Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
கன்னி மே மாத ராசி பலன் 2024 | May Matha Kanni Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கன்னி மே மாத ராசி பலன் 2024 | May Matha Kanni Rasi Palan 2024

Posted DateApril 17, 2024

கன்னி மே மாத பொதுப்பலன்கள் 2024

கன்னி ராசி அன்பர்களே! இது நாள்  வரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். அதே போல் உடல் உபாதைகளில் இருந்தும் விடுபடலாம். என்றாலும் சிறிய அளவிலான பின்னடைவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் மனம் தத்துவம் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபடலாம். அதிர்ஷ்டமும் யோகமும் உங்கள் மகிழ்ச்சிக்கு கூடுதல் பங்களிக்கும்.  முன்னேற்றத்தையும் கொண்டு வரும்.  இந்த மாதம் நீங்கள் எதிரிகளை எளிதாக வெற்றி கொள்வீர்கள். இந்த மாதம் மூதாதையர் சொத்துக்கள் உங்கள் கைக்கு வரலாம். ஆன்மீக யாத்திரை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்களில் ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பெறலாம். உங்கள்  தந்தையுடன் கருத்து வேறுபாடு வரலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்  அல்லது உத்தியோகம் /  தொழில் செய்யுமிடத்தில்  எதிர்பாலினத்தவருடன் கோபத்தைக் காட்டாலாம். எனவே தேவையற்ற சச்சரவுகள் அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். ரியல் எஸ்டேட் விவகாரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கலாம்.  இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேம்படலாம்.

 காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் நீங்கள் கலப்புப் பலன்களைக் காண்பீர்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். என்றாலும் ராகு  மற்றும் செவ்வாய் கிரக சஞ்சாரம் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாக உங்கள் திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் வரலாம்.  காதலர்களுக்குள் அன்பு அதிகரிக்கும் என்றாலும் சில கருத்து வேறுபாடுகளும் எழும். இதனால் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம்.   இந்த மாதம் நீங்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளலாம்.  இந்த மாத இறுதியில் குடும்பத்தில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையுடன்  வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் கோபத்தை கட்டுபடுத்த வேண்டும்..

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

உங்களின் நிதிநிலை இந்த மாதம் மிகச் சிறப்பாக இருக்கலாம். இந்த மாதம்  அதிர்ஷ்டம் மற்றும் யோகம் நீங்கள் பணம் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கலாம்.  உங்கள் கடன் படிப்படியாகக் குறையலாம். இந்த மாதம் நீங்கள் சொத்துக்களை விற்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  நல்ல விலைக்கு விற்று ஆதாயம் காண்பீர்கள். அதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை மேம்படும். பங்கு சந்தை மற்றும் ஊக வணிகம் மூலம் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் சார்ந்த செலவுகள் இருக்கலாம்.  மேலும் பயணம் காரணமாக செலவுகளை மேற்கொள்வீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்கு வாக்கு அளிக்காதீர்கள். உங்களால் இந்த மாதம் அதனை நிறைவேற்ற இயலாது போகலாம்.  நிதி சார்ந்த ஆவணங்கள் மூலம் சில பிரச்சினைகள் அல்லது நஷ்டம் ஏற்படலாம். கவனம் தேவை.

உங்கள் பொருளாதார நிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரலாம். அலுவல் நிமித்தமான எதிர்பாராத திடீர் பயணங்களை மேற்கொள்ள நேரலாம். உத்தியோகம் செய்யும் இடத்தில் பிறருடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும் பணியிடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். இந்த மாத மத்தியில் உத்தியோகத்தில் இட மாற்றம், பதவி உயர்வு இருக்கலாம். போனஸ் போன்ற பண வரவு இருக்கலாம். புது வேலை  தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கலாம். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஆலோசனை பெற வழிகாட்டிகள் அல்லது நிபுணர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம். அவர்களுடனான சந்திப்பு உங்களுக்கு நன்மை பெற்றுத் தரலாம். உங்களில் ஒரு சிலர்  தொழில் விஷயங்களில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம். தொழில் சம்பந்தமான வெளியூர் மற்றும் தொலைதூரப் பயணங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்தின் முதல் பாதியில் மேலதிகாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் சரியாகி தீரும்.

தொழில் :

நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் தொழிலில் தற்காலிக தடைகளை சந்திக்க நேரலாம்.  வியாபாரத்தில் போராட வேண்டியிருந்தாலும் பண வகையில் லாபம் காண்பீர்கள். இந்த மாதத்தின் நடுப்பகுதியில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் சார்ந்த அரசாங்க விதிமுறைகள் தளர்த்தப்படலாம். மே மாதத்தில் ஒட்டுமொத்த பண வரவு மற்றும் வருவாய் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை மாற்றம் செய்யலாம்.  தொழில் சார்ந்த / புது ஒப்பந்தங்கள் சார்ந்த . ஆவணங்களைக்  கையாளும் போது, ஆவணங்களில் கையொப்பம் இடும் போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிகச் செயல்திறனில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் இருந்தபோதிலும், சந்தையில் உங்களின் போட்டியாளர்களை விட உங்கள் கை ஓங்கி இருக்கலாம்.  வர்த்தகம் மற்றும் ஊக வணிகம்  தொடர்பான விஷயங்களில்  அதிர்ஷ்டத்தின் மூலம் லாபம் மற்றும் ஆதாயங்களைக் காணலாம்.

உத்தியோகம்/ தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை

 ஆரோக்கியம் :

இந்த மாதம் திடீரென்று உங்கள் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் வரலாம். என்றாலும் அதில் இருந்து படிப்படியாக நீங்கள் குணமடையவும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் நீங்கள் தோல் சம்பந்தமான சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். ஞாபக மறதி காரணமாக  நினைவுத் திறனில் குறைபாடுகள் வரலாம். உங்கள் தந்தையின் உடல்நிலையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். உங்களின்  பரபரப்பான வாழ்க்கை காரணமாக, கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இது மன அமைதியின்மையை உருவாக்கலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை

மாணவர்கள் :

சென்ற மாதத்தை விட இந்த மாதம் உங்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இறை அருளால் நீங்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவீர்கள். நுழைவுத் தேர்வுகளில் இந்த மாதத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் போராட்டங்கள் நடந்தாலும் நேர்மறையான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கல்வி சார்ந்த விஷயங்களில் நீங்கள் சந்திக்கும் தடைகள் உங்களை பக்குவப்படுத்தும். ஆசிரியர்கள் / குருக்கள் மற்றும் பெற்றோர்கள் உங்களுக்கு நல்ல ஆலோசனைகள் கூறி  வழிகாட்டுவார்கள். அவர்கள் கூறுவதை தட்டாமல் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கல்வியில் மேன்மை பெறலாம். இந்த மாதத்தில் நீங்கள் விருப்பப்படும் பாடங்களைத் தேர்வு செய்வீர்கள். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 3, 4, 5, 11, 12, 13, 14, 23, 24, 25, 26, 27, 30 & 31.

அசுப தேதிகள் : 6, 7, 8, 15, 16, 17, 18, 19 & 20.