மேஷம் ராசி - பொதுப்பலன்கள்
இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். தெய்வ அருளால் இம்மாதம் நீங்கள் செல்வ வளம் பெறுவீர்கள். என்றாலும் உங்கள் முயற்சியில் நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரும். மாதத்தின் முதற் பாதியில் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். அதனால் பாதுகாப்பின்மை மற்றும் தனிமை உணர்வு காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை உங்களால் பயன்படுத்திக் கொள்ள இயலாது. மாதத்தின் பிற்பகுதியில் விளைவுகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
மேஷம் ராசி - காதல் / திருமணம்
திருமணம் போன்ற சுப நிகழ்சிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி மிகவும் உகந்ததாக உள்ளது. உறவுப் பிரச்சினைகளை நீங்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். திருமண உறவில் நல்லிணக்கம் காண குறிப்பாக மாதத்தின் பின் பகுதியில் நீங்கள் உங்கள் துணையை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பிரச்சினைகள் உருவாகலாம்.
திருமண நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : ராகு ஹோமம்மேஷம் ராசி - நிதி நிலைமை
மாதத்தின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதியில் பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பும் முதலீடுகளில் லாபம் காண்பதற்கான வாய்ப்பும் உள்ளது. என்றாலும், மாதத்தின் முதற் பாதி பகுதியில் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும் பொறுப்புகளும் காணப்படும். அதனை சமாளிப்பதை நீங்கள் கடினமாக உணர்வீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் ஊக்கத் தொகையும் சலுகையும் பெறுவீர்கள்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குபேர ஹோமம்மேஷம் ராசி- வேலை
மாதத்தின் முதல் பாதி பகுதியில் உங்கள் அலுவலக வாழ்க்கை சாதகமாக இருக்காது. பணிகள் நிலுவையில் காணப்படும். அது உங்களுக்கு கவலை அளிக்கும். இந்த சமயத்தில் உங்கள் கடின உழைப்பிற்கும் அங்கீகாரம் கிடைக்காது. மாதத்தின் பின் பாதியில் உங்கள் பணியில் லாபமும் வளர்ச்சியும் காண்பீர்கள்.
மேஷம் ராசி - தொழில்
மாதத்தின் முதல் பாதியில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.தற்போதைய நடைமுறைக்கேற்ப உங்கள் வணிக உத்திகளை மாற்றுவது லாபத்தை பெற்றுத் தரும். மாதத்தின் கடைசி பகுதியில் சிறந்த லாபம் கிடைக்கும்.
மேஷம் ராசி - தொழில் வல்லுநர்கள்
உங்கள் கடின உழைப்பிற்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள். குறைந்த முயற்சியில் அதிக வாய்ப்புகள் பெறுவீர்கள். திடீர் வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம். அதில் நீங்கள் முனைந்திருப்பீர்கள். கடின உழைப்பிற்குப் பிறகு தான் வெற்றி பெறுவீர்கள்.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : சனி பகவான் ஹோமம்மேஷம் ராசி - ஆரோக்கியம்
மாதத்தின் முதற் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் மிதமாக இருக்கும். சில பிரச்சினைகளால் நித்திரை பாதிக்கப்படும். உங்கள் கண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தலைவலி மற்றும் உயரழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பரிகாரம் : ஸ்ரீ தன்வந்தரி ஹோமம்மேஷம் ராசி - மாணவர்கள்
கல்வியில் சிறப்பாகத் திகழ நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக மாதத்தின் முன் பகுதியில். இல்லையெனில் நீங்கள் உங்கள் முழுத்திறமையை பயன்படுத்த இயலாது. மாதத்தின் இறுதியில் நீங்கள் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்:
1,3,4,6,11,12,13,14,18,19,21,22,23.
அசுப தினங்கள்:
2,5,7,8,9,10,15,16,17,20,24,25,29,31.
Tags: 2018 Mesha Rasi Palan March March Month Mesha Palan 2018 Matha Rasi Palan 2018 Mesha Tamil Rasi Palangal 2018 March Mesha March Month Mesha Palan 2018 2018 Mesha Rasi Palan March Matha Rasi Palan 2018 Mesha Rasi Palangal 2018 March Mesha
Leave a Reply