நவகிரகங்களுள் நடுநாயகமாக இருப்பது சூரியன் ஆகும். சூரியனுக்கு ஜோதிடத்தில் ஆத்மகாரகன் என்னும் பெயர் உண்டு. சூரியனின் சஞ்சாரம் ஒரு ராசியில் ஒரு மாத காலம் ஆகும். பன்னிரண்டு ராசிகளையும் சூரியன் சுற்றி வர ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும்.
சூரியன் பன்னிரண்டு ராசிகளிலும் நிற்கும் தன்மைக்கு பலன்கள் சொல்லப்படுகின்றன சூரியன் 12 ராசிகளில் நின்றால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று காணலாம்.
சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உடல் நல பாதிப்பு, மனக்கவலை, உற்றார், உறவினர்களுடன் விரோதம், அதிகமான அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்காது. தலைவலி மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் கெட்ட குணம், தேவையற்ற கெட்ட நடவடிக்கைகள், நஷ்டம், அலைச்சல், குடும்பத்தில் அமைதி குறைவு, கண்களில் பாதிப்பு ஏற்படும். உங்கள் வாக்கில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல தேக ஆரோக்கியம், முயற்சிகளில் வெற்றி, சகோதரர்களால் அனுகூலம், சந்தோஷம், உற்றார், உறவினர்களுடன் நல்ல உறவு, நட்பு, செல்வம், செல்வாக்கு எடுக்கும் காரியம் யாவும் வெற்றியை உண்டாகும். பிரச்சினைகள் எதுவாயினும் அதனை எளிதில் தீர்ப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது மனதில் கஷ்டம், குடும்பத்தில் தேவையற்ற கலகம், எடுக்கும் காரியங்களில் தடை, அலைச்சல் உண்டாகும்.பதட்டம் கவலை இருக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும்.
உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் உத்தியோகத்தில் சிரமங்களை சந்திப்பீர்கள். சோம்பல், கஷ்டம், பொருள் நஷ்டம், அதிகமாக செலவழிக்கும் நிலை, நோய் வாய்ப்படும் அமைப்பு போன்றவை உண்டாகும்.உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் நோய்கள் குறையும், பலமும் வலிமையும் கூடும், பகைவர்களை வெல்லும் ஆற்றல் எடுக்கும் காரியங்களில் வெற்றி, செல்வச் சேர்க்கை உண்டாகும்.
உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் சவாலான காலக்க்கட்டமாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், ஜீரணமின்மை விஷப் பூச்சிகளால் கண்டம், காயம்படும் அமைப்பு, கணவன் மனைவி இடையே பிரச்சனை, குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மார்பு நோய்கள் உண்டாகும் அமைப்பு ஏற்படும். மந்தமான முன்னேற்றம் இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் இருக்கும்.
உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பெண்களுடன் மனஸ்தாபம், கஷ்டம் கலகம் உடல் நலப் பாதிப்புகள் உண்டாகும். வாழ்வில் தடைகளை சந்திப்பீர்கள். சட்டச் சிக்கல்களை சந்திக்க நேரலாம். தேவையற்ற செலவுகளும் பண விரயங்களையும் சந்திக்க நேரும்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டல் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் பணியிடத்தில் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள். நிதி நெருக்கடிகள் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கும். நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம்.
உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் நீங்கள் அதிக நற்பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் சிறப்பான பல நற்பலன்களை அனுபவிப்பீர்கள். அதிக முயற்சிகள் இன்றி எந்தவொரு விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள்.
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் எதிர்பாராத ஆதாயங்கள் கிட்டும். உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள். ஊதிய உயர்வு சம்பள உயர்வு பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் மூலம் லாபம் கிட்டும் பயணங்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நற்பலன்கள் குறைவு. அமைதியின்மை, தூக்கமின்மை இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். எந்தவிதமான முதலீடுகளையும் மேற்கொள்ளுதல் கூடாது.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025