Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
ஆன்மீகம் என்றால் என்ன? | what is aanmeegam
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆன்மீகம் என்றால் என்ன?

Posted DateNovember 8, 2023

மனிதராகப் பிறந்தவர்கள் மனதில் இந்த உலக வாழ்க்கையில் இரண்டு விதமான ஈர்ப்புகள் இருக்கும். ஒன்று லௌகீகம் மற்றொன்று ஆன்மிகம்.  இவற்றுள் ஆன்மிகம் என்பது நமது அகம் சார்ந்த விஷயம். ஆன்மாவை அறிந்து கொள்ளுதல் எனலாம். இறைவனை அடைவதற்கான படிக்கல்லாக ஆன்மீகத்தைக் கொள்ளலாம். என்றாலும் ஆன்மிகம் என்பது கோவிலுக்கு செல்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, விபூதி, குங்குமும், சந்தனம் போன்ற ஆன்மீக சின்னங்களை உடலில் தரிப்பது மட்டுமல்ல. இவை யாவும் ஆன்மீகத்தில் அடங்கும் என்றாலும் இவை மட்டுமே ஆன்மிகம் என்று கொள்ளுதல் கூடாது.

ஆன்மீகம் என்றால் என்ன

ஆன்மீகம் என்பது இறைவழிபாடு மற்றும் இறை நம்பிக்கை காரணமாக நாம் நெற்றியில் பட்டையும் கழுத்தில் கொட்டையும் அணிந்து கொள்வதோ, ஆலயம் சென்று வழிபடுவதோ அல்லது துறவறம் பூனுவதோ மட்டும் அல்ல. கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒழுக்க நெறிகளுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதும், பிறரை மதிப்பதும், நல்ல எண்ணங்களுடன் வாழ்வதும் இப்படி ஓரு தனிப்பட்ட மனிதர் வாழ்வில் தன்னை நெறிபடுத்தி  வாழ்வதும்  ஒரு வகை ஆன்மீகம்  என்று கூறலாம். நமது வாழ்க்கையை செம்மை படுத்திக் கொள்ளும் வகையில் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வது. இதற்கு உறு துணையாக இருக்க வேண்டித் தான் நாம் இறைவைனின் துணையை நாடுகிறோம்..   

ஆன்மீக உணர்வு மனதில் ஏற்படஎன்ன செய்ய வேண்டும்:

ஆன்மீகம் என்பது ஒரு வகையில் தூய்மையான வைராக்கியமான வாழ்க்கை என்று கூறலாம். அதற்காக இன்று வளர்ச்சி கண்டு கொண்டிருக்கும் விஞ்ஞானத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. நல்ல பண்புகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதம் கூறும் சாஸ்திரங்களைத் தான் நமது முன்னோர்கள் நம்மை பின்பற்ற கூறிச் சென்றுள்ளார்கள். கால நேரம் பார்த்து நம் கடமைகளை செய்ய வேண்டும் என்பதும் அதில் ஒன்று. நல்ல நேரம் பார்த்து இறைவனை வேண்டி செய்யும் காரியங்கள் வெற்றியை அளிக்கும் என்பதை அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். மனம், வாக்கு செயல் இவை அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். மூத்தோர் சொல் மதிக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், அளவுக்கு மீறி ஆசைப்படாமல் இருத்தல், பிறரைக் குறை கூறாமல் இருத்தல் போன்ற குணங்களை பின்பற்றி நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்வது கூட ஒரு வகை ஆன்மிகம் தான்.  

ஆன்மீகமும் அறிவியலும் :

அறிவியல் விதிகளை நம்பும் இன்றைய தலை முறையினர் நமது  ஆன்மீக விதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை என்றே கூற வேண்டும். ஆலயம் செல்வதை நமது முன்னோர்கள் வலியுறுத்தி இருந்தார்கள். இளம் வயதில் இருந்தே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். எதற்கு ஆலயம் செல்ல வேண்டும்? கோயில்களில் மூல விக்ரகம் அமைந்துள்ள கருவறை, ஒலி அலைகளை வெளிப்படுத்துகின்றன. மூல விக்கிரகத்திற்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள், மந்திர உச்சரிப்புகள் விக்ரகத்தில் பட்டு
அதிர்வடைகின்றன. இது பக்தர்களின் உடல் மற்றும் , உள்ளத்தில் அமைதியை தருகிறது. மேலும்  அபிஷேகத்தின் போது எதிர்
மின்னோட்டமுடைய காற்றும், ஈரப்பதமுள்ள காற்றும் வெளிவருகின்றன. இது இன்றைய விஞ்ஞானம் கூறும் உயிர்வாழ தேவைப்படும் மின்னலைகளாகும். கோவிலில் து’ளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இதில் அதிக மின்னூட்டம் மற்றும் பலவித நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.  மாவிலையும்  வேப்பிலையும் இதே தன்மையைக் கொண்டவை தான். அது போல எலுமிச்சையும். மாவிலை தோரணம் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கின்றது. நீரினை துாய்மைப்படுத்துகின்றது. அரச மரக் காற்று பெண்களின் கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்கிறது. இதனால் அந்தக் காலத்தில் அரச மரத்தை சுற்றி வரச் செய்தார்கள். இது போல எத்தனையோ கூறிச் சென்றுள்ளார்கள். பொதுவாக நாம் கூற வருவது என்ன வென்றால் நமது உடலையும் மனதையும் தூய்மை செய்து கொள்ள நமது முன்னோர் வகுத்த வழிகளை இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்றுவதன் மூலம் செழிப்பான வாழ்வை வாழலாம்.

முடிவுரை:

இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.