1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (சிவகங்கை மாவட்டம்)
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தமான ஒரு பண்டைய விநாயகர் கோவில் ஆகும். இந்த கோவில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.இது பழமையான குகை ஆலயம் கற்பக விநாயகர் – ஏகபத கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். பிரதான தெய்வங்களாக கற்பக விநாயகர், வள்ளி-தெய்வானை உடன் முருகன், சிவபெருமான் மற்றும் பார்வதி (வள்ளி வினாயகர் குகைக்கு அருகில்) பண்டைய குகைகளில் ஜைனத் திருத்துறவுகள் இருந்த சுவடுகளும் காணலாம்.திருமணம், கல்வி, தொழில், வியாபாரம் ஆகியவற்றில் முன்னேற்றத்திற்காக பெரும்பாலும் வழிபடுகின்றனர்.குழந்தைப் பேறு வேண்டி பெண்கள் அதிகம் வழிபடுகிறார்கள்.
2. தஞ்சாவூர் ஸ்ரீ ஸ்வாமி மலை விநாயகர்
பெரிய கோயிலின் அருகே அமைந்துள்ளது. இங்கு விநாயகர் அழகிய மலையோடு இணைந்த நிலையில் இருக்கிறார். ராஜராஜ சோழன் காலத்து சிறப்புமிக்க ஆலயம். மாணவர்கள், அறிவு வேண்டுவோர் அதிகம் தரிசிப்பர். சதுர்த்தி தினத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும்.
3. மதுரை மாங்குளம் பஞ்சமுக விநாயகர்
ஐந்து முகங்களுடன் காணப்படும் அரிய வடிவம்.ஒவ்வொரு முகமும் தனித்த தத்துவத்தை குறிக்கிறது. கல்வி, ஆரோக்கியம், குடும்ப நலன் வேண்டிச் செல்பவர்கள் அதிகம். விநாயகர் சதுர்த்தியில் பால், தேன் அபிஷேகம் பிரசித்தம்.பண்டைய காலத்திலிருந்து வழிபாடு நடைபெறுகிறது.
4. முக்குறுணி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்கு அருகில் 8 அடி உயரத்தில் அமைந்துள்ள முக்குறுணி விநாயகர், தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற விநாயகர்களில் ஒருவர். இந்த விநாயகர் சிலை எட்டு அடி உயரமும், நான்கு கரங்களும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். ஒரு குறுணி என்பது ஆறு படி அரிசி என்பதால், இந்த விநாயகருக்கு முக்குறுணி (18 படி) மாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்படுகிறது. அதனால், இவர் முக்குறுணி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். விக்னங்களை நீக்குவதோடு, அரிய குறைகள், தடைகள் நீங்கி, விரைவில் சாதனை பெற உதவுவார் என நம்பிக்கை.
5. திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
திருச்சிராப்பள்ளி நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை (Rockfort) எனப்படும் பிரபலமான மலைப்பகுதியில் இந்த கோவில் உள்ளது. மலைக்கோட்டையின் உச்சியில் இந்த உச்சிப் பிள்ளையார் ஆலயம் இருக்கிறது. கோவிலுக்கு செல்ல 417 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். சித்தர்கள் வழிபட்ட புண்ணிய ஸ்தலம். கடன் பிரச்சினை நீங்க வேண்டி அனேக பகதர்கள் தரிசிப்பார்கள். விநாயகர் சதுர்த்தியில் ஆயிரக்கணக்கானோர் தரிசிக்கின்றனர்.
6. காஞ்சிபுரம் வல்லக்கோட்டை பிள்ளையார்
வலக்கைத் தும்பிக்கையுடன் காணப்படும் தனித்துவமான விநாயகர்.சோழர் கால சிற்பக்கலைத் தொல்பொருள். கல்வி மற்றும் புத்தி வளம் வேண்டுவோர் அதிகம் வருகிறார்கள். சந்திரதோஷம் நீக்குவதற்கான பரிகாரம் இங்கு செய்யப்படுகிறது. சதுர்த்தி நாளில் சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.
7. கோயம்புத்தூர் ஈச்சனாரி விநாயகர்
5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வைப்பதற்காக மதுரையில் இருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.
8. சிதம்பரம் பஞ்சமுக விநாயகர்
நடராஜர் ஆலயத்தின் பக்கத்தில் அமைந்துள்ளது. நடனம், இசை, கலை துறையினருக்கு சிறப்பான ஸ்தலம்.சதுர்த்தி நாளில் கஜபூஷண அலங்காரம் செய்யப்படுகிறது. சிவபெருமானுடன் தொடர்புடைய கதை உள்ளது. கலை, அறிவு வேண்டுவோர் அதிகம் தரிசிக்கின்றனர்.
9. மணக்குள விநாயகர் கோவில்
பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான விநாயகர் கோயில் மணக்குள விநாயகர் கோயில் ஆகும். இந்து மதக் கருத்துகளின்படி பதினாறு வகையான விநாயகர் வகைகளில், மணக்குள விநாயகர் கோயிலில் உள்ள மூலவர் புவனேஷ்வர் கணபதி வகையைச் சேர்ந்தவர். மிக பழமையான வரலாற்றைக் கொண்ட இக்கோவில் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக உள்ளது.
10. புலியகுளம் (புலியாகுளம்) முந்தி விநாயகர் கோவில் —
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயம் புலியகுளம் மாரியம்மன் கோவிலின் துணை ஆலயமாக அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் விநாயகர் சிலை ஒரே கல்லால் ஆனது. 19 அடி உயரம் மற்றும் 11 அடி அகலமும் கொண்டது.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025