Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மூல நட்சத்திர ஆஞ்சநேய வழிபாடு - Astroved
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மூல நட்சத்திர ஆஞ்சநேய வழிபாடு

Posted DateJune 11, 2025

நாளை 12.06.2025 வியாழக்கிழமை.  மூலம் நட்சத்திரம். அனுமன் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். மூல நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்றும், ஞான நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமபிரானின் பரம பக்தனான அனுமன், ராமபிரானில் அடக்கம். ஆஞ்சநேயரை மூல நட்சத்திர நாளில் விரதம் இருந்து, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவிப்பது அல்லது துளசி மாலை அணிவிப்பது நல்ல பலன்களைத் தரும். எனவே இந்த நாளைத் தவற விடாமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

அனுமன் பலசாலி. சாதிக்க இயலாதவற்றைக் கூட சாதித்துக் காட்டும் இயல்பு கொண்டவர். அவர் செய்த வீர தீர பராக்கிரம செயல்கள் யாவும் அவரது பலத்தை பறைசாற்றும்.  அனுமனை விட அனுமனின் வாலுக்கு அனேக பலம் உண்டு. இத்தகைய பராக்கிரம் வாய்ந்த அனுமனை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூல நட்சத்திரத்தன்று வழிபாடு செய்வது இரட்டிப்பு சிறப்பு.

அனுமனை வழிபட்டால் காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம் அனுமன்,  ஆஞ்சநேயர்: அஞ்சனை மைந்தன்: என பல திருநாமங்கள் கொண்டு இருந்தாலும் ராம பக்த அனுமன் என்றால் அகம் குளிர்ந்து போவாராம்.ஜெய் அனுமன் என்று சொன்னால் நம் குரலுக்கு ஓடி வந்து அருளக் கூடியவர் நம் ஆஞ்சநேயர் பெருமான்.வைணவ கோயில்களில் அனுமனுக்கு சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் அனுமனுக்கு தனி கோவில்களும் உள்ளன.

பிரசித்தி பெற்ற கோவில்கள்: நாமக்கல்/ஆஞ்சநேயர், சென்னை நங்கநல்லூர்/ஆஞ்சநேயர்,திருச்சி கல்லுக்குழி/ஆஞ்சநேயர்,சென்னை ஆழ்வார்பேட்டை/ஆஞ்சநேயர்,மதுரை சிம்மக்கல்/ஆஞ்சநேயர்,என இப்படி பல திருக்கோயில்கள்,உள்ளன. இது மட்டும் அன்றி நமது வீட்டிற்கு அருகாமையில் வைணவக் கோவில்களிலும், சில தனி சன்னிதிகளிலும் அவர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். தன்னிடம் வரும் பக்தர்களுக்கும் பக்தர்களின் பக்தி கேற்ப மனம் குளிர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே நாளைய தினம் உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லுங்கள். துளசி மாலை,வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றல் என உங்களால் முடிந்த வகையில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஸ்ரீராமஜெயம் என்று 108 எண்ணிக்கையில் சிறு தாள்களில் எழுது அதனை மாலையாகக் கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றலாம். வெண்ணெய் வாங்கி சாற்றி வழிபாட்டை மேற்கொள்ளலாம். வெண்ணெய் எப்படி உருகி வழிகிறதோ, அதேபோல உங்களுடைய கஷ்டங்களும் உருகி கரைந்து காணாமல் போகும் என்பது நம்பிக்கை. – “ஓம் ஹம் ஹனுமந்தே நமஹ” என்ற இந்த மந்திரத்தை ஹனுமன் சன்னிதானத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிப்பது அதிசிறப்பு வாய்ந்த பலனை தரும்.அதுவும் இல்லை என்றால் ஸ்ரீ ராம ஜெயம் என்னும் நாமத்தை 108 முறை ஜெபிக்கலாம். ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே அனுமனை பூஜிக்கலாம். அனுமன் திருவுருவப் படத்திற்கு மாலை சாற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

அனுமன் சாலீசா பாராயணம் மகத்தான பலன்களை தந்தருளும் என்கிறார்கள் ஆச்சாரிய பெருமக்கள். அதேபோல் அனுமன் மந்திரத்தை ஜெபித்து வழிபடுவது காரிய தடைகளை எல்லாம் நீக்கும் என்பது ஐதீகம்.கீழே உள்ள சக்தி வாய்ந்த இந்த அனுமன் மந்திரத்தை உங்களால் இயன்ற அளவு ஜெபிக்கலாம்.

 ஹனுமன் மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஹனுமதே

ராமதூதாய லிங்காவித்வம் ஸனாய:

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய

ஸாகினி டாகினி  வித்வப் ஸனாய

கிலகிய பூபூ காரினே வீபீஸணாய

ஹனுமத் தேவாய

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரும்பட் ஸ்வாஹா!