இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்களின் முக்கிய கவலையாக இருப்பது அவர்கள் குழந்தைகளின் படிப்பு தான். கல்விச் செல்வம் ஒன்று தான் அழியாத செல்வம். குழந்தை பருவத்தில் மற்றும் மாணவ பருவத்தில் தங்கள் பிள்ளைகள் சுட்டியாக செயல்பட வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம் ஆகும். இதற்காக பெற்றோர்கள் தாங்கள் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை பிள்ளைகள் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று பல தியாகங்களை செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க பல வகையிலும் பாடுபடுகிறார்கள். சமுதாயத்தில் தாங்களும் தங்கள் குழந்தைகளும் மதிப்பு மரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் உயர் கல்வி படித்து அதன் மூலம் பல சாதனைகளை படைக்கும் முயற்சி செய்வார்கள். அதனால் தான் இன்றைய காலத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அவ்வாறு படிக்க வைக்கும் பொழுது குழந்தைகள் நன்றாக படித்துவிட்டால் பிரச்சினையோ கவலையோ இருக்காது. அதற்கு பதிலாக படிப்பில் ஆர்வமில்லாமலோ அல்லது எவ்வளவு படித்தாலும் அது மனதில் தங்காமலோ அப்படியே மனதில் பதிந்தாலும் பரிட்சை எழுதும் பொழுது அவை அனைத்தும் மறந்துவிட்டாலோ அவர்களுக்கு மந்த புத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மந்த புத்தியை நீக்கி புத்தி கூர்மையுடன் செயலாற்றுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குழந்தைகள் நன்கு படிக்க புத்திசாலியாக செயல்பட அவர்களின் சூழ்நிலை சிறப்பாக இருக்க வேண்டும். பெற்றோர்களும் அவர்கள் மீது அக்கறை செலுத்தி அவர்களை கண்காணிக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள் படிக்கும் பொழுது நன்றாக படிப்பார்கள் ஒரு சில குழந்தைகள் படிப்பு என்றாலே ஓடி விடுவார்கள். அத்தகைய குழந்தைகள் சிறந்து விளங்க ஒரு பரிகாரம் :
இது விளக்கு ஏற்றும் பரிகாரம் ஆகும்.இந்த விளக்கை விநாயகருக்கு ஏற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் ஆரம்பித்து செய்ய வேண்டும். இந்த விளக்கை தொடர்ந்து 21 நாட்கள் ஏற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள் தாம்பூலத் தட்டு, வெற்றிலை, இரண்டு அச்சு வெல்லம், பூக்கள், பூத்திரி,மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு அருகம்புல்
இந்த பூஜையை காலையில் செய்ய வேண்டும். விநாயகர் படம் அல்லது விக்கிரகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்யுங்கள். விநாயகர் படம் அல்லது விக்கிரகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் சந்தனப் பொட்டு வைத்து மஞ்சள் குங்குமம் வையுங்கள். தாம்பூலத் தாடடின் மேல் வெற்றிலையை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேல் விக்கிரகத்தை வைத்துக் கொள்ளுங்கள். படமாக இருந்தால் அதன் அருகில் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு பூக்கள் மற்றும் அருகம்புல் சாற்றுங்கள். வெற்றிலை தட்டின் மீது அச்சு வெல்லத்தை வையுங்கள். அச்சு வெல்லத்தின் மேலே குழி போல இருக்கும். அதில் நெய்யில் பத்து நிமிடம் ஊற வைத்த திரியை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு புத்தி கூர்மையுடன் விளங்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு உங்கள் பிள்ளைகளை அந்த விளக்கை ஏற்றச் சொல்லுங்கள். விநாயகருக்கு உகந்த பொருட்கள் அல்லது உலர் பழங்களை நைவேத்தியம் செய்யுங்கள். பிறகு கற்பூர ஆரத்தி எடுங்கள். விநாயகரிடம் புத்தி கூர்மை வேண்டி வணங்கி உங்கள் பிள்ளைகளை தோப்புக்கரணம் போடச் சொல்லுங்கள். குறைந்த பட்சம் பதினோரு தோப்புக்கரணம் போடச் சொல்லுங்கள். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்ய உங்கள் பிள்ளைகளின் புத்தி கூர்மை படிப்படியாக உயர்வதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025