உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் வெளி மாநிலங்கள் அல்லது வெளியூருக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். இந்த மாதம் நீங்கள் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பணியிடத்தில் புதிய பணிகள் வழங்கப்படலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருக்கும். உங்கள் அனைத்து செயல்களையும் நீங்கள் முழுமையாக முடிப்பீர்கள், குறித்த காலத்திற்குள் உங்கள் பணிகளை நீங்கள் முடிக்கலாம். பணியிடத்தில் நீங்கள் பதவி உயர்வு பெறலாம். இந்த மாதம் உங்கள் முன்னேற்றத்திற்கு முன்னோர்களின் ஆசி கிட்டும். திடீர் பிரச்சினைகள் காரணமாக திடீர் செலவுகளை நீங்கள் சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் துணை கொண்டு உங்கள் சிரமங்களை சமாளிப்பீர்கள். உங்கள் உடன்பிறப்பு, சொந்த பந்தங்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் சமாளிப்பீர்கள். அதன் மூலம் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் திருப்தி மற்றும் மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் உடன் பிறப்பு மூலம் நீங்கள் சில பொருளாதார நஷ்டங்களை சந்திக்க நேரும்.. இளைய உடன்பிறப்பு மூலம் கடன் பெற நேரும், மூத்த உடன்பிறப்பு காரணமாக குடும்பத்திற்கான செலவுகள் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்தவர்கள் புதிய துணையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் வீட்டில் இருந்து தொலை தூரம் சென்று உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். ஆரம்ப கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பெற்றோர் அவர்களின் பயத்தை போக்கவும், மனதை ஒருமுகப்படுத்தி படிக்கவும் ஆதரவாக இருக்க வேண்டும்.
இந்த மாதம் எதிர்பாலினத்தவர் உங்கள் மீது ஆர்வம் காட்டலாம். காதலில் எந்தவொரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். உங்கள் பயிற்சியாளர் மீது நீங்கள் காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்படலாம். உங்களுக்கு பயிற்சி தரும் ஆசிரியரிடம் நீங்கள் காதல் கொள்ள நேரலாம். இந்த சிக்கலை தவிர்க்க எதிர்பாலின ஆசிரியரிடம் பயிற்சி மேற்கொள்வதைத் தவிருங்கள். துணையைப் பிரிந்து வாழ்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும். புது துணையுடன் புதிய உறவை மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். திருமண வாழ்க்கையைத் தொடங்க இது சிறந்த காலக்கட்டமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் இருக்க அக்கம் பக்கத்தினருடன் பழகுவதில் ஒரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். இடைவெளி விட்டுப் பழகுங்கள். அவர்களுடன் வெளி இடங்களுக்குச் செல்வதன் மூலம் கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம். பார்வதி தேவியை வணங்கி வழிபடுவதன் மூலம் காதல் உறவில் மகிழ்ச்சி கூடலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சந்திரன் பூஜை
இந்த மாதம் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பான செயல்கள் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். அரசாங்கத்தில் உள்ளவர்கள், அரசியல் வாதிகள், உள்ளூர் தலைவர்கள், நிர்வாகம் மற்றும் மேலதிகாரிகள் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரவாக இருப்பார்கள். உங்கள் செயல்களில் வெற்றிபெற அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளமுடியும். கணிசமான பணத்தை சேமிக்க முடியும். உங்கள் உடன்பிற்பு விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள். அவர்களுக்காக உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஆன்மீக விஷயங்கள், சமூக சேவைகள் போன்றவற்றிற்காக பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இது உங்களின் திடீர் பொருளாதார நஷ்டத்தைத் தவிர்க்கும். முருகர் வழிபாடு பொருளாதார முன்னேறத்திற்கு ஆதரவாக இருக்கும். .
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
இந்த மாதம் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கலாம். இதனால் பணியிடத்தில் உங்கள் பெயர்புகழ் கூடும். பணியிடத்தில் நீங்கள் சாதனைகளைப் புரிந்து பதவி உயர்வு பெறுவீர்கள். புதிய பணிகள் உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பணியில் திருப்தி பெறுவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி காணும் வகையில் ஆன் சைட் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி காண முடியும்.
கண்ணாடி, பைப்லைன், திரவம், சோதனை உபகரணங்கள், மென்பொருள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான வணிகங்களில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் வெற்றி நிச்சயம் கல்வி நிறுவனத்தை நிறுவி செயல்பட இந்த காலக்கட்டம் ஏதுவாக உள்ளது. முதலீடுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். முதலீடுகளின் மூலம் நஷ்டம் வராமல் இருக்க நீங்கள் உங்கள் அனைத்து நடவடிக்கை மற்றும் திட்டங்களை கவனமுடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பெரிய லாபத்தைத் தரும்.
உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : ராகு பூஜை
ஜூன் மாதம் முதுகெலும்பு, கண், வயிறு மற்றும் கால் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரக்கூடும். அவ்வப்போது பரிசோதனை செய்து, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
உயர் கல்வி படிக்கு,ம் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் மூலம் நீங்கள் லடசியங்களை அடையாலாம். இந்த மாதம் உங்கள் சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபகசக்தி கூடும். இது உங்கள் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். ஆரம்பக் கல்வி மாணவர்களின் மனதில் அச்சம் இருக்கலாம். எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க :ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 3,4,7,8,9,10,11,19,20,21,24,25,30.
அசுப தேதிகள் : 1,2,12,13,14,17,18,26,27,28,29,
September 19, 2025
September 17, 2025
September 15, 2025