கன்னி ராசி அன்பர்களே! மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நடக்கும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.
இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு பொறுப்புகள் இருக்கலாம். அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கலாம். உங்கள் முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை நீங்கள் சந்திக்கலாம். இந்த கடினமான காலத்தில் நீங்கள் தன்னம்பிகையுடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். இறைவனை வழிபடுவதன் மூலம நீங்கள் இந்த காலக்கட்டத்தை எளிதில் கடக்கலாம்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரை தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்பார்க்கலாம். என்றாலும் மனம் தளராதீர்கள். நேர்மறையாக இருங்கள், பணிகள் மலை போல குவியலாம். எனவே குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பணிகளை முடிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சில சக ஊழியர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்கலாம். தொழில் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். விதிமுறைகளை நன்கு அறிந்து கொண்டு அதன் படி நடக்கவும். தவறான புரிந்துணர்வைத் தவிர்க்க வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தொடர்பு கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் குறுக்குவழிகள் பலனைத் தர வாய்ப்பில்லை. விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெகுமதியைப் பெற்றுத் தர முடியும்.
இது காதலுக்கு சாதகமான காலக்கட்டம். ஒற்றையர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிணைப்பை வலுப்படுத்தவும் சாதகமாக இருக்கும். உங்கள் காதல் உறவு அர்த்தமுள்ள வரவாக இருக்க ஒளிவு மறைவின்றி செயல்பட வேண்டும். உங்கள் காதலுக்கு பெற்றோரின் ஆதரவு கிட்ட தாமதமாகலாம். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் . இது இறுதியில் உங்கள் உறவுகளை பலப்படுத்தலாம்.எதற்கும் அவசரப்படாதீர்கள். மன அமைதி காண்பதில் கவனம் செலுத்துங்கள். சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். விரக்தி அடையாதீர்கள். சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். அது உங்கள் உறவுகளுக்கு மதிப்பு சேர்க்கும் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
இந்த காலக்கட்டத்தில் கணவன் மாணவி உறவு சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்ல புரிந்துணர்வு வளரும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக செயல்படலாம். அவர் பாசத்தை நீங்கள் உணரலாம். பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கலாம். சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் சமரசத்தைக் காணலாம். உறவில் மன அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரலாம். சவாலான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவும். இது சவால்களை எளிதாக்கும் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும்.
இந்த காலக்கட்டத்தில் உங்கள் சம்பாதிக்கும் திறன் கூடும். வருமானம் சீராக இருக்கும். உங்கள் எதிர்கால நலன் குறித்து நீங்கள் பணத்தை சேமிக்கலாம். இது எதிர்காலத்தை திட்டமிட சிறந்த நேரமாகும். புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். சில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நிதி விஷயங்களில் முனைப்புடன் இருப்பது உங்களுக்கு மன அமைதியைத் தரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நல்வாழ்வு கருதி அல்லது உங்கள் சொந்த நலன் கருதி நீங்கள் அதிக முதலீடு செய்யலாம். பட்ஜெட்டை மனதில் கொண்டு நிதி விஷயங்களை கையாள்வது நன்மை தரும். ஊக வணிகம் மற்றும் சரக்கு வர்த்தகம் நேர்மறையான முடிவுகளைத் தரலாம், ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்கவும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உங்கள் எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மாணவர்கள் கடினமாக உழைத்து சாதனை புரியலாம். மாணவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு காணப்படும். அதன் மூலம் நல்ல பலன் கிட்டும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கவனமாக இருந்தால் எளிதில் வெற்றி காண இயலும். கன்னி ராசி மாணவர்களில் ஓரு சிலர் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் பிரகாசிக்கலாம். ஆராய்ச்சித் துறை மாணவர்கள். தங்கள் முயற்சி மூலம் நல்ல முடிவுகளையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கலாம். உங்கள் அர்ப்பணிப்பு உங்கள் துறையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி தேடுபவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகத் தெரிகிறது. உங்கள் அறிவை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், மற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். இது பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.
நாம் மேம்பட்ட வாழ்க்கை வாழ நமது ஆரோக்கியம் இடம் அளிக்க வேண்டும். எனவே உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதனை நன்கு பேணிக் காக்க வேண்டும். அதிக பணிகளால் சோர்வு ஏறப்டாமல் இருக்க முறையான தூக்கம் மேற்கொள்ள வேண்டும். சிறிய உடல் உபாதைகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள் வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சீரான உணவைப் பராமரிக்கவும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும். உங்கள் முழங்கால்கள் மற்றும் எலும்புகளுக்கு கவனம் செலுத்துங்கள். வலுவான எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு உங்கள் உணவில் பச்சை இலை காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள். மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025