Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
நீங்கள் கேட்கும் வரம் பெற – சிவன் கோவிலுக்கு அளிக்க வேண்டிய இரண்டு பொருட்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நீங்கள் கேட்கும் வரம் கிடைக்க இந்த இரண்டு பொருட்களை சிவன் கோவிலுக்கு வாங்கி அளியுங்கள்.

Posted DateAugust 10, 2025

பிரதோஷம் என்பது மாதந்தோறும் வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் சிவபெருமானை வழிபடும் வழிபாட்டு நாள் ஆகும்.  ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் வரும். இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிரதோஷத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில: தினசரி பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாசப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் (சப்தரிஷி பிரதோஷம்), குரு பிரதோஷம் மற்றும் மகா பிரதோஷம்.

பிரதோஷ வகைகள்:

∙ தினசரி பிரதோஷம்:

ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியன்று வருவது.

∙ பட்சப் பிரதோஷம்:

வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதிகளில் வருவது.

∙ மாசப் பிரதோஷம்:

ஒரு மாதத்திற்கு ஒரு முறை வரும் திரயோதசி திதி.

∙ நட்சத்திரப் பிரதோஷம்:

பிரதோஷ திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை வழிபடுவது.

∙ பூரண பிரதோஷம்:

பிரதோஷ வேளையில் சந்திரனும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் வருவது.

∙ திவ்யப் பிரதோஷம்:

விசேஷ நாட்களில் வருவது.

∙ தீபப் பிரதோஷம்:

தீபங்களை ஏற்றி வழிபடுவது.

∙ அபயப் பிரதோஷம் (சப்தரிஷி பிரதோஷம்):

சப்த ரிஷிகள் சிவபெருமானை வழிபட்ட நாள்.

∙ குரு பிரதோஷம்:

வியாழக்கிழமையில் வரும் பிரதோஷம்.

∙ மகா பிரதோஷம்:

மிகவும் சிறப்பு வாய்ந்த பிரதோஷம்.

 இந்த பிரதோஷ நாட்களில் சிவபெருமானை வழிபட்டால், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். 

நம்முடைய கர்ம வினைகளை நீக்கி அதனால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கக்கூடிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். பாற்கடலைக் கடைந்த பொழுது ஆலகால விஷம் வந்து இந்த பிரபஞ்சத்தையே அழிக்க முற்பட்டது. அதனால் சிவபெருமான் விஷத்தை உருட்டி எடுத்து விழுங்க முற்பட்டார். அன்னை பார்வதி விஷம் உள்ளே இறங்காமல் இருக்க அவரது கழுத்தை அமுக்கிப் பிடித்த காரணத்தினால் அவர் கண்டம் நீல நிறமாக மாறியது. எனவே  அவர் நீல கண்டன் என்று அழைக்கப்பட்டார்.  இந்த உலகத்தையே கஷ்டத்தில் இருந்து காப்பாற்றி நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருந்த அந்த நாள்  தான் பிரதோஷ நாள். இந்த பிரதோஷ நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்களையும் நீக்கி நமக்கு நன்மைகளை வாரி வழங்குவார். அப்படிப்பட்ட பிரதோஷ நாளன்று எந்த பொருட்களை ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

பிரதோஷ நாளில் தொடர்ந்து சிவ பெருமானை வழிபட்டு வர நமது கர்ம வினைகள் யாவும் அகலும். நாம் நினைத்த காரியம் நடக்கும். நாம் மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிட்டும். தேய்பிறை பிரதோஷ வழிபாடு கர்ம வினைகள், கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை நீக்கி வாழ்வில் இருக்கும் தடைகளை தவிடு பொடியாக்கும். வளர்பிறை பிரதோஷ வழிபாடு வளமான நலமான வாழ்வை அளிக்கும். எனவே  பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு அதிக அளவில் பலன்கள் உண்டாகும். காரணம் என்னவென்றால் பிரதோஷ நேரத்தில் நடைபெறக்கூடிய அபிஷேகங்களில் அனைத்து விதமான தேவர்களும் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் அந்த நேரத்தில் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் சிவபெருமானின் அருளோடு அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற முடியும் என்பதால் தான் பிரதோஷ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

பிரதோஷ தினத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு எளிமையான இந்த இரண்டு பொருட்களை வாங்கி சிவபெருமானின் ஆலயத்திற்கு அளித்தோம் என்றால் நாம் கேட்ட வரம் கிடைக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திரும் என்று கூறப்படுகிறது. 

சிவபெருமான் அபிஷேக பிரியர் என்பதால் அவருக்கு அபிஷேகத்திற்காக திரவிய பொடியை நாம் வாங்கி தர வேண்டும். எத்தனையோ பொருட்களை நாம் வாங்கிக் கொடுத்தாலும் இந்த திரவிய பொடியை வாங்கித் தருவதன் மூலம் சிவபெருமான் மனமகிழ்ந்து நாம் கேட்ட வரத்தை தருவார் என்று கூறப்படுகிறது. அதோடு சிவபெருமான் ஆலயம் பிரகாசமாக இருப்பதற்காக ஆலயத்திற்கு தீபம் ஏற்றுவதற்காக எண்ணையும் திரியும் வாங்கி தர வேண்டும்.

எண்ணெய் வாங்கி தர இயலவில்லை என்றாலும் திரியை மட்டுமாவது வாங்கித் தர வேண்டும். பலரும் எண்ணெய் வாங்கி தானம் செய்வார்கள். ஆனால் திரியை வாங்கி தருவது என்பது அந்த அளவிற்கு யாரும் மேற்கொள்ள மாட்டார்கள். அப்படி பலரும் செய்யாத ஒரு தானமாக தான் இந்த திரிதானம் திகழ்கிறது. பஞ்சு திரியை வாங்கி சிவாலயத்திற்கு தீபம் ஏற்றுவதற்காக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் அந்த திரியினால் உருவான தீபம் எப்படி இருளை நீக்கி பிரகாசத்தை தருகிறதோதருகிறதோ அதே போல் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டமும் நீங்கி இன்பம் உண்டாக்கும்.