Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Meenam Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Meenam Rasi Palan 2023

Posted DateNovember 27, 2023

மீனம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2023

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப விஷயங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் செல்வாக்கு கூடும். தொழில் மூலம் லாபம் கிடைக்கும். நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். ரியல் எஸ்டேட் மூலம் ஆதாயம் இருக்கும். ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதம் நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் நலனில் அக்கறை கொள்வீர்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக முயற்சிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீட்டில் சில அசௌகரியங்கள் காணப்படலாம். மற்றும் பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் சில பிரச்சினைகள் இருக்கலாம். என்றாலும் அதற்கான தீர்வுகளையும் காண்பீர்கள். எதிரிகளை சிறப்பாக கையாள்வீர்கள். எந்தவொரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதனால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இந்த மாதம் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. கிரக நிலை  சரியாக அமையாத காரணத்தால் உங்கள் மன அழுத்தம் மற்றும் டென்ஷன் தொடர்ந்து அதிகரிக்கலாம்.  பொதுவாக பெண்களால் சங்கடமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும். நீண்ட தூர பயணங்கள் இருக்கலாம்.

காதல் / குடும்ப உவு :

உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சில எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் நெருக்கம் இன்றி இருக்கலாம். உங்கள் மனதில் ஒரு பற்றற்ற விரக்தி நிலை இருக்கலாம். தாம்பத்திய வாழ்க்கையில் இனிமை இருக்காது. தம்பதிகளிடையே போதுமான அக்கறையும் பிணைப்பும் இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணை தனது வாழ்வில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். இது உங்கள் இருவருக்கும் இடையிலான உறவை பாதிக்கலாம். காதலர்களுக்கு இது ஏற்ற மாதமல்ல. காதலர்கள் மனதில் ஏக்கம் இருக்கும். அன்பு மற்றும் அக்கறைக்காக ஏங்குவீர்கள். கணவன் மனைவி உறவு விஷயங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு தம்பதியினரிடையே தவறான புரிதலைத் தூண்டும். ஒருசிலரின் போராட்டம் பிரிவு வரை கூட செல்லலாம். இந்த மாதத்தில் உறவு விஷயங்களில் தேவையற்ற கவலையும் கோபமும் வரலாம். தாம்பத்திய வாழ்வில் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க ஏற்ற காலம் அல்ல. திருமண வாழ்க்கை மற்றும் துணையிடம் சில பற்றின்மை உணர்வு இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை

நிதிநிலை :

உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல பொருளாதார வளர்ச்சி  காண்பீர்கள். பெண்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களால் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம்.  முதலீடு மற்றும் ஊக வணிகங்கள் மூலம் மிதமான ஆதாயம் கிட்டும். மனைவி மூலம் அதிர்ஷ்டம் காணப்படும். பண வரவு சீராக இருக்கும். வாகனங்கள் மற்றும் பெண்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களால் சில எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். இந்த மாதம் நீங்கள் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதனால் கடன் சுமை ஓரளவு குறையும். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் பணவரவு இருக்கலாம்.தந்தையின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணத்தை செலவு செய்யலாம். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் பணத்தை செலவு செய்யலாம். பூர்வீக சொத்து பெறும் வகையிலும் செலவுகள் இருக்கலாம். எதிர்பாராத திருட்டு காரணமாக பொருட்களை இழக்கும் வாய்ப்பு உள்ளது. ஆவணங்கள் மற்றும் தகவல்தொடர்பு தொடர்பான சிக்கல்களையும் சந்திக்க நேரிடும், இது நிதி இழப்புகளையும் தரக்கூடும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். என்றாலும் சகபணியாளர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாயப்புள்ளது. எனவே நீங்கள் உத்தியோகத்தில் எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். பிறர் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.  பணி நிமித்தமான பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தின் மூலம் பண வரவுக்கும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் பெண் ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆவணங்களை பத்திரமாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகேற்ற அங்கீகாரம் பெறுவீர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.  பணியில் நீங்கள் புதிய குழுவில் சேர வேண்டியிருக்கலாம். பணியிடத்தில் உங்களின் தலைமைப்பண்பு வெளிப்படும். இருப்பினும், பணியிடத்தில் சக பெண்களால் ஏற்படும் சங்கடமான நிகழ்வுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நல்ல வேலைச் சுமை இருந்தாலும் நிர்வாகத்திடம் இருந்து தகுதியான அங்கீகாரம் கிடைக்கும்.

தொழில் :

கடந்த காலத்தில் தொழிலில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கான பலனை இந்த மாதம் காண்பீர்கள். உங்கள் கடின முயற்சிகளுக்கெல்லாம் இப்பொழுது பலன் கிட்டும். முதலீடுகளின் போது கவனமாக செயல்படுங்கள். தொழில் மூலம் நல்ல பண வரவு இருக்கும். தொழிலில் பங்குதாரர்கள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் தொழிலில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் சாதுரியமாக செயல்பட வேண்டும். உங்கள் தலைமைத்துவத் திறனை பயன்படுத்தி முன்னேற வேண்டும். வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். இந்த மாதம் நீங்கள் தொழிலில் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். தொழில் மூலம் ஒரளவு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கும் மாற்றுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. வணிகத்தில் ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்திருப்பது நல்லது. இந்த மாத இறுதியில் எதிர்பாராத வருமானம் வரலாம்.

தொழில் வல்லுனர்கள் :

தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். என்றாலும் பங்குதாரர் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். எனவே கவனம் தேவை. நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நல்லது. பெண்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களால் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம்.  முதலீடு மற்றும் ஊக வணிகங்கள் மூலம் மிதமான ஆதாயம் கிட்டும். ஒரு சிலர் வழக்கு மற்றும் சட்ட விவகாரங்களை சந்திக்க நேரலாம். பிராண்ட் / நல்லெண்ணத்தை மீறுதல் தொடர்பான சட்ட தகராறுகள் / வழக்குகளுக்கான வாய்ப்புகள் இருக்கலாம். இந்த மாத இறுதியில் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தொழிலில் திருப்தி ஏற்படும். தொழிலில் பங்குதாரர்கள் தொழிலின் வளர்ச்சிக்கு பயனளிக்காமல் இருக்கலாம்.  வாடிக்கையாளர்களைக் கையாளும் போது  எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் போட்டியாளர்களிடம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. தகவல்தொடர்புகளில் சரியான கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் தொழில்முறை விஷயங்களில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சர்ச்சைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேம்பட :பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக  இருக்கும். நீரிழிவு மற்றும் பிபி அளவு அதிகரிப்பது தொடர்பான சில அசௌகரியங்கள் இருக்கும். உணர்ச்சி ஏற்ற இறக்கங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிக்கல்களைத் தூண்டும்.  செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். இந்த மாதத்தில் மனைவிக்காக மருத்துவமனை மற்றும் மருந்துகளுக்காகவும் செலவிடலாம். தந்தையின் உடல்நிலை  கவலையை ஏற்படுத்தும். நீங்கள் சில தோல் தொடர்பான பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : துர்கா பூஜை

மாணவர்கள் :

மீன ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். கல்வி விஷயங்களில் நல்ல நேரம் இருக்கும். இந்த காலகட்டத்தில் போராட்டங்கள் மற்றும் மன உளைச்சல்கள் இருந்தாலும்  போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள்.  நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். விளையாட்டு மற்றும் யோகாவில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.  போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கலாம். மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், தூக்கமின்மை மீன ராசி மாணவர்களின் கல்வியில் கவனம்  செலுத்துவதைத் தடுக்கலாம். மாணவர்கள் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர்களுடனும், குருக்களுடனும் சிறிய கருத்துப் பரிமாற்றம் மற்றும் மோதல்களை சந்திக்க நேரிடும். மீன ராசி மாணவர்கள் பொதுவாக சக பெண் மாணவர்களுடன் சில சர்ச்சைகளில் சிக்கலாம். மீன ராசி மாணவர்கள் வாகனம் ஓட்டும்போதும், விளையாடும்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கும். வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இதில் தடைகள் ஏற்படும்.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

சுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 13, 14, 15, 16, 24, 25, 26, 27 & 31.

அசுப தேதிகள் : 9, 10, 17, 18, 19, 20 & 21.