Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
Simma Rasi Sani Peyarchi Palangal 2025-2027, சிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
Leo

மீன ராசியில்
சனிப் பெயர்ச்சி 2025

சிம்ம ராசி

உற்சாகமூட்டும் புதுப்பிப்புகள் பெற உங்கள் விவரங்களை இப்போது உள்ளிடவும்

சனி பெயர்ச்சி 2025 பலன்கள்

சிம்ம ராசி
சிம்ம பொதுப்பலன்
General

சிம்ம ராசி அன்பர்களே! மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 8ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார். சனி உங்கள் ராசியிலிருந்து 6 ஆம் வீட்டையும் 7 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார். சனி மெதுவாக நகரக் கூடிய கிரகம். அது உங்கள் ராசிக்கு பாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது எதிர்பார்த்தலை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சிகள் மற்றும் செயலக்ளில் சில தாமதங்கள் மற்றும் தடைகளை எதிர்பார்க்கலாம். எனவே உங்கள் முயற்சிகளின் முடிவிற்கு நீங்கள் காததுக்கொண்டிருக்க வேண்டி வரும். சனி படிப்பினையை தரும் நியாயமான ஆசிரியர். எனவே இந்த நேரத்தில் நீங்கள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்கக் கூடும். தியானம் மற்றும் பிரார்த்தனை எதிர்மறையை நீக்கவும், நேர்மறையை அதிகரிக்கவும், தேவையான அமைதியைக் கொண்டுவரவும் முடியும்.

சிம்ம உத்தியோகம்
Career

உங்கள் உத்தியோகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் வரக்கூடும். பணியிடத்தில் நீங்கள் சவால்களை சந்திக்க நேரும். நீங்கள் திறமையுடன் செயல்படுவீர்கள். என்றாலும் உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பணித் தரம் கேள்விக்குறியாகலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினரின் ஆதரவு கிட்டாது. உங்களால் முடிக்க முடியும் என்ற பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து அளிக்க முயலுங்கள். உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு தெளிவான மற்றும் விரிவான திட்டங்களை அமைக்கவும். பதவி உயர்வுகள் தாமதமாகலாம், ஆனால் அதற்காக வருந்த வேண்டாம். முயற்சி எடுத்து, நிலையான முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் சந்திக்கும் சவால்களை வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றலாம்.

சிம்ம காதல் / குடும்ப உறவு
Love

உறவுகளிடத்தில் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். உறவுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். என்றாலும் அதன் காரணமாக உறவை சீர்குலைக்க விடாதீர்கள். நிதானமாக செயல்படுவதன் மூலம் நிலைமையை சீர்படுத்தலாம். ஆனால் விஷயங்களைச் சீர்படுத்த உங்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டால், அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் அமைதியை குலைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் துணையை தேடும் முயற்சியில் ஈடுபடலாம். உங்கள் இலக்குகளை அடைய வெளிப்படையாக இருப்பது அவசியம்.கண்மூடித்தனமாக பிறரை நம்புவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். உண்மையாக இருப்பவர்களிடத்தில் மட்டும் உறவாடுங்கள். உறவு நிலை ஆரோக்கியமாக இருக்க முதலில் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு உறவாடுங்கள். நெகிழ்வுத்தன்மையைப் பேணுங்கள், மற்றவர்களுக்கு சிறந்த புரிதலுக்கான இடத்தைக் கொடுங்கள், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

சிம்ம திருமண வாழ்க்கை
Family

உங்கள் விருப்பப்படி விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றாலும் பொறுமை மிகவும் அவசியம். இவை தற்காலிக சவால்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தேவைகள் அறிந்து நடந்து கொள்வதன் மூலமும் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலமும் சிறந்த உறவை பராமரிக்கலாம். வளைந்து கொடுக்கும் மனப்பான்மையுடன் இருங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சமரச மனப்பான்மையைக் கடைப்பிடிக்கவும். இது உறவில் மோதல்களை தடுக்கவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவும் உதவும். வதந்திகள் மற்றும் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மற்றும் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளியுங்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தனிப்பட்ட நற்குணங்களைப் பாராட்டுங்கள். இருவரும் வெவ்வேறு விருப்பங்களைக் கொண்டிருப்பது தவறானது என்று அர்த்தமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளவும், நம்பிக்கை மற்றும் மரியாதைக்குரிய உறவுகளின் வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் உணர்வுகள் மற்றும் தேவைகளைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுங்கள். உங்கள் கருத்துகளை அல்லது எண்ணங்களை நம்பகமான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் மதிப்புமிக்க ஆலோசனை மற்றும் ஆதரவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சிம்ம நிதிநிலை
Finances

உங்கள் நிதி இலக்குகளைப் பற்றி தெளிவாக இருங்கள். ஆசைகள் உங்களைத் தூண்டலாம். அதன் காரணமாக நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்யலாம். அதனால் உங்கள் சேமிப்பு கரையலாம். எனவே உங்கள் சேமிப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை கொடுங்கள். முதலீடு சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமுன் முழுமையான ஆராய்ச்சி பரிந்துரைக்கப்படுகிறது, அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். குறிப்பாக ஷேர் மார்க்கெட் ஒப்பந்தங்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளில் பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப லாபம் கிடைக்காமல் போகலாம் என்பதால் புதிய முயற்சிகளுக்கு இது சரியான நேரமாகத் தெரியவில்லை. மற்றவர்களுக்கு நிதி உதவி வழங்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அந்தப் பணம் பெறுவதில் நீங்கள் தடைகளை சந்திக்க நேரிடலாம். பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் இருங்கள் மற்றும் உங்கள் நீண்ட கால பொருளாதார நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

சிம்ம மாணவர்கள்
Education

படிப்பில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்கள் கனவுகளை அடைய உதவும். உங்கள் படிப்பில் சிறப்பாக பிரகாசிக்க உங்கள் நேரத்தை உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் முதலீடு செய்யுங்கள். உங்கள் கற்றலை மேம்படுத்த உங்கள் ஆராய்ச்சி திறன்களை ஒரு கருவியாக பயன்படுத்தவும். உங்கள் இலக்குகள் மற்றும் உங்கள் படிப்பில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தெளிவுடன் செயல்படுங்கள். சவால்கள் இருக்கலாம் ஆனால் அந்த தற்காலிக சோதனையால் மனதைத் தளர விடாதீர்கள். மாறாக, உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். வெளிநாட்டில் தங்கள் படிப்பைத் தொடர விரும்புவோர், நீங்கள் சேரவிருக்கும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தைப் பற்றி சாத்தியமான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யுங்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தோன்றும் மாணவர்கள் தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சிம்ம ஆரோக்கியம்
Health

வேலை வேலை என்று இருக்காமல் ஓய்விற்கும் நேரம் ஒதுக்குங்கள். வேலைக்கும் ஓய்வுக்கும் இடையே சமநிலையைக் கண்டறியவும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொழுதுபோக்கு நிகழ்சிகளில் ஈடுபடுவது அல்லது வெறுமனே ஓய்வெடுப்பது என நீங்கள் விரும்பும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். வழக்கமான உணவை உட்கொள்வது உங்கள் ஆற்றலை நிலையானதாக வைத்திருக்கலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். வேக வரம்பிற்குள் இருங்கள் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். சிறிய காயங்கள் கூட மெதுவாக குணமடையக்கூடும், மேலும் நீங்கள் முழுமையாக குணமடைய நீண்ட நேரம் ஆகலாம். பெரும்பாலான நோய்கள் சிகிச்சையளிக்கக்கூடியவை என்றாலும், நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பது சவாலானதாக இருக்கலாம். யோகா அல்லது தியானம் போன்ற செயல்பாடுகள் உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், இது வலுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் காரணிகளாக செயல்படும்.

சிம்ம பரிகாரம்
Remedies

சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும்.

சனிக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் செய்யுங்கள்.

சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.

நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுங்கள்.

முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2025 – 2027 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2025 – 2027 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2025 – 2027 பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனிவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்