொண்டு வைக்கலாம்.
விளக்கு ஏற்றும் போது ஒரு அகல் விளக்கை ஏற்றிக் கொள்ளுங்கள். அதனைக் கொண்டு பிற விளக்குளை எளிதாக ஏற்றி விடலாம்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025