ஹோரை :
இதனை ஓரை என்றும் கூறுவார்கள். இந்த ஓரை என்ற வார்த்தையில் இருந்து தான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாகக் கூறுவார்கள். ஓரை அல்லது ஹோரை என்றால் ஆதிக்கம் என்று பொருள். ஹோரை என்பது ஒருமணி நேரம்.ஒரு நாளின் சூரிய உதயம் தொடங்கி குறிப்பிட்ட ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும். அதாவது அந்த குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தின் அதிபதியாக இருப்பார்கள்.
ஹோரைகளின் பெயர்கள்:
நவகிரகங்கள் மொத்தம் ஒன்பது. இதில் ராகு மற்றும் கேது சாயா கிரகங்கள். மற்ற ஏழு கிரகங்கள் தங்கள் கதிர்வீச்சை செலுத்தி ஆதிக்கம் செலுத்துகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், மற்றும் சனி என ஏழு கிரகங்கள் ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர் வீச்சை செலுத்துகின்றன.
ஹோரைகளின் வரிசைகள்:
கிழமைகளின் வரிசைப்படி ஹோரை வரிசைகள் அமைவதில்லை சூரியன், சுக்கிரன் புதன் சந்திரன், சனி, குரு மற்றும் செவ்வாய் என்ற அடிப்படையில் வரிசைக் கிரமாக வரும்.
ஹோரையை நினைவில் கொள்வது எப்படி:
ஹோரை வரிசை ஒரு நாள் விட்டு பின்னால் வரும் கிழமைக்குரிய கிரகம் வரும். உதாரணமாக “சூரியன்” என்பது ஞாயிற்றுக்கிழமை அதிபதி. ஒரு நாள் பின்னால் சனிக்கிழமை. எனவே சனியை விடுத்து “சுக்கிரன்”. அதே போல வியாழன்(குரு) விட்டு “புதன்”. அதன் பிறகு செவ்வாயை விடுத்து திங்கள் (“சந்திரன்”) ஞாயிற்றுக்கிழமை (சூரியன்) விடுத்து “சனி”, அதன் பிறகு சுக்கிரனை விடுத்து “குரு” பிறகு புதனை விடுத்து “செவ்வாய்” என நினைவில் கொள்ளலாம்.
சுப ஹோரைகள் மற்றும் அசுப ஹோரைகள் :
ஹோரைகளில் சூரியன் செவ்வாய், சனி ஆகியவை அசுப ஹோரைகளாகவும். புதன், குரு மற்றும் சுக்கிரன் ஆகியவை சுப ஹோரைகளாகவும் கருதப்படுகிறது. அசுப ஹோரைகளில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஹோரை எப்படி பார்க்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட கிழமையில் சூரிய உதயத்தின் போது அந்த கிழமையின் அதிபதி கிரகத்தினுடைய ஹோரையே முதலாவதாக ஆரம்பிக்கிறது. உதாரணமாக புதன் கிழமை காலை சூரிய உதயத்தின் போது சூரியன் உதயமாகி ஒரு மணி நேரம் வரையில் புதன் ஹோரை நடைபெறும். அதை அடுத்து மற்ற ஓரைகள் தொடர்ந்து நடைபெறும். அதாவது சந்திரன், சனி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன் என வரும்.
ஹோரை எப்படி கணக்கிட வேண்டும்
ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்ளப்படும். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும். ஹோரை கணக்கிடும் போது அன்றைய தினத்தின் சரியான சூரிய உதயநேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹோரையும் தோஷமும் :
எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.
எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?
சூரிய ஹோரை : வேலைக்கு முயற்சி செய்ய, தந்தையுடன் ஆலோசனை நடத்த, வேலையைப் பற்றி கவனிக்க, அதிகாரிகளை சந்திக்க, பெரியோர்களின் ஆதாரவு பெற, மருந்து உண்பதற்கு , சொத்து உயில் எழுதி வைக்க, அரசு உதவி பெற, பதவி ஏற்க, வழக்கு தொடர்பான விஷயங்கள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காண உகந்தது. புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.
சந்திர ஹோரை:
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் பிரயாணம், பாஸ்போர்ட் வாங்குதல் பெண்பார்த்தல் .திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், வெள்ளி முத்து ஆபரணங்கள் அணிய, பசு கன்று வாங்க, வியாபாரம் செய்ய, சங்கீதம் போன்ற கலைகள் பயில நல்லது. பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்கள் ஜெயமாகும். கல்வி புகட்ட நலம். புது வீடு கட்டலாகாது.
செவ்வாய் ஹோரை:
மருந்துண்ண, அடுப்பு கட்ட, அடுப்பு பயன்படுத்த, அணை கட்ட, போர்க்கருவிகள், கூரிய ஆயுதங்கள் தயாரிக்க, போர் தொடங்க, கருத்தை மாற்றிப் பேச, பூமி சம்பந்தமான விவகாரங்களைப் பேச, நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், போன்றவற்றிற்கு நல்லது. சூளைக்கு தீ மூட்ட நெருப்பு வேலை பிற அழிவு வேலைகளுக்கு உகந்தது. கடன் தீர்க்க உகந்தது. மௌனம் நல்லது சுப காரியங்களை தவிர்க்க வேண்டும்.
புதன் ஹோரை:
கடித வேலை, தந்தி அனுப்ப, விலை பேச, மனு போட, புதிய கணக்கு ஆரம்பிக்க, வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட, பரீட்சை எழுத போட்டித் தேர்வு எழுத போட்டிப் பந்தயங்களில் கலந்து கொள்ள உகந்தது. தரகு வேலைகளை செய்யலாம். சுப காரியங்கள் செய்யலாம். பெண் பார்க்க, பேச ஆகாது. நிலம் வாங்கலாகாது.
குரு ஹோரை:
பெரிய மனிதர்களை சந்திக்க, பொருள் உதவி பெற, முதலீடு வைக்க, சேமிப்பு நிதியில் பணம் வைக்க. வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.குரு உபதேசம் பெற சிறந்தது. இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.
சுக்கிர ஹோரை:
பெண்களை நேசிக்க, சந்திக்க, ஆபரணம் அணிய, வாகனம். பசு, கன்று வாங்க மற்றும் அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம். வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது. குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது. அரங்கேற்றத்திற்கு உகந்தது. .
சனி ஹோரை :
நிலம் உழ, எரு போட, இரும்பு சாமான்கள் வாங்க இயந்திர தொழில் ஆரம்பிக்க கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.
எந்த கிழமையில் எந்த ஹோரையை தவிர்க்க வேண்டும்:
ஞாயிற்றுக் கிழமை: சுக்கிரன், சனி ஹோரைகள் பலன் அளிக்காது
திங்கட்கிழமை : சனி ஹோரைகள் பலன் அளிக்காது
செவ்வாய்கிழமை : புதன், சனி ஹோரைகள் பலன் அளிக்காது
புதன் கிழமை : குரு சந்திர ஹோரைகள் பலன் அளிக்காது
வியாழக்கிழமை: புதன்.சுக்கிரன் ஹோரைகள் பலன் அளிக்காது
வெள்ளிக்கிழமை : குரு சூரிய ஹோரைகள் பலன் அளிக்காது
சனிக்கிழமை : சூரியன், சந்திரன், சனி ஹோரைகள் பலன் அளிக்காது
எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?
மேஷம் :
சூரியன் – செவ்வாய் – குரு – சுக்கிர ஹோரைகள் மேஷ ராசிக்கார்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
ரிஷபம் :
சந்திரன் – புதன் – குரு – சுக்கிரன் ஹோரைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும்.
மிதுனம் :
சந்திரன் – புதன் – குரு – சுக்கிரன் ஹோரைகள் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்.
கடகம் :
சந்திரன் – குரு – சுக்கிரன் ஆகிய ஹோரைகள் கடக ராசிக்காரர்களுக்கு மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும்.
சிம்மம் :
சூரியன் – சந்திரன் – குரு ஹோரைகள் சிம்ம ராசிக்கார்க்ளுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
கன்னி :
சந்திரன் – செவ்வாய் – புதன் – குரு – சுக்கிர ஹோரைகள் கன்னி ராசிக்கார்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
துலாம் :
செவ்வாய் – புதன் – குரு – சுக்கிர ஹோரைகள் துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்
சந்திரன் – குரு – சுக்கிரன் ஆகிய ஹோரைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
தனுசு :
சூரியன் – செவ்வாய் – குரு – சுக்கிர ஹோரைகள் தனுசு ராசிக்கார்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்..
மகரம் :
சந்திரன் – செவ்வாய் – புதன் – சுக்கிர ஹோரைகள் மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
கும்பம் :
சந்திரன் – செவ்வாய் – புதன் – சுக்கிர ஹோரைகள் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
மீனம் :
சூரியன் – செவ்வாய் – குரு – சுக்கிர ஹோரைகள் மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.
ஹோரைகளுக்கான நேர அட்டவணை
ஞாயிற்றுக்கிழமை 6 – 7 AM சூரியன்
ஞாயிற்றுக்கிழமை 7 – 8 AM சுக்கிரன்
ஞாயிற்றுக்கிழமை 8 – 9 AM புதன்
ஞாயிற்றுக்கிழமை 9 – 10 AM சந்திரன்
ஞாயிற்றுக்கிழமை 10 – 11 AM சனி
ஞாயிற்றுக்கிழமை 11 – 12 AM குரு
ஞாயிற்றுக்கிழமை 12 – 1 PM செவ்வாய்
ஞாயிற்றுக்கிழமை 1 – 2 PM சூரியன்
ஞாயிற்றுக்கிழமை 2 – 3 PM சுக்கிரன்
ஞாயிற்றுக்கிழமை 3 – 4 PM புதன்
ஞாயிற்றுக்கிழமை 4 – 5 PM சந்திரன்
ஞாயிற்றுக்கிழமை 5 – 6 PM சனி
ஞாயிற்றுக்கிழமை 6 – 7 PM குரு
ஞாயிற்றுக்கிழமை 7 – 8 PM செவ்வாய்
ஞாயிற்றுக்கிழமை 8 – 9 PM சூரியன்
ஞாயிற்றுக்கிழமை 9 – 10 PM சுக்கிரன்
ஞாயிற்றுக்கிழமை 10 – 11 PM புதன்கிழமை
ஞாயிற்றுக்கிழமை 11 – 12 PM சந்திரன்
ஞாயிற்றுக்கிழமை 12 – 1 AM சனி
ஞாயிற்றுக்கிழமை 1 – 2 AM குரு
ஞாயிற்றுக்கிழமை 2 – 3 AM செவ்வாய்
ஞாயிற்றுக்கிழமை 3 – 4 AM சூரியன்
ஞாயிற்றுக்கிழமை 4 – 5 AM சுக்கிரன்
ஞாயிற்றுக்கிழமை 5 – 6 AM புதன்
திங்கட்கிழமை 6 – 7 AM சந்திரன்
திங்கட்கிழமை 7 – 8 AM சனி
திங்கட்கிழமை 8 – 9 AM குரு
திங்கட்கிழமை 9 – 10 AM செவ்வாய்
திங்கட்கிழமை 10 – 11 AM சூரியன்
திங்கட்கிழமை 11 – 12 AM சுக்கிரன்
திங்கட்கிழமை 12 – 1 PM புதன்
திங்கட்கிழமை 1 – 2 PM சந்திரன்
திங்கட்கிழமை 2 – 3 PM சனி
திங்கட்கிழமை 3 – 4 PM குரு
திங்கட்கிழமை 4 – 5 PM செவ்வாய்
திங்கட்கிழமை 5 – 6 PM சூரியன்
திங்கட்கிழமை 6 – 7 PM சுக்கிரன்
திங்கட்கிழமை 7 – 8 PM புதன்
திங்கட்கிழமை 8 – 9 PM சந்திரன்
திங்கட்கிழமை 9 – 10 PM சனி
திங்கட்கிழமை 10 – 11 PM குரு
திங்கட்கிழமை 11 – 12 PM செவ்வாய்
திங்கட்கிழமை 12 – 1 AM சூரியன்
திங்கட்கிழமை 1 – 2 AM சுக்கிரன்
திங்கட்கிழமை 2 – 3 AM புதன்
திங்கட்கிழமை 3 – 4 AM சந்திரன்
திங்கட்கிழமை 4 – 5 AM சனி
திங்கட்கிழமை 5 – 6 AM குரு
செவ்வாய்கிழமை 6 – 7 AM செவ்வாய்
செவ்வாய்கிழமை 7 – 8 AM சூரியன்
செவ்வாய்கிழமை 8 – 9 AM சுக்கிரன்
செவ்வாய்கிழமை 9 – 10 AM புதன்
செவ்வாய்கிழமை 10 – 11 AM சந்திரன்
செவ்வாய்கிழமை 11 – 12 AM சனி
செவ்வாய்கிழமை 12 – 1 PM குரு
செவ்வாய்கிழமை 1 – 2 PM செவ்வாய்
செவ்வாய்கிழமை 2 – 3 PM சூரியன்
செவ்வாய்கிழமை 3 – 4 PM சுக்கிரன்
செவ்வாய்கிழமை 4 – 5 PM புதன்
செவ்வாய்கிழமை 5 – 6 PM சந்திரன்
செவ்வாய்கிழமை 6 – 7 PM சனி
செவ்வாய்கிழமை 7 – 8 PM குரு
செவ்வாய்கிழமை 8 – 9 PM செவ்வாய்
செவ்வாய்கிழமை 9 – 10 PM சூரியன்
செவ்வாய்கிழமை 10 – 11 PM சுக்கிரன்
செவ்வாய்கிழமை 11 – 12 PM புதன்
செவ்வாய்கிழமை 12 – 1 AM சந்திரன்
செவ்வாய்கிழமை 1 – 2 AM சனி
செவ்வாய்கிழமை 2 – 3 AM குரு
செவ்வாய்கிழமை 3 – 4 AM செவ்வாய்
செவ்வாய்கிழமை 4 – 5 AM சூரியன்
செவ்வாய்கிழமை 5 – 6 AM சுக்கிரன்
புதன்கிழமை 6 – 7 AM புதன்
புதன்கிழமை 7 – 8 AM சந்திரன்
புதன்கிழமை 8 – 9 AM சனி
புதன்கிழமை 9 – 10 AM குரு
புதன்கிழமை 10 – 11 AM செவ்வாய்
புதன்கிழமை 11 – 12 AM சூரியன்
புதன்கிழமை 12 – 1 PM சுக்கிரன்
புதன்கிழமை 1 – 2 PM புதன்
புதன்கிழமை 2 – 3 PM சந்திரன்
புதன்கிழமை 3 – 4 PM சனி
புதன்கிழமை 4 – 5 PM குரு
புதன்கிழமை 5 – 6 PM செவ்வாய்
புதன்கிழமை 6 – 7 PM சூரியன்
புதன்கிழமை 7 – 8 PM சுக்கிரன்
புதன்கிழமை 8 – 9 PM புதன்
புதன்கிழமை 9 – 10 PM சந்திரன்
புதன்கிழமை 10 – 11 PM சனி
புதன்கிழமை 11 – 12 PM குரு
புதன்கிழமை 12 – 1 AM செவ்வாய்
புதன்கிழமை 1 – 2 AM சூரியன்
புதன்கிழமை 2 – 3 AM சுக்கிரன்
புதன்கிழமை 3 – 4 AM புதன்
புதன்கிழமை 4 – 5 AM சந்திரன்
புதன்கிழமை 5 – 6 AM சனி
வியாழக்கிழமை 6 – 7 AM குரு
வியாழக்கிழமை 7 – 8 AM செவ்வாய்
வியாழக்கிழமை 8 – 9 AM சூரியன்
வியாழக்கிழமை 9 – 10 AM சுக்கிரன்
வியாழக்கிழமை 10 – 11 AM புதன்
வியாழக்கிழமை 11 – 12 AM சந்திரன்
வியாழக்கிழமை 12 – 1 PM சனி
வியாழக்கிழமை 1 – 2 PM குரு
வியாழக்கிழமை 2 – 3 PM செவ்வாய்
வியாழக்கிழமை 3 – 4 PM சூரியன்
வியாழக்கிழமை 4 – 5 PM சுக்கிரன்
வியாழக்கிழமை 5 – 6 PM புதன்
வியாழக்கிழமை 6 – 7 PM சந்திரன்
வியாழக்கிழமை 7 – 8 PM சனி
வியாழக்கிழமை 8 – 9 PM குரு
வியாழக்கிழமை 9 – 10 PM செவ்வாய்
வியாழக்கிழமை 10 – 11 PM சூரியன்
வியாழக்கிழமை 11 – 12 PM சுக்கிரன்
வியாழக்கிழமை 12 – 1 AM புதன்
வியாழக்கிழமை 1 – 2 AM சந்திரன்
வியாழக்கிழமை 2 – 3 AM சனி
வியாழக்கிழமை 3 – 4 AM குரு
வியாழக்கிழமை 4 – 5 AM செவ்வாய்
வியாழக்கிழமை 5 – 6 AM சூரியன்
வெள்ளிக்கிழமை 6 – 7 AM சுக்கிரன்
வெள்ளிக்கிழமை 7 – 8 AM புதன்
வெள்ளிக்கிழமை 8 – 9 AM சந்திரன்
வெள்ளிக்கிழமை 9 – 10 AM சனி
வெள்ளிக்கிழமை 10 – 11 AM குரு
வெள்ளிக்கிழமை 11 – 12 AM செவ்வாய்
வெள்ளிக்கிழமை 12 – 1 PM சூரியன்
வெள்ளிக்கிழமை 1 – 2 PM சுக்கிரன்
வெள்ளிக்கிழமை 2 – 3 PM புதன்
வெள்ளிக்கிழமை 3 – 4 PM சந்திரன்
வெள்ளிக்கிழமை 4 – 5 PM சனி
வெள்ளிக்கிழமை 5 – 6 PM குரு
வெள்ளிக்கிழமை 6 – 7 PM செவ்வாய்
வெள்ளிக்கிழமை 7 – 8 PM சூரியன்
வெள்ளிக்கிழமை 8 – 9 PM சுக்கிரன்
வெள்ளிக்கிழமை 9 – 10 PM புதன்
வெள்ளிக்கிழமை 10 – 11 PM சந்திரன்
வெள்ளிக்கிழமை 11 – 12 PM சனி
வெள்ளிக்கிழமை 12 – 1 AM குரு
வெள்ளிக்கிழமை 1 – 2 AM செவ்வாய்
வெள்ளிக்கிழமை 2 – 3 AM சூரியன்
வெள்ளிக்கிழமை 3 – 4 AM சுக்கிரன்
வெள்ளிக்கிழமை 4 – 5 AM புதன்
வெள்ளிக்கிழமை 5 – 6 AM சந்திரன்
சனிக்கிழமை 6 – 7 AM சனி
சனிக்கிழமை 7 – 8 AM குரு
சனிக்கிழமை 8 – 9 AM செவ்வாய்
சனிக்கிழமை 9 – 10 AM சூரியன்
சனிக்கிழமை 10 – 11 AM சுக்கிரன்
சனிக்கிழமை 11 – 12 AM புதன்
சனிக்கிழமை 12 – 1 PM சந்திரன்
சனிக்கிழமை 1 – 2 PM சனி
சனிக்கிழமை 2 – 3 PM குரு
சனிக்கிழமை 3 – 4 PM செவ்வாய்
சனிக்கிழமை 4 – 5 PM சூரியன்
சனிக்கிழமை 5 – 6 PM சுக்கிரன்
சனிக்கிழமை 6 – 7 PM புதன்
சனிக்கிழமை 7 – 8 PM சந்திரன்
சனிக்கிழமை 8 – 9 PM சனி
சனிக்கிழமை 9 – 10 PM குரு
சனிக்கிழமை 10 – 11 PM செவ்வாய்
சனிக்கிழமை 11 – 12 PM சூரியன்
சனிக்கிழமை 12 – 1 AM சுக்கிரன்
சனிக்கிழமை 1 – 2 AM புதன்
சனிக்கிழமை 2 – 3 AM சந்திரன்
சனிக்கிழமை 3 – 4 AM சனி
சனிக்கிழமை 4 – 5 AM குரு
சனிக்கிழமை 5 – 6 AM செவ்வாய்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025