வாஸ்து செய்யும் நாட்கள் 2025

ஒரு நிலம் அல்லது வீடு வாங்கும் போது மிகவும் பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம் ஆகும். அதில் முதலாவதாக இருப்பவது வாஸ்து நாட்கள் ஆகும். வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. வாஸ்து நாளில் புதிய வீடு கட்ட, புதிய மனை வாங்க, புதிய நிலம் வாங்க, பூமி பூஜை செய்வது மிகவும் சிறப்பானது. வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்து, கட்டிட பணிகளை துவங்கினால் அவைகள் எந்த வித தடையும் இல்லாமல் சிறப்பாக நிறைவடையும் என்பது ஐதீகம். வாஸ்து நாளில் வீட்டை திருஷ்டி சுற்றி போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி தரித்திரம் நீங்கும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து நாட்கள் வருகின்றன. வாஸ்து நாளில் செய்யக்கூடிய பணிகள்: புதிய வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்தல், கட்டட பணியை தொடங்குதல், வாசக்கால் வைக்க, புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தல்.

