Theipirai Ashtami Dates | தேய்பிறை அஷ்டமி நாட்கள் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தேய்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமி (Theipirai Ashtami Dates)

சந்திரன் வளர்ந்து தேயும் கட்டத்தின் எட்டாவது நாள் அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தேய்பிறையில் வரும் இந்த நாள் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

January 2025
21 Tuesday
ராகுகாலம் 03:08 PM - 04:21 PM
குளிகை 12:43 PM - 01:56 PM
எமகண்டம் 10:18 AM - 11:31 AM
திதி ஆரம்பம்: Jan.21,2025 02:10 AM
திதி முடிவு: Jan.22,2025 04:48 AM
February 2025
20 Thursday
ராகுகாலம் 02:06 PM - 03:27 PM
குளிகை 10:04 AM - 11:24 AM
எமகண்டம் 07:22 AM - 08:43 AM
திதி ஆரம்பம்: Feb.19,2025 11:28 PM
திதி முடிவு: Feb.21,2025 01:28 AM
March 2025
22 Saturday
ராகுகாலம் 10:37 AM - 12:08 PM
குளிகை 07:35 AM - 09:06 AM
எமகண்டம் 03:09 PM - 04:40 PM
திதி ஆரம்பம்: Mar.21,2025 06:54 PM
திதி முடிவு: Mar.22,2025 07:53 PM
April 2025
21 Monday
ராகுகாலம் 08:29 AM - 10:10 AM
குளிகை 03:11 PM - 04:51 PM
எமகண்டம் 11:50 AM - 01:30 PM
திதி ஆரம்பம்: Apr.20,2025 09:31 AM
திதி முடிவு: Apr.21,2025 09:28 AM
May 2025
20 Tuesday
ராகுகாலம் 05:04 PM - 06:52 PM
குளிகை 01:28 PM - 03:16 PM
எமகண்டம் 09:52 AM - 11:40 AM
திதி ஆரம்பம்: May 19,2025 08:22 PM
திதி முடிவு: May 20,2025 07:25 PM
June 2025
18 Wednesday
ராகுகாலம் 01:33 PM - 03:24 PM
குளிகை 11:41 AM - 01:33 PM
எமகண்டம் 07:59 AM - 09:50 AM
திதி ஆரம்பம்: Jun.18,2025 04:05 AM
திதி முடிவு: Jun.19,2025 02:25 AM
July 2025
18 Friday
ராகுகாலம் 11:49 AM - 01:38 PM
குளிகை 08:12 AM - 10:00 AM
எமகண்டம் 05:15 PM - 07:04 PM
திதி ஆரம்பம்: Jul.17,2025 09:39 AM
திதி முடிவு: Jul.18,2025 07:32 AM
August 2025
16 Saturday
ராகுகாலம் 10:12 AM - 11:54 AM
குளிகை 06:49 AM - 08:31 AM
எமகண்டம் 03:17 PM - 04:59 PM
திதி ஆரம்பம்: Aug.15,2025 02:20 PM
திதி முடிவு: Aug.16,2025 12:04 PM
September 2025
14 Sunday
ராகுகாலம் 06:04 PM - 07:37 PM
குளிகை 04:32 PM - 06:04 PM
எமகண்டம் 01:27 PM - 02:59 PM
திதி ஆரம்பம்: Sep.13,2025 07:34 PM
திதி முடிவு: Sep.14,2025 05:36 PM
October 2025
13 Monday
ராகுகாலம் 09:08 AM - 10:31 AM
குளிகை 02:40 PM - 04:04 PM
எமகண்டம் 11:54 AM - 01:17 PM
திதி ஆரம்பம்: Oct.13,2025 02:54 AM
திதி முடிவு: Oct.14,2025 01:39 AM
November 2025
12 Wednesday
ராகுகாலம் 12:15 PM - 01:30 PM
குளிகை 11:01 AM - 12:15 PM
எமகண்டம் 08:33 AM - 09:47 AM
திதி ஆரம்பம்: Nov.11,2025 12:39 PM
திதி முடிவு: Nov.12,2025 12:28 PM
December 2025
11 Thursday
ராகுகாலம் 01:34 PM - 02:43 PM
குளிகை 10:07 AM - 11:16 AM
எமகண்டம் 07:48 AM - 08:57 AM
திதி ஆரம்பம்: Dec.11,2025 03:27 AM
திதி முடிவு: Dec.12,2025 04:27 AM

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணபட்ச அஷ்டமியின் சிறப்பம்சம்

கிருஷ்ணபட்ச அஷ்டமி

கிருஷ்ணபட்ச அஷ்டமி என்பது 23 வது திதி ஆகும். அன்றைய தினத்தை சிவ பெருமானின் உக்கிர வடிவமான கால பைரவர் ஆள்வதால் இதனை “கால அஷ்டமி” என்று கூறுவார்கள். தமிழில் வைரவர் என்றும் அழைக்கப்படும் பைரவர், சிவனின் கோபத்தின் வெளிப்பாடாகும். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுவது, தீய கர்மா, எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் எதிர்மறை அதிர்வுகளை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றும். அன்று கடவுளை திருப்திப்படுத்துவது மனதில் நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கும். பொதுவாக, இந்த நாள் எந்த ஒரு புதிய முயற்சி, கல்வி, திருமணம், கட்டுமானம் அல்லது பயணம் தொடங்குவதற்கு நாள் நல்லதாக கருதப்படுவதில்லை. இந்நாளில் கால பைரவரை வழிபடுவதும் தெருநாய்களுக்கு உணவளிப்பதும் சிறந்த செயலாகும். கார்த்திகை (நவ - டிசம்பர்) மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது 'கால பைரவ ஜெயந்தி' என்று அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணபட்ச அஷ்டமியின் சடங்குகள்

பைரவரின் பக்தர்கள் அன்றைய நாளில் அதிகாலை நீராடிவிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை செய்து அருள் பெறலாம். மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளமான வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களைப் பெற மக்கள் அன்றைய நாள் முழுவதும் கடுமையான விரதத்தை கடைபிடிக்கலாம். கால பைரவர் கோயில்களுக்குச் சென்று அவரைத் துதிக்கும் மந்திரங்களை உச்சரித்து இறைவனை சாந்தப்படுத்தலாம். கால பைரவரின் வாகனமாக நாய் கருதப்படுவதால், தெருநாய்களுக்கு உணவளிப்பது நன்மையாக கருதப்படுகிறது. தர்ப்பணம் மற்றும் தெய்வ பக்தியுள்ள பிராமணர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நாள் ஐதீகமானது.

கிருஷ்ணபட்ச அஷ்டமியுடன் தொடர்புடைய பண்டிகைகள்

பல முக்கியமான பண்டிகைகள் தேய்பிறை அஷ்டமி அன்று வரும்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி - கிருஷ்ணரின் பிறந்த நாள்

திரிலோச்சன அஷ்டமி - சிவன் மற்றும் பார்வதி தேவியை வழிபடும் நாள் - "திரி" என்றால் "மூன்று" மற்றும் "லோச்சன்" என்றால் "கண்". இந்த திருவிழா கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் குறிக்கும் மூன்று கண்கள் கொண்ட கடவுளுக்கு மட்டுமே

பைரவ அஷ்டமி (கால பைரவ ஜெயந்தி) - சிவபெருமானின் உக்கிர வெளிப்பாடான கால பைரவரின் பிறந்த நாள்.

கிருஷ்ணபட்ச அஷ்டமி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் பலன்கள்:

  • கிருஷ்ணபட்ச அஷ்டமியன்று கால பைரவரை வழிபடுவதால் பின்வரும் பலன்கள் உங்களுக்கு கிட்டும்.
  • சிக்கல்கள் தீரும். தடைகள் அகலும்
  • செழிப்பு, ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அளிக்கும்.
  • கால பைரவர் மற்றும் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
  • நோய்களில் இருந்து நிவாரணம் கிட்டும் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் பாவங்களிலிருந்து விடுபடலாம்.