உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம குருவாக பயணம் செய்யும் குரு பகவான், இந்த பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். தனம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண , ரோக, சத்ரு ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுகிறது. இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் விவேகத்துடன் செயல்படுவீர்கள். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். என்றாலும் இந்த ஆண்டின் இறுதியில் உறவில் சில போராட்டங்கள் இருக்கலாம்.
வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்.உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும். கடன்கள் தீரும். நோய்கள் தீரும். இந்த பெயர்ச்சி காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சில பயணங்கள் அல்லது யாத்திரைகள் இருக்கலாம். அது தொடர்பான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில இது சிறந்த காலகட்டம் ஆகும். மாணவர்கள் பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளி நாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறக் காண்பார்கள்.
ஓராண்டு காலம் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்த குரு ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு 5 வது வீடு, 7வது வீடு மற்றும் 9வது வீட்டில் இருக்கும். குடும்பத்தில் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பல வெற்றிகளை ருசிப்பீர்கள். காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் படைப்பாற்றல் மேம்படும். நீங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், உங்கள் நிதிநிலை இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு உங்களிடம் பணம் இருக்கும்.உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் மூலம் லாபம் காண்பீர்கள்.பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனை சீராக தக்க வைத்துக் கொள்ள யோகா தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனை வெளிப்படும்.
ஏப்ரல் மாதம் வரை லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குரு பகவானின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீடு மீது விழுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆறுதலாகவும் இருப்பார்கள்.
காதலர்களின் உறவு வலுவாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆலோசனை உதவிகரமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் சுக ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது.
உங்கள் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எனவே அது குறித்தும் தொண்டு நடவடிக்கைகளுக்காகவும் நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான சில சவால்களை சந்திக்க நேரிடும். அதிக சிந்தனையின் காரணமாக நீங்கள் தூக்கமின்மை மற்றும் அமைதியின்மையை உணரலாம். பள்ளிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டம் காரணமாக வெற்றி எளிதில் கைகூடும்.
அஷ்டமத்து சனி கஷ்டங்களை கொடுத்தாலும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது. குரு பார்வையால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். நீங்கள் புதிய யோசனைகளை மேற்கொள்வீர்கள்.
உங்கள் மனதில் கனவு மற்றும் நம்பிக்கை நிறைந்து இருக்கும். நீங்கள் பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவீர்கள் மற்றும் உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்துவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் போது உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். மற்றும் உங்கள் தகவல் தொடர்பு திறன் மூலம் பலரையும் கவர்வீர்கள். உங்கள் உத்தியோக வாழ்க்கையில் சில மன அழுத்தம் ஏற்படலாம். என்றாலும் நீங்கள் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு இப்பொழுது கிட்டலாம். பொறுமை முக்கியமானது, உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உங்கள் மூத்த சகோதரருடன் உங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பணம் சார்ந்த உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். நீங்கள் லாபம் ஈட்டவும் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் அறிவுப் பூர்வமாக செயல்பட்டு வெற்றி காண வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம், ஏனெனில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், காலநிலை மாற்றம் காரணமாக, ஏற்படும் சிறு உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ செலவுகள் இருக்கலாம்.
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2 வது வீடு, 4 வது வீடு மற்றும் 6 வது வீட்டில் இருக்கும் .இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் சாதகமான பலன்களைக் காண முடியும். நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். முன்னேற்றம் தரும். சொத்து தொடர்பான விவகாரங்கள் சாதகமாக முடியும். முதலீடுகளை மேற்கொள்ளலாம். உங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு, அங்கீகாரம், வளர்ச்சி மற்றும் வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களின் கடின உழைப்பும் முயற்சியும் உங்கள் இலக்குகளை அடைய உதவும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் அங்கீகாரம் கிட்டும்.
கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் லாபம் காண முடியும். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில பிரச்சனைகள் மற்றும் அதிருப்தி இருக்கலாம். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளியுங்கள். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் எதிர்பார்க்கலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை ஆதரிக்க தேவையான நிதி உங்களிடம் இருக்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின் சிந்தனை மற்றும் கற்பனைத் திறன் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் படிப்படியான நிலையான முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தை சீராக தக்க வைத்துக் கொள்ள, யோகா அல்லது தியானம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 1-வது வீடு, 3-வது வீடு மற்றும் 5-வது வீட்டில் இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் காணப்படும். உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். காதலர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் படைப்பாற்றல் மேம்படும். உங்கள் கலைத்திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சியடையும் மற்றும் வெற்றியைக் கொடுக்கும். உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பார், உங்கள் பிள்ளைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவார்கள். உயர்கல்வி கற்க வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் துணையுடன் உங்கள் உறவு மேம்படும். வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்., நீங்கள் முயற்சி செய்தால் பெரிய வெற்றிகளை அடைய முடியும். நீங்கள் ஒரு பெரிய சொத்து அல்லது ஒரு பெரிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். உங்கள் உடன்பிறப்புகள் மூலம் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்பட உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2-வது வீடு, 4-வது வீடு மற்றும் 12-வது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சிகாலத்தில் உங்கள் வாழ்க்கையில் சாதகமான நேர்மறையான விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். உங்களுக்கென புதிய அடையாளம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் இருக்கும். நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்ள நேரும். மே 2024 முதல் மே 2025 வரையிலான காலகட்டம் வேலை வாய்ப்புகளுக்கு நம்பிக்கையளிக்கிறது. உங்களின் உள்ளார்ந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் காரணமாக உங்கள் வேலையில் முன்னேற்றங்களை நீங்கள் அனுபவிக்கலாம். உங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிட்டும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு விரும்புபவர்களுக்கு இது அனுகூலமான காலக்கட்டம் ஆகும். வேலை நிமித்தமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் அது குறுகிய தூர பயணமாக இருக்கும். நீங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு இருக்கலாம். உங்கள் கடின உழைப்பின் மூலம் வேலையில் உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கலைத் துறை மாணவர்கள் நன்கு பரிமளிப்பார்கள். மாணவர்களிடத்தில் ஆர்வமும் உத்வேகமும் இருக்கும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். நீங்கள் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது மற்றும் உங்களை கவனித்துக்கொள்வது முக்கியம்
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் 1-வது வீடு, 3-வது வீடு மற்றும் 11-வது வீட்டில் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிட்டும். சகாக்கள் மற்றும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதாரவாக இருப்பார். தொழில் புரியும் இடத்தில் புதிய நபர்களை நீங்கள் சந்திக்கலாம், மேலும் உங்கள் சமூக நிலை மேம்படும். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பீர்கள்.
நிதி விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடலாம் மற்றும் சில அழகான நினைவுகளை உருவாக்கலாம். பணியிடத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் கடின உழைபிற்கான பாராட்டை மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். நீங்கள் குழுத்தலைவராக பணி புரியும் வாய்ப்பு கிட்டலாம். உங்கள் உத்தியோகத்தின் மூலம் நிதிநிலை மேம்படும். தொழில் மூலம் லாபம் வரும். நீங்கள் புதிய திட்டங்களை வகுப்பீர்கள். இது நிதி ஆதாயங்களுக்கும் வெற்றிக்கும் வழிவகுக்கும். மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பெயர்ச்சி விருச்சிக ராசி மாணவர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வரும், ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இது அஜீரணம், மலச்சிக்கல், எடை அதிகரிப்பு போன்ற நோய்கள் வராமல் காக்க வழிவகுக்கும்.
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் 12வது வீடு, 10வது வீடு மற்றும் 2வது வீட்டில் இருக்கும்.நீங்கள் உங்கள் வேலையில் வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள் மற்றும் போட்டியாளர்களால் ஏற்படும் சவால்களை உங்களால் சமாளிக்க முடியும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் நிதிகளை நன்றாக நிர்வகிப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.குரு உங்கள் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அதிக ஒழுக்கம் மற்றும் உங்கள் நேரத்தை நிர்வகிப்பதில் நீங்கள் சிறந்து விளங்க முடியும். வழியில் சில எதிர்பாராத தடைகளை நீங்கள் சந்திக்கலாம், நீங்கள் சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் இந்த காலகட்டத்தில் தீர்க்கப்படும்.நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கவும், முதலீடு செய்யவும் இது ஒரு சிறந்த நேரம். பங்குச் சந்தையில் நீங்கள் செய்த முதலீடுகள் பலனளிக்கும்.
உங்கள் அறிவு மற்றும் திறன்களை விரிவாக்குவதில் கவனம் செலுத்த இது ஒரு சரியான நேரம்.குறுக்குவழிகளை எடுக்கவோ அல்லது விஷயங்களை அவசரப்படுத்தவோ கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது தவறுகளுக்கும் பின்னடைவுக்கும் வழிவகுக்கும். வணிக முயற்சிகள், தொழில்களில் போட்டி அல்லது சவால்களைக் கையாளும் போது பெருமை மற்றும் ஈகோவை ஒதுக்கி வைப்பது முக்கியம். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். பொறுமையின்மை மற்றும் கவனமின்மை உங்கள் படிப்பில் தடைகளை ஏற்படுத்தலாம். எனவே பொறுமை மற்றும் கவனம் அவசியம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்கள் ஆரோக்கியத்திற்கு சவாலான நேரமாக இருக்கலாம், எனவே இந்த காலகட்டத்தில் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் 9-வது வீடு, 1-வது வீடு மற்றும் 11-வது வீட்டில் இருக்கும்.இந்த பெயர்ச்சிக் காலத்தில் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குழந்தைப் பேறு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும். காதலர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். பணியில் புதிய பொறுப்புகள் அளிக்கப்படலாம். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கூட கிட்டலாம். முதலீடுகள் மூலம் சில நிதி ஆதாயங்களையும் நீங்கள் காணலாம். உங்கள் அதிர்ஷ்டம் கணிசமாக மேம்படும், மேலும் நீங்கள் ஆன்மீக உணர்வைப் பெறுவீர்கள்.
பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். என்றாலும் சில தாமதங்கள் காணப்படும். எனவே பொறுமையைக் கடைபிடியுங்கள். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சுமுக நல்லிணக்க உறவு இருக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவருடன் ஒருவர் நேரத்தை ஒன்றாக செலவு செய்வார்கள். ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் இருக்கும். தந்தை மூலம் பண வரவு இருக்கலாம். உங்கள் உடன்பிறந்தவர்களும் உறுதுணையாக இருப்பார்கள், அவர்களிடமிருந்து நீங்கள் பண உதவி பெறலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் வெளிநாட்டில் படிக்கத் திட்டமிட்டால், நீங்கள் வெற்றியடைவீர்கள். இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8-வது வீடு, 10-வது வீடு மற்றும் 12-வது வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்களை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் தன்னம்பிக்கை கூடும். உங்கள் உத்தியோகத்தின் மூலம் உங்கள் வருமானத்தில் ஏற்றம் காணலாம், ஆனால் உங்கள் தொழிலில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். ஷாப்பிங், உங்கள் வீட்டை அலங்கரித்தல் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது போன்ற சில ஆடம்பரமான செலவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கலாம். அதிக வருமானம் ஈட்ட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். என்றாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். குறைந்த பணத்தையே உங்களால் சேமிக்க இயலும். நீங்கள் சில எதிர்பாராத பணம் அல்லது மூதாதையர் சொத்துக்களைப் பெறலாம், இது உங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும். நீங்கள் ஆன்மீகப் பணிகளில் அங்கீகாரத்தையும் புகழையும் பெறலாம் மற்றும் சில பொருளாதார வளர்ச்சியையும் கூட அனுபவிக்கலாம்.
பணியிடத்தில் உங்கள் தன்னம்பிக்கை வெளிப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். பிறரை நம்பி நீங்கள் முக்கிய பணிகளை அளிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் நேர்மையுடன் நடந்து கொள்வார். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும். குழந்தைகள் சிறப்பாகக் கல்வி கற்று வெற்றி பெறுவார்கள். விளையாட்டுகளிலும் அவர்கள் பிரகாசிப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 9-வது வீடு, 7-வது வீடு மற்றும் 11-வது வீட்டில் இருக்கும்.கணவன் மனைவி உறவு மேம்படும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் காண்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சுமுக உறவு இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள்.
உங்கள் குடும்பத்துடன் பிணைப்பு நெருக்கமாக இருக்கும். சக ஊழியர்களின் முழு ஆதரவுடன் நட்பும் கிடைக்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான பலனைக் காண்பீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை வளர்ச்சி மந்தமாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கூட தாமதமாகலாம். பணியிடத்தில் சில சவால்கள் இருக்கலாம். காதலர்களுக்கு இது அனுகூலமான காலக்கட்டம். அதிக அளவு ஈர்ப்பு மற்றும் புதிய தொடக்கங்கள் காணப்படும்.
அமைதியான உறவை தக்க வைத்துக் கொள்ள அனுசரித்து போவது நல்லது. திருமண விஷயங்களில் தந்தை ஆதரவாக இருப்பார், உங்கள் கடின உழைப்பின் மூலம் வருமானம் ஈட்ட முடியும். தொழிலில் வளர்ச்சி காண்பதன் மூலம் வருமானம் உயரும். முதலில் சில தாமதங்கள் அல்லது குறைந்த லாபம் இருக்கலாம் என்றாலும், நீண்ட காலத்திற்கு, உங்கள் தொழில் வளரும், மாணவர்கள் புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் செலுத்துவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். சில மீன ராசி அன்பர்கள் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்திற்கு அடிமை ஆகலாம். இது செரிமானம், எடை அதிகரிப்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025