Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2024 | February Matha Thulam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2024 | February Matha Thulam Rasi Palan 2024

Posted DateJanuary 20, 2024

துலாம்  பிப்ரவரி  மாத பொதுப்பலன்கள் 2024

குடும்பத்தில் அமைதி இருக்கும். உங்கள் மனதிலும் அமைதி காணப்படும். என்றாலும் குழந்தைகள் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் பொறுமையுடன் அவர்களைக் கையாள வேண்டியிருக்கும். அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டலாம். கருத்து வேறுபாடுகளை நீக்கி நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் எந்தவித எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உத்வேகத்துடன் செயல்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத வெற்றிகளை சந்திப்பீர்கள்.நீங்கள் ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். வசதிகளை விரும்புவீர்கள். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் சவால்கள் இருந்த போதிலும் வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் தொழில் வாழ்க்கையில் சில தடைகளை சந்திக்க நேரலாம். சாதுரியமாகச் செயல் பட வேண்டும். தூக்கமின்மை பிரச்சினைக்கு நீங்கள் ஆளாக நேரலாம். தேவையான ஒய்வு மற்றும் முறையான  தூக்கம் மேற்கொள்ள வேண்டும்.

காதல் / குடும்ப உறவு :

காதலர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் கிட்டும். உங்கள் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் நீங்கள் உங்கள் காதலை பற்றி பகிர்ந்து கொள்வீர்கள். திருமணமான தம்பதிகளின் உறவின் பிணைப்பு அதிகரிக்கும். புரிந்துணர்வு ஏற்படும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நேர்மையாக பழக வேண்டும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மூலம் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள முடியும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை :

உங்கள் நிதிநிலையில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். இந்த மாதம் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். குறிப்பாக ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் லாபம் காண்பீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். உங்கள் ஏதிர்கால நலன் கருதி, எதிர்கால பாதுகாப்பு கருதி பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். அதே சமயத்தில் இந்த மாதம் நீங்கள் ஆடம்பர செலவுகளையும் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு காணப்படும். நிபுணர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு சிலர் வீட்டில் முதலீடு மேற்கொள்ளலாம்.குழந்தைகளின் நலனுக்காக செலவுகளை மேற்கொள்வீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை

உத்தியோகம் / தொழில் :

உத்தியோகத்தைப் பொறுத்த வரை இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். நீங்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். என்றாலும் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக முடித்து அளிப்பீர்கள். நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு பணியிடத்தில் வெளிப்படும்.  சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களின் சிறந்த பணியைப் பாராட்டுவார்கள்.  அவர்களின் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். பணியிடத்தில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து அளிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம். உங்கள் தலைமைத்துவ திறனை முறையாக பயன்படுத்த வேண்டும். வேலைகளை சரியாக பிரித்து அளிப்பதும் வேலை-வாழ்க்கை நிலையை ஆரோக்கியமாக பராமரித்தலும் அவசியம். தொழில் முன்னேற்றம் மந்தமாக இருந்தாலும் சீராக வாய்ப்புள்ளது.  திறமைகளை மேம்படுத்துவது, வலுவான அடித்தளத்தை உருவாக்குவது மற்றும்  திறன்களை வெளிப்படுத்துவது. மற்றும் அர்ப்பணிப்பு எதிர்கால வெற்றிக்கு வழி வகுக்கும்.

தொழில் :

நீங்கள் மேற்கொள்ளும் தொழிலில் முன்னேற்றமும் வளரச்சியும் காண்பீர்கள். தொழில் சார்ந்த முடிவுகளை தைரியமாக ஏடுப்பீர்கள். உங்களின் முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும். புதிய முதலீடுகளை எடுப்பீர்கள். அவை உங்கள் எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும். அதிர்ஷ்டம் மூலம் பொருளாதார  செழிப்பு கிட்டும். பொருளாதார நிலை வரவேற்கத்தக்கதாக இருக்கும். உங்கள் தொழில் சார்ந்த கனவுகள் நனவாகும். உங்களின் புதுமையான கருத்துகள் மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் தனிப்பட்ட படைப்பிற்கான காப்புரிமையை நீங்கள் பெறுவீர்கள். புதிய தொழில் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் வருமானம் பெறுவீர்கள்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை

ஆரோக்கியம் :

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதற்கு முன் நீங்கள் அனுபவித்து வந்த உடல் உபாதைகளில் இருந்து மீள்வீர்கள். இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் சிறிது கவலை அளிக்கும். என்றாலும் அவர்களின் சுறுசுறுப்பான அணுகுமுறை மூலம் அவர்கள் இந்த சவால்களை எதிர்கொள்வார்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அது ஒரு கட்டுக்குள் இருக்கும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

மாணவர்களுக்கு இந்த மாதம் சவாலான நேரமாக இருக்கும். என்றாலும் இதனை மாணவர்கள் தங்கள் விடா முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் எளிதில் சமாளிப்பார்கள். முன்னேற்றம் காண்பார்கள். இந்த முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  மாணவர்கள் கூடுதல் நேரம் எடுத்து படிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு செயல்படுவதன் மூலம் இந்த மாதம் முழவதும் வெற்றி காணலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடங்களை கற்றுக் கொள்வதற்கும் வேலை வாய்ப்பை பெறுவதற்கும் வாய்ப்புகள் கிட்டலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : ஐயப்பன் பூஜை

சுப தேதிகள் : 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 21, 22, 23, 24 & 25.

அசுப தேதிகள் : 1, 2, 3, 16, 17, 18, 26, 27, 28, & 29.