Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Kumbam Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2023 | December Matha Kumbam Rasi Palan 2023

Posted DateNovember 27, 2023

கும்பம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2023

கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் இருக்கும். கடந்த மாதத்தில் இருந்து வந்த மன அழுத்தம் மற்றும் பதட்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடினமான நேரத்தின்  மத்தியில் தற்காலிக  நிவாரணம் கிட்டும். என்றாலும் பயம் மற்றும் பதட்டம் காரணமாக நீங்கள் வாழ்வில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ரியல் எஸ்டேட் மூலம் ஆதாயம் கிட்டும். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் தத்துவத்தை மனதில் கொண்டு இந்த மாதம் செயல்படுங்கள். தன்னலமின்றி இருங்கள். இந்த மாதம் குழந்தைகள் காரணமாக நீங்கள் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். குழந்தைகளிடம் உங்களை வெளிப்படுத்தத் தவறுவீர்கள்.  இந்த மாதம் உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் பெருகும்.  நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்ளலாம்.  

இந்த மாதத்தின் பிற்பகுதியில் தகவல் பரிமாற்றத்தில் கடினமான நேரம் உணரப்படும். பொதுவாக தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமானவர்களை சந்திக்க நேரிடும்.இந்த மாத ஆரம்பத்தில்  உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை எழலாம். என்றாலும் மாத இறுதியில் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த முக்கியமான நேரத்தில் வழிகாட்டிகள் மற்றும் குருக்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு கிட்டும். . ஆன்மீக யாத்திரை இந்த மாதத்தில் சில நேர்மறையான ஆற்றலை அளிக்கும். உயர்ந்த ஞானம் மற்றும் தத்துவத்தைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

காதல்/ குடும்ப உறவு :

இளம் வயது கும்ப ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரலாம். உங்கள் துணையை நீங்கள் பணியிடத்தில் கண்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மாத ஆரம்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சச்சரவுகள் வந்து போகும். முறையற்ற தகவல் தொடர்பே இதற்கு காரணமாக அமையலாம். எனவே உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துங்கள். உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உங்களில் சிலர் இந்த மாதத்தில் உறவில் சோதனைக் காலங்களைச் சந்திப்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் குடும்ப வாழ்க்கையில் சூடான விவாதங்கள் ஏற்படலாம். இம்மாதத்தில் வாழ்க்கைத்துணை ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில் நீங்கள் தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்கலாம். காதல் விஷயங்களில்ள் நிறைய தடைகள் மற்றும் தவறான புரிதல்கள்  இருக்கலாம்.  திருமணத்திற்குத் துணை தேடும் கும்ப ராசிக்காரர்களுக்கு மிதமான காலகட்டமாக இருப்பதால், நன்மை தீமைகளை கவனமாகப் பார்க்க வேண்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : புதன் பூஜை

நிதிநிலை :

பெரும்பாலான கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் உங்கள் பொருளாதா நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வருமானம் வரும் ஆதாரங்களும் மாறும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் அல்லது ஆதாயம் வரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உத்தியோகம், உடன்பிறப்புகள், மற்றும் வாழ்க்கைத் துணை சார்ந்த விஷயங்களுக்காக செலவுகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைக்காக செய்யும் செலவே முக்கியமானதாகவும் அதிகமாகாவும் இருக்கும். ஊக வணிகம் மற்றும் முதலீடுகளின் மூலம் பணம் வரவு இருக்கும். அதிர்ஷ்டம் மற்றும் எதிர்பாராத லாபங்கள் மூலம் ஆதாயம் காணலாம். அதே சமயத்தில் நிதி நெருக்கடிகளையும் சந்திக்கலாம். இந்த மாதத்தில் ஆவணங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான செலவுகள் அதிகமாக இருக்கலாம். ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பதன் மூலமும், தலைமைப் பதவியின் மூலமும்  ஆதாயம் பெறலாம். அரசாங்க அதிகாரிகளும் நல்ல பலன்களை வழங்கலாம்.  வேறு சில முதலீட்டு வழிகள் / சொத்துக்களில் மறு முதலீடு செய்யலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : கேது பூஜை

உத்தியோகம் :

உங்கள் உத்தியோக நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் மூலம் பண வரவு காணப்படும். நல்ல லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் கடின முயற்சிகளுக்கு உண்டான பலனைக் காண்பீர்கள். ஒரு சிலர் தங்கள் வேலையில் மாறலாம். இது சாதகமான முன்னேற்றத்தை அளிக்கும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் போதுமான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும்.   மேலதிகாரிகளின் ஆதரவின் அடிப்படையில்  லாபம் இருக்கலாம். இருந்தபோதிலும், மாதத்தின் இரண்டாம் பாதியில் சக ஊழியர்களுடன் உங்களுக்கு வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் இருக்கலாம். கஷ்டங்கள் இருந்தாலும், கடின முயற்சிகளுக்கு பிறகு வெற்றியை சுவைக்க முடியும்.  உத்தியோகபூர்வ விஷயங்களில் அதிர்ஷ்டம் காணப்படும். தலைமைப் பதவியை அடைய விரும்புபவர்களும் இந்தக் கணக்கில் பலன் பெறலாம். சோம்பல் காரணமாக ஆவணங்களை தவறாக கையாள நேரலாம். எனவே மிகவும் கவனம் தேவை.

தொழில் :

தொழில் செய்யும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் தொழில் குறித்த முடிவுகளை கவனமுடனும் பொறுப்புடனும் எடுக்க வேண்டும். இந்த மாதத்தில் வியாபாரத்தை சீரமைக்கவும் விரிவுபடுத்தவும் அதிர்ஷ்டமும் நல்ல பங்கு வகிக்கும். கூட்டுத் தொழில்செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் உங்கள் முயற்சிகளை சிறிது காலத்திற்கு தள்ளிப் போட வேண்டும். இதற்கான முடிவுகளை சிறிது காலம் தள்ளி எடுக்கலாம். இந்த காலகட்டத்தில் மதிப்பீட்டாளர்கள் மற்றும் முகவர்களிடையே தவறான புரிதல்கள் ஏற்படலாம். வணிகத்தில் முந்தைய மோசமான செயல்திறன் வரும் மாதங்களில் சிறிது சரிசெய்யப்படும். இந்த மாதம் நீங்கள் பொது முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தொழிலின் ஸ்திரத்தன்மை  படிப்படியாக அதிகரிக்கும். வியாபாரத்தில் கடன்கள் தற்காலிகமாக குறையலாம். இந்த மாதம் வருமானம் மற்றும் பண வரவு நன்றாக இருக்கும். பங்குதாரர்கள்  மூலம் ஆதாயங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊழியர்களுடன் தவறான புரிதல்கள் மற்றும் வாக்குவாதங்களும் இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் சிலருக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர தெய்வீக அருள் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சிறந்த அதிகாரமும் கட்டுப்பாடும் உணரப்படும்.

தொழில் வல்லுனர்கள் :

கும்ப ராசி வல்லுநர்கள் சக ஊழியர்களைக் கையாள்வதில் கடினமான நேரத்தைக் கொண்டிருக்கலாம். மற்றும் தொழில்முறை இடத்தில் ஆவணங்கள் தொடர்பான விஷயங்களைக் கையாள்வது  கடினமாக இருக்கலாம். வலுவான தலைமைத்துவ திறன் இருந்தபோதிலும், தொழிலில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். பணியின் சேனல் மயமாக்கல் சரியாக செய்யப்பட வேண்டும். தொழிலில் பங்குதாரர்கள் மூலம் லாபம் / ஆதாயம் இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலுவையில் உள்ள  ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன் சில தாமதங்கள் ஏற்படலாம். நீங்கள் தொழிலில் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் சக ஊழியர்கள் மற்றும் முதலாளியுடனான உறவும் அதிக அளவில் மேம்படும். சொந்த தொழிலில் தலைமை விஷயங்களில் தெளிவு இருக்கும். இந்த மாத இறுதிக்குள், நிதி வெகுமதியின் அடிப்படையில் பாராட்டு மற்றும் அங்கீகாரத்தைப் பெறலாம்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். என்றாலும் சில சமயங்களில் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம் ஆனால் தியானம் / யோகா மேற்கொள்வதன் மூலம் அதில் இருந்து நீங்கள் மீளலாம். உங்கள் மனதில் அமைதி மேம்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் கவலை மற்றும் பயத்திற்கு ஆளாகலாம். இந்த மாதத்தில் சுகாதாரமற்ற இடங்களில் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : கேது பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் சிறப்பாகக் கலவி பயில்வார்கள் என்றாலும் தேர்வுகளில் சாதிக்க கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கவனமின்மை மற்றும் சோம்பல் ஆகியவை இந்த காலகட்டத்தில் கும்ப ராசி மாணவர்களின் செயல்திறனை பாதிக்கலாம். போட்டித் தேர்வுகளை முயற்சிக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது சிறப்பு. ஏனெனில் ஒரு சிறிய கவனக்குறைவு காரணமாக முக்கிய மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் வெளிநாட்டில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய நிறுவனத்தில் சேர்க்கை பெறலாம். நினைவாற்றல் மற்றும் தகவல் தொடர்பு டிசம்பர் மாதத்தில் மந்தநிலையைக் காணலாம். இந்த மாதத்தில் ஆசிரியர்கள் மற்றும் குருக்களிடமிருந்து நல்ல வழிகாட்டுதல்  இருக்கும். கல்வியில் முன்முயற்சிகளை உத்வேகத்துடன் மேற்கொள்வீர்கள். அதன் விளைவான ஆதாயம் இந்த மாத இறுதியில் காணப்படும்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 11, 12, 13, 14,22, 23, 24, 25, 28, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 6, 7, 8, 15, 16, 17, 18 & 19.