ஒவ்வொரு நாளையும் நாம் துவக்கும் பொழுது இன்றைய நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என்று தான் நினைப்போம். நாளின் துவக்கம் மட்டும் இன்றி அன்று செய்யக் கூடிய அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணத்துடன் செயல்படுவோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பணிகள் இருக்கும். மேலும் பல விஷயங்களுக்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். எல்லா முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணினாலும் அது சாத்தியமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம், நாம் அவற்றில் பல தடைகளை சந்திக்க நேரும். அதனால் வெற்றி தாமதமாகலாம். அல்லது வெற்றி கிடைக்காமல் போகலாம். சில சமயங்களில் நாம் தோல்வியைக் கூட சந்திக்க நேரலாம்.
காலையில் எழுந்து கொள்ளும் போது இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து பார்க்க வேண்டும். கண்விழிக்கும் பொழுதே நல்ல சகுனங்களாக கருதப்படும் விஷயங்களைப் பார்க்க வேண்டும். அவற்றைப் பற்றிப் பேச வேண்டும். இன்றைய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை நாம் வழக்கத்தில் கொண்டு வர வேண்டும். அதற்கு பிறகு நமது செயல்களை செய்ய வேண்டும். நமது அன்றாட வேலை அல்லது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதே போல நாள் முடிவில் இன்றைய நாள் நல்ல நாளாக அமைத்துக் கொடுத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்க வழக்கத்தைக் கடை பிடிப்பார்கள். வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலம் போட்டு வீட்டை பளிச்சென்று வைத்துக் கொள்வார்கள். ஓரு சிலர் காலை மாலை என இரு வேளையும் விளக்கு ஏற்றுவார்கள். வேறு சிலரோ வீட்டில் நல்ல ஒலி இருக்க வேண்டும் என்று விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்தர் சஷ்டி கவசம் என பாடல்களை ஒலிக்க வைப்பது அல்லது பாராயணம் செய்வது என வழக்கத்தைக் கடைபிடிப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அந்த வழிமுறைகளில் ஒன்றாகத் திகழ்வதுதான் அம்மன் வழிபாடு. நினைத்த உடன் ஓடி வந்து அருள் செய்யும் அவளை அனுதினமும் நம் நினைவில் வைத்தால் அன்றைய தினம் மட்டும் இன்றி நமது வாழ் நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவளை நினைக்கும் மந்திரம்
“சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே திரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே”
இந்த மந்திரத்தை அனுதினமும் காலை மாலை இரு வேளையும் கூறி வருவதன் மூலம் வாழ்வில் சகல நலன்களும் கிட்டும். ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமையும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025