Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
கடகம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Kadagam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கடகம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Kadagam Rasi Palan 2024

கடகம் மே மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கலாம். குறிப்பாக தனம் மற்றும் உறவு விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கலாம். புது முயற்சிகளை மேற்கொள்ள இந்த மாதம் ஏதுவாக இருக்கலாம். குடும்பத்தில் இது வரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சுமுக நல்லிணக்க உறவு காணப்படலாம். இந்த மாதம் நீங்கள் உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கலாம். உங்கள் மனதில் மகிழ்ச்சி இருக்கலாம். உங்கள் ஆரோக்கியமும் சீராக இருக்கலாம். குழந்தைகள் வாழ்விலும் முன்னேற்றம் காணப்படலாம். சொத்து மற்றும் தாய் தொடர்பான விஷயங்கள் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். இந்த மாதம் நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாம்.  புண்ணிய ஸ்தலங்களுக்கு நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளலாம். தந்தையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரலாம். உடன்பிறந்தவர்களுடனான உறவும் வரும் நாட்களில் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கலாம்.

 காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கலாம். இது வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கலாம். புரிந்துணர்வு மேம்படலாம். உறவில் ஒற்றுமை கூடும்.  உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் படிப்படியாக சீராகலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவிலும் ஒற்றுமை காணப்படலாம். காதலர்கள் தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வரலாம். அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் இருக்கும் என்றாலும் பரஸ்பரம் ஒற்றுமை இருக்கும். உறவில் நல்ல பிணைப்பு காணப்படலாம். உங்களின்  சிந்தனை மற்றும் செயல், கூட்டாளருடன் ஒத்திசைவாக இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை :

உங்கள் நிதிநிலை இந்த மாதம் வரவேற்கத்தக்க வகையில் இருக்கலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இந்த மாதம் அதிகமாக இருக்கலாம். உங்களுக்கு பல ஆதாரங்கள் மூலம் வருமானம் கிட்டலாம். இரண்டாவது வருமானம் அல்லது கூடுதல் வருமானம் நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உபரி பணத்தை நீங்கள் சேமிக்கலாம். உங்கள் தந்தை மற்றும் உறவினர்கள் மூலமாகவும் ஆதாயம் உண்டாகலாம். செலவுகள் கட்டுக்குள் இருக்கலாம்.  பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் கிட்டலாம். இந்த மாதம் நீங்கள் ஊக வணிகங்களில் ஈடுபடலாம். வருமான வரவு படிப்படியாக அதிகரிக்கலாம். சொத்துக்களை வாங்கல்/ விற்றல் போன்றவற்றின் மூலம் ஆதாயங்களும் காணப்படலாம். கடக ராசிக்காரர்களின் நிதி மேம்பாட்டில் அதிர்ஷ்டமும் யோகமும்  பெரும் பங்கு வகிக்கலாம். அரசு மற்றும் அதிகாரிகள் மூலமாகவும் இந்த மாதம் லாபம் கிடைக்கலாம். உங்கள் தந்தை மற்றும் உடன் பிறப்புகளின் உடல் நலனுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். தொழிலில் பணத்தை முதலீடு செய்யும் வகையில் செலவுகள் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் / தொழிலில்  மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அந்த மாற்றங்கள் உங்களுக்கு அனுகூலமானதாக இருக்கலாம். நிம்மதியான சூழ்நிலை இருக்கலாம். பதட்டம் மற்றும் அழுத்தம் குறையலாம். உத்தியோகம் / தொழில் மூலம் நல்ல வருமானம் கிட்டலாம். நீங்கள் நல்ல பண வரவை எதிர்பார்க்கலாம். உத்தியோக இடத்தில் சக பணியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படலாம்.  மேலதிகாரி மற்றும் பெண் பணியாளர்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.  அவர்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கலாம். பணியிடத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்கலாம்.  போனஸ் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளும் மே மாதத்தில் நீங்கள் பெறலாம்.  தொழிலில் பெரிய சாதனைகளையும் இலக்குகளையும் அடைய வேண்டிய மாதமிது. பணிச்சுமை குறையலாம். உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேறுவதற்கு இந்த காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்த மாதம் தொழில் நிமித்தமான  பயணங்கள் அதிகமாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், பதவி உயர்வு  மற்றும் அதிகாரம் கூட இருக்கலாம்.

தொழில்:

தொழிலில் வெளிப்புறக் காரணிகள் நேர்மறையாகவும் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் இருக்கலாம். உங்களின் கடந்த கால முயற்சிகள் தற்போது நல்ல பலனை அளிக்கலாம். தொழிலில் ஆச்சரியம் தரும் முன்னேற்றம் இருக்கலாம். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அவர்களின் ஆதரவு மூலம் நீங்கள் லாபமும் ஆதாயமும் கண்டு தொழிலில் உச்சியை அடையலாம். இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து முதலீடுகளும் அதிகரிக்கலாம்.  ஆதாயங்கள் மற்றும் செல்வங்கள் குவியலாம். வருமான வரவு எளிதாகும். இந்த மாதம், எதிர்காலத்தில் ஒரு செழிப்பான வணிகத்திற்கான தளமாக/அடித்தளமாக செயல்படலாம். அரசு மற்றும் அதிகாரிகளிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கலாம். மேற்பார்வையும் தலைமைத்துவமும் வணிகத்தில் மிகவும் தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் மாறலாம். தொழில்துறையில் உள்ள மற்ற தரப்பினரிடமிருந்து நல்ல வணிக சலுகைகள் இருக்கலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் காணும்.  மனைவி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் கடந்த மாதங்களை விட இந்த மாதம் சிறப்பாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு  கால்கள் மற்றும் தசைகளில் பிடிப்புகள் போன்ற சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். உங்களின்  உணவுப் பழக்கத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். முந்தைய உடல்நலப் பின்னடைவுகளிலிருந்து நீங்கள் மீள்வீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் நீங்கள் சிறப்பாகக் கல்வி பயில்வீர்கள்.  தகுதித் தேர்வுகள் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம். உங்களுக்கு விருப்பமான படிப்பை  தேர்வு செய்ய இது ஒரு சிறந்த மாதம்.  மாணவர்களுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தைக் காட்டும் வகையில் சாதகமான மாற்றங்கள் இருக்கலாம். வெளிநாடு சென்று  புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் இந்த மாதத்தில் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1, 7, 8, 9, 10, 18, 19, 20, 21, 22, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 2, 3, 4, 11, 12, 13, 14, 15, 30 & 31.