AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன?

கார்த்திகை மாதம் என்றாலே நமது நினைவில் முதலில் வரக் கூடியது திருவண்ணாமலை தீபம் என்று கூறினால் அது மிகை ஆகாது. கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய முக்கியமான திருநாள் பரணி தீபத் திருநாள் ஆகும். ஒரு சில நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் நமது முன்னோர் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமாவாசைக்கு அடுத்த படியாக முன்னோர் வழிபாட்டிற்கு உகந்ததாக பரணி நட்சத்திரம் கருதப்படுகிறது. நாம் காலம் காலமாக கொண்டாடும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒவ்வொரு புராண வரலாறு உள்ளது. அது போல இப்பொழுது நாம் காணும் பரணி தீபத்திற்கும் ஒரு புராண வரலாறு உள்ளது. இந்த பரணி தீபம் யம தீபம் என்று கூறப்படுகிறது. யம தீபம் என்பது யமனுக்கு ஏற்றப்படும் தீபம் அல்ல. யமனால் கூறப்பட்டு சிவனுக்காக ஏற்றப்படும் தீபம் ஆகும்.

நசிகேதன் வரலாறும் பரணி தீபமும்:

கடோபநிஷதம் என்னும் நூலில் நசிகேதன் என்பவரின் வரலாறு குறிப்பிடப்படுகிறது. நசிகேதனின் தந்தை ஒரு வேள்வியை நடத்துகிறார். அதன் நிறைவுப் பகுதியாக தன்னிடம் உள்ள அனைத்தையும் பிறருக்கு தானமாக அளிக்கிறார். அவர் ஒவ்வொரு பொருளாக தானம் கொடுக்க கொடுக்க, இதை பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன், அனைத்தையும் தானமாக தருகிறீர்களா? என அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.நசிகேதன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதிலளித்து கொண்டே தானம் கொடுத்துக் கொண்டிருந்தார் அவரின் தந்தை. ஒரு கட்டத்தில் கோபமடைந்த நசிகேதன், என்னையும் தானம் கொடுக்க போகிறீர்களா? என்னை யாருக்கு தானம் கொடுக்க போகிறீர்கள்? என கேட்டுள்ளார். அவரின் தந்தையும் கோபமடைந்து, உன்னை எம தர்மனுக்கு தானமாக கொடுக்கிறேன் என கூறி விட்டார்.இதனால் உயிருடன் இருக்கும் போதே எமலோகம் சென்று விட்டான் நசிகேதன்.

எமலோகம் சென்று நசிகேதனுக்கு எமன் மூன்று வரங்களை அளிக்கிறார். நசிகேதன் எமனிடம்  பல கேள்விகளையும் கேட்கிறான். அதில் ஒன்றாக, பூலோகத்தில் இருக்கும் உயிர்கள் எமலோகம் வரும் வழிகள் இருள் நிறைந்ததாக இருக்கும். அதில் தட்டுதடுமாறி எமலோகம் வந்தடையவே அந்த உயிர்கள் பெரும் சிரமப்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அவர்கள் கஷ்டமின்றி எமலோகம் வந்தடையவும், இங்கு வந்த பிறகும் துன்பத்தில் சிக்காமல் வாழ்வதற்கும் ஏதாவது வழி உண்டா ? என கேட்கிறான்.

அதற்கு பதிலளித்த எமன், பல வழிகள் உள்ளது. அதில் ஒரு வழி, யார் ஒருவர் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபடுகிறார்களோ அவர்கள் பூலோகத்தில் மட்டுமல்ல, எமலோகத்திலும் துன்பம் இல்லாமல், ஒளி நிறைந்த வாழ்வை பெறுவார்கள் என்கிறார். இதை பிறகு நசிகேதன் பூமிக்கு திரும்பி உபதேச மொழிகளாக குறிப்பிடுகிறார்.

இந்த பிறவியில் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் ஒளிமயமான வாழ்வை பெறுவதற்காகவும், இவ்வுலக வாழ்க்கை முடிந்த பிறகு மேல் உலகிற்கு செல்லும் வழியிலும், மேல் உலகிற்கு சென்ற பிறகும் இருளில் சிக்கி தவிக்காது, ஒளிமயமாக நாமும் நமது முன்னோர்களும் இருப்பதற்காகவே பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை பரணி தீபம் :

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஐந்து விளக்குகள் ஏற்றி, அவற்றை ஒரே விளக்காக இணைத்து, பிறகு மீண்டும் ஐந்து விளக்குகளாக ஏற்றுவார்கள். இறைவனே பஞ்சபூதங்களாக காட்சி அளிக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவும், இறைவன் ஒருவனே. அவனே எல்லா உயிர்களுக்குள்ளும் நிறைந்திருக்கிறான். எல்லா உயிர்களும் ஜோதி வடிவான இறைவனுக்குள் அடக்கம் என்பதே இதன் அர்த்தம்.

திருவன்னமஅமளி மகா தீபம் :

திருவண்ணாமலை மகாதீபம் என்பது கார்த்திகை அன்று திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றும் விழாவாகும். திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் இது 10-ஆம் நாள் திருவிழா ஆகும். இம்மகாதீபம் இலக்கியங்களில் “சர்வாலய தீபம்”மற்றும் “கார்த்திகை விளக்கீடு” என்றும் அழைக்கபடுகிறது.

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

பஞ்ச பூதங்களும் நமது உடலிலும், வெளியிலும் சரியாக இருந்து நமக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காகவும், சிவ பெருமானின் பஞ்ச தொழில்களை விளக்குவதாலும் 5 தீபங்கள் ஏற்றுகிறோம்.படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும்விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுகிறார்கள் இது இறைவன் ஒளி வடிவாகக் காட்சி அளிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.