தமிழ் மாதம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆடி மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று கூறும் அளவிற்கு விசேஷம் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டிய மாதம் ஆகும். தெய்வ வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மாதம் இது. இந்த மாதம் தான் அம்மன் தவம் ஏற்ற நாள். அது தான் ஆடித் தபசு நாள். முருகப் பெருமானுக்கு விஷேமான ஆடி கிருத்திகை வருவதும் இந்தமாதம் தான். சிவ பெருமானுக்கு விசேஷமான ஆடிப் பௌர்ணமி வருவதும் இந்த மாதம் தான். எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான அற்புத நாட்கள் இந்த மாதத்தில் உள்ளன. வரலக்ஷ்மி நோன்பு, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, ஆடிப்பெருக்கு போன்ற பல விசேஷங்கள் இந்த மாதத்தில் வரும். இந்த மாதத்தில் தான் கூழ் வார்த்தல், பூக்குழி இறங்குதல் போன்ற விசேஷங்கள் நடைபெறும்.
ஆடி மாத முதல் நாளில் அம்பிகையை வழிபட வேண்டும். அது மட்டும் அன்றி தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும். குறிப்பாக இந்த நாளில் குல தெய்வ வழிபாடு கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இந்த நாளில் மட்டும் இன்றி இந்த மாதம் முழுவதும் வழிபடுவது நல்லது. இந்த மாதம் முழுவதும் தினமும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு. இந்த மாதம் நாம் அம்பிகையின் பல்வேறு வடிவங்களை வழிபட வேண்டும். எல்லை தெய்வங்கள் மற்றும் சப்த மாதர்களை வணங்குவது அவர்களின் அருளைப் பெற்றுத் தரும். ஆடி மாதத்தில் முப்பெரும் தேவியரை வழிபடலாம்.
ஆடி மாதம் அனைத்து நாட்களும் விசேஷம் என்றாலும் மூன்று கிழமைகள் மிகவும் விசேஷமான கிழமைகள் ஆகும். அவை செவ்வாய் வெள்ளி, மற்றும் ஞாயிறு. ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு குத்து விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இதே போல ஆடி செவ்வாய் என்று அம்மனுக்கு அரச்சனை செய்து வழிபடுவது நல்லது. அன்றைய தினம் முருகனுக்கு வழிபாடு செய்வது அற்புதமான பலன்களை பெற்றுத் தரும். அன்றைய தினம் முருகனை வணங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீரும். குறிப்பாக கடன் பிரச்சினைகள் தீரும். வீடு நிலம் சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம். ஞாயிற்றுக் கிழமை அன்று அம்மனுக்கு விரதம் இருந்து வேண்டிக் கொண்டு கூழ் வார்ப்பதன் மூலம் நோய்கள் அண்டாது. புண்ணியம் சேரும்.
அம்மன் அருள் எங்கும் வியாபித்து இருக்கும் ஆடி மாதத்தில் அனுதினமும் அம்மனை வழிபட்டு அவளது அருளைப் பெறுவோம்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025