Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
மாணிக்கம் கற்கள் மற்றும் வகைகள் in Tamil - AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மாணிக்கம் கற்கள்

Posted DateAugust 9, 2024

மாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (RUBY) என்று பெயர். இது சிகப்பாக இருக்கும் இரத்தினங்களில் ஒன்று. இது பூமியில் விளையக் கூடியதாகும். நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ் செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.இது மிகவும் விலை உயர்ந்த கல்லாகும். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.கருஞ்சிவப்பு முதல் பல வர்ணங்களில் இருக்கும். இந்தக் கற்கள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும் ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாக கிடைகிறது. இது வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மை உடையதாக உள்ளது. இதன் பௌதிக அமைப்பு Al2O3  கடினத்தன்மை 9  எண் அடர்த்தி எண் 4.00

மாணிக்கத்தை கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. உயர்தர மாணிக்கங்கள் சாதாரண வெளிச்சத்தில் ஒரு சிகப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது.

நல்ல உடல் நலம், வலிமை, காதல் மற்றும் பாசம், உறுதியான நட்புறவு, அழகு போன்றவற்றின் குறியீடாக மாணிக்கம் உள்ளது. இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. தைரியம் மற்றும் வீரத்தைத் தருகிறது. மன அழுத்தத்தையும் சோகம் மற்றும் புலனின்ப நாட்டங்களையும் குறைக்கிறது. பெயரையும் புகழையும் அதிகப்படுத்துகிறது. சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமையும்.

குற்றமுடைய புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் பிரச்சினைகள் உண்டாகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூட தந்து விடும். மாணிக்கத்தை கையில் அணிந்திருக்கும் போது அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும். கல் மங்கலாக இருந்தால், அணிபவரின் சகோதரருக்கு துன்பம் நேரிடும். இரண்டு வித நிறம் உடைய மாணிக்கம் அணிந்தால் சாதகரையும் தந்தையையும் பாதிக்கும்.

 

யார் மாணிக்கக்கல் அணியலாம்?

சூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.

மாணிக்கக் கல்லின் நன்மைகள்:

மாணிக்கக் கல்லை தங்கத்தில் பதித்து உடலில் படும்படி மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது.  மாணிக்க மணியானது குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை குணப்படுத்துகிறது. மேலும்  காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம். குறைந்த, அதிக இரத்த அழுத்தம், இரத்த நாளங்கள் வெடிப்பு, தண்டுவடக் கோளாறுகள்,  இரத்தசோகை, கண் நோய், உடல் சோர்வு, இருதயக் கோளாறு போன்றவற்றை தீர்க்கும்.

மாணிக்கக் கல்லை அணியும்போது சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது. 3 அல்லது 5 ரத்திகள் எடையில் அணிவது நல்லது.

மாற்றுக் கல் :

ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய நட்சத்திரத்தை பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்ததாகும்.