AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
மேஷம் ராசிக்கான சந்திராஷ்ட நாட்கள் 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மேஷம் ராசிக்கான சந்திராஷ்ட நாட்கள் 2024

அசுவினி   நட்சத்திரம் 4 பாதங்கள், பரணி நட்சத்திரம்    4 பாதங்கள் மற்றும் கிருத்திகை 1,ம் ஆம்  பாதம்  மேஷ ராசியில் வரும்.

வேத ஜோதிடப்படி உங்கள் ராசியில் இருந்து எட்டாம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்கள் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் ஆகும்.

உங்கள் ராசிக்கு எட்டாம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் முழு இரண்டே கால் நாட்களும் சந்திராஷ்டம நாட்கள் ஆகும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் – ‘சந்திர’, என்றால் சந்திரன் மற்றும் ‘அஷ்ட’, எட்டு. சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் (அஷ்டம ஸ்தானம்)  சஞ்சரிக்கும் போது சந்திராஷ்டமம் எனப்படும். வேத ஜோதிடத்தின்படி, உங்கள் ராசியில் இருந்து எட்டாவது வீட்டில்  இரண்டரை நாட்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் முழு நேரம் சந்திராஷ்டம நாட்கள் என்று  கூறப்படும். இது இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.

 சந்திராஷ்டம நாட்கள் உங்களை எவ்வாறு பாதிக்கலாம்?

சந்திராஷ்டமத்தின்  மிக முக்கியமான பகுதி, சந்திரன் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து  குறிப்பிட்ட நட்சத்திரத்தின் வழியாக அதாவது 16 வது நட்சத்திரத்தின் வழியாக சந்திரன் பயணிக்கும் நேரம் ஆகும். இது ஒரு தொந்தரவான கட்டமாக  இருக்கலாம்.

எட்டாவது வீடு சந்திரன் இயற்கை வலுவிழக்கும் வீடு. வேத ஜோதிடத்தின் படி, 8 வது வீடு ஏற்ற தாழ்வுகளின் வீடாக நம்பப்படுகிறது மற்றும் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும்.சந்திராஷ்டம நாளில் மனதில் சமநிலை இருக்காது. எனவே அந்த நாட்களில் எந்தவொரு விஷயத்திலும் கவனமாகச் செயல்படவேண்டும்.

ஜோதிட நம்பிக்கைகளின்படி சந்திராஷ்டம நேரத்தில் முக்கிய பணிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவ சிகிச்சை  மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பயணம் தவிர்க்க வேண்டும். ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளுதல் கூடாது.

சந்திராஷ்டம நேரத்தில் மனதில் சமநிலை இருக்காது. முக்கிய முடிவுகளை எடுப்பது இயலாமல் இருக்கும். எனவே அந்த நாட்களில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.

மாதம் ஆரம்பிக்கும் தேதி மற்றும் நேரம் முடியும் நேரம் மற்றும் தேதி
ஜனவரி 07.01.2024, 04.01 pm 09.01.2024, 09.11 pm
பிப்ரவரி  04.02.2024, 01.04 am 06.02.2024, 07.35 am
மார்ச் 02.03.2024, 0817 am

29.03.2024 02.09 pm

04.03.2024, 04.21 pm

31.03.2024 10.56 pm

ஏப்ரல் 25.04.2024, 08.00 pm 28.04.2024, 04.28 am
மே 23.05.2024,02.55am 25.05.2024,10.36am
ஜூன் 19.06.2024, 11.05 am 21.06.2024, 06.18 pm
ஜூலை 16.07.2024, 07.52 am 19.07.2024, 03.25 am
ஆகஸ்ட் 13.08.2024, 04.15 pm 15.08.2024, 12.53 pm
செப்டம்பர்  09.09.2024, 11.28 am 11.09.2024, 09.22 pm
அக்டோபர் 06.10.2024, 05.33 pm 09.10.2024, 04.08 am
நவம்பர் 02.11.2024, 11.23 pm

30.11.2024, 06.03 am

05.11.2024, 09.45 am

02.12.2024, 03.45 pm

டிசம்பர் 27.12.2024, 01.57 pm 29.12.2024, 11.22 pm

 சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க வேண்டியவை

பொறுப்பற்ற செயல்கள் மற்றும் ஆவேசமான பேச்சைத் தவிர்க்கவும்

தேவையற்ற அபாயங்கள் அல்லது முயற்சிகளை எடுப்பதை தவிர்க்கவும்.

முடி அல்லது நகங்களை வெட்டுவதை தவிர்க்கவும்

புதிய மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்