Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
108 Divya Desam List | 108 Divya Desam Temples in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

108 திவ்ய தேசங்களின் பட்டியல்

Posted DateJanuary 19, 2024

பாரத தேசத்தை அலங்கரிக்கும் எத்தனையோ ஆலயங்களில் 108 திவ்ய தேசங்களை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இந்த திவ்ய தேசங்கள் அனைத்தும் பிரசித்தமானவை. இவை அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. பன்னிரு  ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

108 திவ்ய தேசங்களுள் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும் உள்ளன.இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன.

திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை:

மண்டலம்திவ்ய தேசங்கள்
சோழ நாடு40
நடு நாடு2
தொண்டை நாடு22
மலை நாடு13
பாண்டிய நாடு18
வட நாடு11
வானுலகம்2

108 திவ்ய தேசங்கள்

சோழநாட்டுத் திருப்பதிகள்- 40
 திவ்ய தேசம்இறைவன் பெயர்ஊர்/மாவட்டம்
1ஸ்ரீ ரங்கம்ரங்கநாதர்திருச்சி
2உறையூர்அழகிய மணவாளன்திருச்சி
3திருக்கரம்பனூர்புருஷோத்தமன்திருச்சி
4திருவெள்ளறைபுண்டரீகாக்ஷன்திருச்சி
5திருஅன்பில்வடிவழகிய நம்பிதிருச்சி
6கோவிலடிஅப்பக்குடத்தான்தஞ்சாவூர்
7திருக்கண்டியூர்ஹரசாப விமோசனன்தஞ்சாவூர்
8ஆடுதுறைவையங்காத்த பெருமாள்தஞ்சாவூர்
9கபிஸ்தலம்கஜேந்திர வரதன்தஞ்சாவூர்
10திருப்புள்ளம்பூதங்குடிவல்வில் ராமன்தஞ்சாவூர்
11திருஆதனூர்ஆண்டு அளக்கும் அய்யன்தஞ்சாவூர்
12திருக்குடந்தைஆராவமுதன்தஞ்சாவூர்
13திருவிண்ணகர்ஒப்பிலியப்பன்தஞ்சாவூர்
14திருநறையூர்நறையூர் நம்பிதஞ்சாவூர்
15திருச்சேறைசாரநாதன்தஞ்சாவூர்
16திருக்கண்ணமங்கைபக்தவத்சலன்திருவாரூர்
17திருக்கண்ணபுரம்சௌரிராஜன்நாகப்பட்டினம்
18திருக்கண்ணங்குடிசியாமளமேனிப் பெருமாள்நாகப்பட்டினம்
19திருநாகைசௌந்தர ராஜப் பெருமாள்நாகப்பட்டினம்
20தஞ்சை மாமணிக் கோவில்நீலமேகப் பெருமாள்தஞ்சாவூர்
21நந்திபுர விண்ணகரம்ஜகந்நாதன்தஞ்சாவூர்
22திருவெள்ளியங்குடிகோலவில்லி ராமன்தஞ்சாவூர்
23திருவழுந்தூர்ஆமருவியப்பன்நாகப்பட்டினம்
24திருச்சிரிபுலியூர்அரும்மாகடல்திருவாரூர்
25தலைச்சங்கநாள் மதியம்நாள்மதியப் பெருமாள்நாகப்பட்டினம்
26திருஇந்தளூர்பரிமளரங்கன்நாகப்பட்டினம்
27திருகாவளம்பாடிகோபாலகிருஷ்ணன்நாகப்பட்டினம்
28காழிச்சீராம விண்ணகர்தாடளன்நாகப்பட்டினம்
29அரிமேய விண்ணகரம்குடமாடுகூத்தர்நாகப்பட்டினம்
30திருவண் புருஷோத்தமம்புருஷோத்தமன்நாகப்பட்டினம்
31செம்பொன் செங்கோயில்பேரருளாளன்நாகப்பட்டினம்
32திருமணிகூடம்மணிகூடம் நாயகன்நாகப்பட்டினம்
33வைகுந்த விண்ணகரம்வைகுந்த நாதன்நாகப்பட்டினம்
34திருவாலி – திருநகரிவயலாளி மணவாளன்நாகப்பட்டினம்
35திருத்தேவனார் தொகைதெய்வநாயகன்நாகப்பட்டினம்
36திருத்தெற்றியம்பலம்செங்கண்மால்நாகப்பட்டினம்
37திருமணிக்கூடம்மணிக்கூட நாயகன்நாகப்பட்டினம்
38திருவெள்ளக்குளம்கண்ணன் நாராயணன்நாகப்பட்டினம்
39பார்த்தன்பள்ளிதாமரையாள் கேள்வன்நாகப்பட்டினம்
40திருசித்திரகூடம்கோவிந்தராஜன்சிதம்பரம் (கடலூர் மாவட்டம்)
நடுநாட்டுத் திருப்பதிகள் – 2
41திருவந்திபுரம்தெய்வநாயகன்கடலூர்
42திருக்கோவிலூர்திரிவிக்ரமன்விழுப்புரம்
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் – 22
43திருக்கச்சிவரதராஜன்காஞ்சிபுரம்
44அஷ்டபுயக்கரம்ஆதி கேசவன்காஞ்சிபுரம்
45திருத்தண்காதீபப்பிரகராசர்காஞ்சிபுரம்
46திருவேளூக்கைமுகுந்தநாயகன்காஞ்சிபுரம்
47திருநீரகம்ஜகதீசப்பெருமாள்காஞ்சிபுரம்
48திருப்பாடகம்பாண்டவ தூதர்காஞ்சிபுரம்
49நிலாத்திங்கள் துண்டம்நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்காஞ்சிபுரம்
50திருஊரகம்ஊரகத்தான்காஞ்சிபுரம்
51திருவெஃகாயதோத்தகாரிகாஞ்சிபுரம்
52திருக்காரகம்கருணாகரன்காஞ்சிபுரம்
53திருக்கார்வனம்உலகளந்த பெருமாள்காஞ்சிபுரம்
54திருக்கள்வனூர்ஆதிவராகன்காஞ்சிபுரம்
55திருப்பவள வண்ணம்பவளவண்ணன்காஞ்சிபுரம்
56பரமேஸ்வர விண்ணகரம்பரமபதநாதன்காஞ்சிபுரம்
57திருப்புட்குழிவிஜயராகவன்காஞ்சிபுரம்
58திருநின்றவூர்பக்தவச்சலன்திருவள்ளூர்
59திருஎவ்வுளூர்வீராகவன்திருவள்ளூர்
60திருவல்லிக்கேணிபார்த்தசாரதிசென்னை
61திருநீர்மலைநீர்வண்ணன்காஞ்சிபுரம்
62திருவிடந்தைலக்ஷ்மிவராஹர்காஞ்சிபுரம்
63திருக்கடல்மல்லைஸ்தலசயனப்பெருமாள்மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
64திருக்கடிகையோக நரசிம்மர்சோளிங்கர் (வேலூர் மாவட்டம்)
மலைநாட்டுத் திருப்பதிகள் – 13
65திருநாவாய்முகுந்தன் (நாராயணன்)மலப்புரம்
66திருவித்துவக்கோடுஉய்யவந்தபெருமாள்பாலக்காடு
67திருகாட்கரைகாட்கரையப்பன்எர்ணாகுளம்
68திருமூழிக்களம்மூழிக்களத்தான்எர்ணாகுளம்
69திருவல்லவாழ்திருவாழ்மார்பன்பந்தனம் திட்டா
70திருக்கடித்தானம்அமிர்த நாராயணன்கோட்டயம்
71திருச்செங்குன்றூர்இமயவரப்பன்ஆலப்புழா
72திருப்புலியூர்மாயப்பிரான்ஆலப்புழா
73திருவாறன்விளைதிருக்குறளப்பன்பந்தனம் திட்டா
74திருவன்வண்டூர்பாம்பணையப்பன்ஆலப்புழா
75திருவனந்தபுரம்அனந்த பத்மநாபன்திருவனந்தபுரம்
76திருவட்டாறுஆதிகேசவன்கன்னியாகுமரி
77திருப்பதிசாரம்திருவாழ்மார்பன்கன்னியாகுமரி
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் – 18
78திருக்குறுங்குடிவைஷ்ணவ நம்பிதிருநெல்வேலி
79திருவரமங்கைதெய்வநாயகன்திருநெல்வேலி
80ஸ்ரீவைகுண்டம்கள்ளப்பிரான்தூத்துக்குடி
81திருவரகுணமங்கைவிஜயாசனர்தூத்துக்குடி
82திருப்புளிங்குடிகாய்சினவேந்தன்தூத்துக்குடி
83திருத்துலைவில்லி மங்களம்தேவபிரான் அரவிந்தலோசனன்தூத்துக்குடி
84திருக்குளந்தைமாயக் கூத்தன்தூத்துக்குடி
85திருக்கேளூர்வைத்தமாநிதிதூத்துக்குடி
86தென் திருப்பேரைமகர நெடுங்குழைக்காதர்தூத்துக்குடி
87திருகுருகூர்ஆதிநாதன்தூத்துக்குடி
88ஸ்ரீ வில்லிபுத்தூர்வடபத்ரசாய்விருதுநகர்
89திருத்தங்கல்தண்காலப்பன்விருதுநகர்
90திருக்கூடல்கூடலழகர்மதுரை
91திருமாலிருஞ்சோலைஅழகர்மதுரை
92திருமோகூர்காளமேகப்பெருமாள்மதுரை
93திருகோட்டியூர்சௌம்யநாராயணன்சிவகங்கை
94திருப்புல்லாணிகல்யாணஜகந்நாதன்ராமநாதபுரம்
95திருமெய்யம்சத்தியமூர்த்திப் பெருமாள்புதுக்கோட்டை
வடநாட்டுத் திருப்பதிகள் – 11
96திரு அயோத்திஸ்ரீ ராமர்பைசாபாத்
97நைமி சாரண்யம்தேவராஜன்உத்தரபிரதேசம்
98திருப்பிரிதிபரமபுருஷன்உத்தராஞ்சல்
99கண்டங்கடி நகர் (பிரயாகை)நீலமேகப் பெருமாள்உத்தராஞ்சல்
100திருவதரி (பத்ரிநாத்)பத்ரி நாராயணன்சாமோலி
101சாளகிராமம் (கண்டகி நதி)ஸ்ரீ மூர்த்திநேபாளம்
102மதுரா (வடமதுரை)கோவர்த்தநேசன்உத்தரபிரதேசம்
103ஆய்ப்பாடி (கோகுலம்)நவமோகனகிருஷணன்டெல்லி
104துவாரகைகல்யாண நாராயணன்அகமதாபாத்
105சிங்கவேள்குன்றம்அஹோபில நரசிம்மர்கர்நூல் (ஆந்திரம்)
106திருவேங்கடம்ஸ்ரீனிவாசன்சித்தூர் (ஆந்திரம்)
விண்ணுலகில் உள்ளவை -2
107திருப்பாற்கடல்வாசுதேவன்விண்ணுலகம்
108ஸ்ரீ வைகுந்தம் (எ) பரமபதம்விஷ்ணுவாகிய திருமால்விண்ணுலகம்