நமது வாழ்க்கை தடையின்றி ஓட அவசியமாக தேவைப்படுவது பணம் என்றால் அது மிகை ஆகாது. அந்தப் பணம் நம் கையில் எப்பொழுதும் புழங்க வேண்டும் என்று தான் நாம் ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு தடையில்லாத வருமானம் வேண்டும். அப்படி தடையில்லாத வருமானம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. பலருக்கும் வருமானத்தில் சில பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது இந்த தடைகள் நீங்க நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இது மிகவும் எளிய பரிகாரம் தான். அதிக காசும் செலவில்லாத பரிகாரம் என்று கூட கூறாலாம். அந்த பரிகாரம் எறும்புகளுக்கு உணவு அளிப்பது தான். அதில் சில சூட்சுமங்களும் உள்ளன. அதனை அறிந்து செயல்படுவதன் மூலம் உங்கள் வருமானத் தடை எளிதில் நீங்கி விடும்.
இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஆன்மா தான். எறும்பும் ஒரு ஆன்மா தான். அந்த ஆன்மாவிற்கு நாம் உணவளிப்பதன் மூலம் நமது வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கி விடும். உயிரினங்களில் மூன்று உயிரினங்களுக்கு உணவு அளிப்பது நமது பாவத்தை நீக்கும் என்பார்கள். அவை, முறையே, காகம், பாம்பு மற்றும் எறும்பு ஆகும்.
எறும்பிற்கு வைக்கும் உணவிற்கும் நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். எறும்பு மிகவும் சுறுசுறுப்பான உயிரினம். அது மட்டும் இன்றி இவை தனது எதிர்காலத்திற்கு உணவை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்ட உயிரினம் ஆகும். எனவே அதற்கு நாம் தினமும் உணவளித்தால் அது ஆறு மாத காலத்திற்கு தனது உணவை சேமித்து வைக்கும். மற்றும் அந்த ஆன்மாவின் வாழ்த்து உங்களுக்கு புண்ணியத்தைத் தேடித் தரும்.
எந்த எறும்பாக இருந்தாலும் அதற்கு உணவளிப்பது சாலச் சிறந்தது என்றாலும். இந்தப் பரிகாரத்தை கோவிலில் இருக்கும் எறும்புக்கு செய்வது உத்தமம். காரணம் கோவிலில் இருக்கும் எறும்புகளுக்கு கிரக ஆற்றல் இருக்கும் என்று கூறுவார்கள். அதிலும் முக்கியமாக குல தெய்வக் கோவிலில் செய்வது மிகவும் உத்தமம். அந்தக் கோவிலுக்கு அடிக்கடி செல்ல இயலாவிடில் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று உணவளிக்கலாம்.
பச்சரசி மற்றும் கரும்பு சர்க்கரை இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை மெலிதான ரவையாக உடைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரையை பொடி செய்தோ அல்லது அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். அதை குல தெய்வம் கோவிலுக்கோ அல்லது அருகாமையில் இருக்கும் கோவிலுக்கோ எடுத்துச் சென்று நைவேத்தியம் செய்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அதனை கோவிலில் இருக்கும் எறும்பிற்கு உணவாகப் போடுங்கள். அவ்வாறு போடும் போது அதற்கு எந்த இடையூறும் இல்லாத இடமாக பார்த்துப் போடுங்கள். அதாவது மனிதர்களின் கால் படாத இடத்தில் போடுங்கள். ஒரு ஓரமாக அல்லது மரத்திற்கு அடியில் என்று போடுவதன் மூலம் அவற்றிற்கு எந்த சேதமும் இன்றி உணவு கிடைக்கும். கோவிலில் இருக்கும் நந்தவனம் அல்லது தென்னை மரம் போன்ற இடத்தில் போடலாம். அவ்வாறு போடும் போது உங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி எடுத்து போட வேண்டும். இது அந்த உயிரினத்திற்கு நாம் தரும் மரியாதை ஆகும்.
இவ்வாறு தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் கடன் பிரச்சினைகள் யாவும் தீரும். உங்கள் வருமானம் பெருகுவதை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொண்டு உங்கள் பணப் பிரச்சினைகள், வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கி வளமுடன் வாழுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025