Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
காசிக்கு போகாமலேயே காசி விஸ்வநாதரை தரிசிக்க அற்புத வாய்ப்பு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

காசிக்கு போகாமலேயே காசி விஸ்வநாதரை தரிசிக்க அற்புத வாய்ப்பு

Posted DateJuly 26, 2024

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, ஜோதிர்லிங்கங்கள் என்று அழைக்கப்படும் பன்னிரண்டு புனிதத் தலங்களில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒன்றாகும். இது இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள விஸ்வநாத் கலியில் வாரணாசி நகரில் அமைந்துள்ளது. வாரணாசி ஒரு காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது, அதாவது “பிரகாசம்” என்று பொருள். ஆண்டு தோறும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு தரிசனம் காண வருகை தருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள புண்ணிய தலங்கள் மற்றும் முக்தி தலங்களில் முதன்மையானதாகவும், புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் இந்த ஸ்தலம் உள்ளது.காசி முக்தித் தலம் என்பதால், பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இத்தலத்திற்கு வந்து புனித கங்கையில் நீராடி  இறைவனை நேரில் தரிசிக்க ஆவல் கொள்கிறார்கள். ஆனால் பல பேருக்கு இந்த ஆசை நிறைவேறுவது இல்லை.

பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் கோவில்களுள் இதவும் ஒன்றாகத் திகழ்கின்றது. மேலும்  இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் தற்போது நிலவும் அதிக வெப்பம் நிறைந்த  சூழ்நிலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து  சிரமப்பட்டு தரிசனம் காண வேண்டியிருக்கிறது. இவ்வாறு பக்தர்கள் படும் சிரமங்களை மனதில் கொண்டு, தற்போது சோதனை அடிப்படையில்  விர்ச்சுவல் முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளதாகவும், பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு இது நிரந்தமாக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதைத் தவிர்க்கலாம்.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற பல புகழ்பெற்ற கோவில்களில் இந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய முயற்சி குறித்து காசி விஸ்வநாதர் கோயிலின் முதன்மை செயல் அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா கூறுகையில், 3டி விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் மற்றும் மாதா வைஷ்ணோ தேவி கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் செயல்படுத்தப்பட்ட ஒரு புதிய தொழில் நுட்பமாகும். அந்த கோவில்களில் 3டி தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம், அதற்காக காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளையை தொடர்பு கொண்டது.

ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கையாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 11 நிமிடங்கள் மற்றும் 50 வினாடிகள் விர்ச்சுவல்  ரியாலிட்டி தரிசனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கோயிலின் புனிதமான சூழ்நிலையையும் சடங்குகளையும் அனுபவிப்பதை நோக்கமாகக் கொண்டது காசி விஸ்வநாதர் கோவிலின் இந்த புதுமையான ஏற்பாடு. இது பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைப்பதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும் இது பக்தர்களுக்கான தரிசனத்தை எளிமையாக்குவதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையையும் அதிகரிக்க செய்யும் என நம்பப்படுகிறது.

அதனால் இனி நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் காசி விஸ்வநாதர் கோவிலில் கருவறையில் நடக்கும் பூஜைகளையும், காசி விஸ்வநாதரையும் ஆன்லைன் மூலம் தரிசிக்க முடியும். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியால் பக்தர்கள் இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் சுவாமியை மிக அருகில் இருந்து தரிசிக்க முடியும். அதே போல் ஐந்து விதமான ஆரத்தியிலும் பங்கேற்க முடியும். இதுவரை விர்ச்சுவல் தரிசன முறையில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.