நாராயணா என்னும் திருமந்திரம். அதை நாவால் சொன்னால் போதும் புகழ் வந்திடும். என்பார்கள். நாராயணன் நாமத்தை சொல்லச் சொல்ல நமக்கு நன்மை பல கிட்டும். அவ்வாறு இருக்கும் போது அந்த நாராயணனை போற்றிப் பாடும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொன்னால் எத்தகு நற்பலன்கள் கிட்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. ‘ஸஹஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘நாமம்’ என்றால் பெயர்.
ஆண்டவனுடைய ‘அனந்த-கல்யாண-குணங்களை’, அதாவது, அவனுடைய எல்லையற்ற இயற்பண்புகளை, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம். ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும். சில பெயர்கள் அக்குணம் இருப்பதாலேயே தோன்றக்கூடிய அல்லது தோன்றிய பெயர்கள். இப்பெயர்களின் முழு உட்கருத்தையும் புரிந்துகொள்வதற்கு, ஏதாவதொரு பரம்பரை வழி வந்த வேதாந்த நுணுக்கங்கள் சில நமக்குத் தெரிதல் வேண்டியிருக்கலாம்.
விஷ்ணு சகஸ்வர நாமம் என்பது மிக மிக புனிதமானது. தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை படிப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அது கொஞ்சம் பெரியது என்பதால் அதனை ஒருவரால் தினமும் நேரம் ஒதுக்கி படிக்க முடியாது எனலாம். ஆனால் அதனை ஒலிக்க விட்டு கேட்கலாம். வேலை செய்து கொண்டே அதையும் காதில் வாங்கிக் கொள்ளலாம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் படிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினால், அது நிச்சயம் முடியாது. நம்முடைய வேலை பளு காரணமாக அதற்கான நேரத்தை நம்மால் ஒதுக்க முடியாது. விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுமையாக படிக்க முடியாது என்பவர்கள் தினமும் விஷ்ணுவை நினைத்து அதில் வரும் நான்கு வரிகளை வாயால் சொன்னாலே போதும்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒரு முறை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ கோடி புண்ணியம் கிடைக்கும். செல்வ வளம் பெருகம். நோய் நொடி இல்லாமல் வாழலாம். நல்ல திருமண வாழ்க்கை அமையும். குடும்ப ஒற்றுமை நிலவும். குழந்தை பாக்கியம் பெறலாம், எதிரி தொல்லையிலிருந்து விடுபடலாம் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க, விபத்திலிருந்து தப்பிக்க நல்ல தூக்கம் வர, கெட்ட கனவுகள் வராமல் இருக்க, இப்படி பல வகையான நன்மைகளை நமக்கு தரக்கூடிய பலன் இந்த ஒரு விஷ்ணு சகஸ்ர நாமத்தில் அடங்கியிருக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த நலனையும் நாம் பெற வேண்டும் என்றால் படிக்க வேண்டிய பாடல் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம். தினமும் காலையில், மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்க விடுங்கள். சரி காதால் கேட்டால் மட்டும் போதுமா. நாம் வாயால் அந்த விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமத்தை சொல்ல பலனை பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியம். விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அப்படியே மொத்தமாக சுருக்கமாக அடக்கி நான்கு வரிகளில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வரிகளை படித்தால் விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமத்தை சொன்ன பலனை நம்மால் பெற முடியும்.
நான்கு வரியில் விஷ்ணு சஹஸ்ரநாமம்
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம்
ராம நாம வரானனே !
நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது, ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன என்பதுதான் மதநூல்களின் தீர்மானம்; ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் என்பது நாம உச்சரிப்பின் பெருமை.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025