பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு – Palli Vilum Palan For Women | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு

Posted DateFebruary 22, 2024

ஜோதிடத்தில் பல சாஸ்திரங்கள் இருப்பது போல கௌளி சாஸ்திரம்  என்ற ஒரு சாஸ்திரத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்தினார்கள். கௌளி சாஸ்திரம் என்பது பல்லி குறித்த சாஸ்திரம் ஆகும்.  இது சகாதேவனால் இயற்றப்பட்ட சாஸ்திரம் என்று நம்பப்படுகின்றது.

பல்லி நம் உடல் மீது விழும் போது அது நம் உடலில் விழும் இடத்தைப் பொறுத்து நல்ல பலன்கள் மற்றும் தீய பலன்கள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

இந்த பதிவில் பெண்களுக்கு பல்லி விழும் பலன் பற்றிக் காண்போம்

Lizard Falling Is For Women

​பெண்களுக்கான பல்லி விழும் பலன்கள் :

தலை – மரண பயம்

நெற்றி –  நோய்

இடது கண்–  நீங்கள் விரும்பக்கூடிய நபர் உங்களை விரும்புவார்

வலது கண் – மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வலது கன்னம் –  உங்களுக்கோ அல்லது  நெருங்கியவருக்கோ அழகான ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

வலது காது – பொருளாதார மேன்மை

மேல் உதடு – அவமானங்களை சந்திக்க நேரும்.  

கீழ் உதடு – புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

முதுகு – மரண செய்தி வரும்

வலது கை நகம் – நஷ்டம்

இடது கை நகம்  – செலவு அதிகரிக்கும்.

வலது கைகள் – பொருளாதார தடை ஏற்படும

இடது கை – மன உளைச்சல் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.

விரல்கள் – புதிய நகை, ஆடைகளை வாங்க வாய்ப்புள்ளது.

வலது தோள் பட்டை – உங்கள் காதல் துணையுடன் பிரச்னை ஏற்படலாம்.

இடது தோள்பட்டை  – காதல் சிறப்பான நிலைக்கு செல்லும்.

தொடை – மகிழ்ச்சியான சூழ்நிலையை விரைவில் சந்திக்கலாம்.

முழங்கால் – பிறரின் அதிக அன்பு கிடைக்கும்

மூட்டு பகுதி – கூடிய விரைவில் பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும்.

கால் – முயற்சிகளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

கால் விரல்கள் – ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

கெண்டைக்கால் – வீட்டில் விருந்தினர்களின் வருகை