AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
இந்தியா உற்று நோக்கும் அயோத்தி ராம் மந்திர் கோலாகல திறப்பு விழா மற்றும் கோவிலின் சிறப்பு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இந்தியா  உற்று நோக்கும் அயோத்தி ராம் மந்திர் கோலாகல திறப்பு விழா மற்றும் கோவிலின் சிறப்பு

உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான  இந்துக்கள் ஆவலோடு  காத்துக் கொண்டிருந்த அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் இன்னும் சில தினங்களில் திறக்கப்படவிருக்கிறது

உத்திரப் பிரதேசத்தில் அயோத்தியில் ஜனவரியில் 22 ஆம் தேதி   அன்று ராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம்  நடை பெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் 5  வயது குழந்தை உருவம் கொண்ட ராமர் தனது வில்லுடன் காட்சி அளிக்கும் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்த கோவில் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலை மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் கிருஷ்ணா  சில்லா என்ற வகை கல்லில் செதுக்கப்பட்டதாகும்.

ஜனவரி 22 ஆம் தேதி சுப முகூர்த்த நாளாகும். இந்த நாளில் சர்வார்த்த சித்தி, அம்ரித் சித்தி, மற்றும் ரவி என 3 யோகங்கள் ஓரு சேர வருகிறது இந்த 3 யோகங்களும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு  மிகவும் மங்களகரமான நாளாகும்.

அன்றைய தினம் துவாதசி திதி ஆகும்.

இந்த நாளில் தான் கடவுள் விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பாற்கடலை கடைய உதவினார்.  ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால் இந்த நாள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு உகந்ததாகும்.

கோவிலில் உள்ள கருவறையில் ராமர் சிலை அபிஜித் முகூர்த்த நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்த முகூர்த்தத்தில் தான் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.

500 ஆண்டுகளுக்கு முன் முகலாயர்களால் அயோத்தி ராமார் கோவில் தகர்க்கப்பட்டது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு 5௦௦  ஆண்டுகளுக்கு பிறகு  அப்பகுதில் உள்ள 150 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தலைப்பாகை மற்றும் தோலால் ஆன காலணிகளை அணிந்துள்ளனர்.  

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம் என பெயரிட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சாலை வழியாகவும் அயோத்தி ராமர் கோவிலை அடையாலாம். லக்னோ சென்று அங்கிருந்து பைசாபாத் வழியாக சாலை மார்க்கமாக அயோத்திக்கு செல்லலாம். அந்த சாலைகளின் இரு புறங்களிலும் இருக்கும் கடைகள் முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டு ராமர் மற்றும் அனுமாரின் ஓவியம் அனுமார் தண்டம், ராமரின்  கோதண்ட ஆயுதம், வசனங்கள், ஒவியங்கள் ஜெய ஸ்ரீ ராம் என்ற வசனம் போன்றவை நம்மை வரவேற்கின்றன.

ராமர கோவில் ஸ்ரீ ராம குண்டம், மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி மையம் வால்மீகி பிரம்மாண்ட அனுமார் சிலை என கோவில் அமைப்பு 70 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 2.7 ஏக்கர் அளவில் கோவில் அதில் 57,400சதுர அடியில் கோவிலின் அமைப்பு மொத்தம் மூன்று தளங்கள் 161 அடி உயரத்தில் கோவில் அமைய உள்ளது.

சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகள் இருக்கும்

வெள்ளை சலவைக்கல்  கொண்டு கருவறை கட்டப்பட்டுள்ளது  ஆயிரம் ஆண்டுகள் இந்த கோவில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழங்கால கட்டிடக் கலையைப் பின்பற்றி கோவிலை. கட்டியுள்ளார்கள். சிமெண்ட் ஸ்டீல் எதுவுமே இதில் பயன்படுத்தப்படவில்லை. பழங்கால முறைப்படி பாறைகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வெள்ளை சிமென்ட் மற்றும், காப்பர் வயர் பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்து  எடுக்கப்பட்ட 1200 கட்டுமானப் பணியாளர்கள் இந்த கோவில் கட்ட  நியமிகப்பட்டுள்ளர்கள். அவர்கள் பக்தியோடு இதில் ஈடுபட்டுள்ளர்கள்.

பயிற்சி அளிக்கப்பட்ட சிற்பிகள்  நேர்த்தியாக இந்த கோவிலை செதுக்கி உள்ளர்கள.

விநாயகர் சிலை, சிவனின் சிலை பார்வதி சிலை கிருஷ்ணர் சிலை, ராமர் சிலை, இராமாயண கதையை  விளக்கும் சிலைகள்  கோவில் முழுவதும்   உள்ளன.

கோவில் கட்டுமானப் பணிக்காக  அயோத்தியில்   இருந்து 1000 கிலோமேட்டார் தொலைவில் உள்ள ஜெய்பூரின் பன்சி பகல்பூர்  என்ற இடத்தில் இருந்து பிங்க் கற்கள்  கொண்டு வரப்பட்டுள்ளன.

நேபாளத்தில் இருந்து பெரிய சாளகிராம கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவில் திறப்பிற்குபிறகு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு புறங்களிலும் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. .  

நடந்து செல்லும் பிரதான சாலைகளில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனியார் உணவகங்களும்  திறக்கப்பட உள்ளன.

வாகனங்களை நிறுத்த மல்டி லெவல் பார்கிங் வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக இந்த வாகன் நிறுத்துமிடம் வரலாம்.

அயோத்தி ரயில் நிலையம் தற்போது அயோத்தி தாம் ரயில் நிலையம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமாயணத்தி  விளக்கும் வகையில் இராமாயண கதை சிற்பம் ரூபத்தில் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளது. ராமருடைய  பிறப்பு, வனவாசம், ராவண வதம்,  பட்டாபிஷேகம்  என அழகான சிற்பங்கள் உள்ளன.

ராமன் சூரிய வம்சத்தை சார்ந்தவர் என்பதால் சூரிய ஸ்தம்பம் 30 அடி உயரத்தில் அமைக்கபட்டுள்ளது ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்துடன் அயோத்தி முழுவதும் 40 ஸ்தம்பங்கள் அமைக்கபட்டுள்ளது. இது சோலார் எனர்ஜியில் வேலை செய்யும்.

சரயூ நதிக்கரை அழகாக அலங்கரிக்கப்படுள்ளது.  

மிகப் பெரிய திரை அமைத்து ராமாயணம் கதையை திரையிடுகிறார்கள்.  

சரயூ நதியில் விளக்குகளை ஏற்றி பக்தர்கள் தங்கள் வேண்டுகோளை சமர்பிக்க  முடியும்.

சரயூ நதிக்ரையில் போட்டிங் வசதி  உள்ளது.

தசரத மகால் உள்ளது. , வால்மீகி மகால்  சுவர்களில் ராமாயணத்தின் மொத்த  கதைகள் கல் வெட்டுக்களாக பொறிக்கப்பட்டுள்ளது.

அனுமன்  காடி என்ற இடம் சென்று அனுமாரிடம்   அனுமதி பெற்று ராமரைக் காண வேண்டும் என்பது ஐதீகம். போர் முடிந்து அயோத்திக்கு வந்த பிறகு அயோத்தி வாசலில் அனுமன்  குடியிருந்ததாக கூறப்படுகிறது.

யாத்ரிகர்கள் தங்குமிட  வசதிகள் உள்ளன.

அன்னதானக் கூடம் உள்ளது.