பௌர்ணமி 2024 தேதிகள் | Pournami Dates in Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பௌர்ணமி பௌர்ணமி (Pournami Dates)

இந்த பக்கத்தில் நீங்கள் காண்பது இந்த வருடத்திற்கான பௌர்ணமி நாட்கள். எந்த மாதத்தில் எந்த தினத்தில் பௌர்ணமி  வரும் என்பதை பற்றி இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். பௌர்ணமி தொடங்கும் நேரமும் முடியும் நேரமும் அளித்துள்ளோம்.

January 2026
02 Friday
ராகுகாலம் 11:26 AM - 12:36 PM
குளிகை 09:08 AM - 10:17 AM
எமகண்டம் 02:54 PM - 04:04 PM
திதி ஆரம்பம்: Jan.02,2026 08:23 AM
திதி முடிவு: Jan.03,2026 05:02 AM
February 2026
01 Sunday
ராகுகாலம் 04:31 PM - 05:46 PM
குளிகை 03:16 PM - 04:31 PM
எமகண்டம் 12:45 PM - 02:01 PM
திதி ஆரம்பம்: Jan.31,2026 07:22 PM
திதி முடிவு: Feb.01,2026 05:09 PM
March 2026
02 Monday
ராகுகாலம் 08:32 AM - 09:56 AM
குளிகை 02:08 PM - 03:32 PM
எமகண்டம் 11:20 AM - 12:44 PM
திதி ஆரம்பம்: Mar.02,2026 07:25 AM
திதி முடிவு: Mar.03,2026 06:37 AM
April 2026
01 Wednesday
ராகுகாலம் 01:36 PM - 03:10 PM
குளிகை 12:02 PM - 01:36 PM
எமகண்டம் 08:54 AM - 10:28 AM
திதி ஆரம்பம்: Mar.31,2026 09:36 PM
திதி முடிவு: Apr.01,2026 10:11 PM
May 2026
01 Friday
ராகுகாலம் 11:46 AM - 01:29 PM
குளிகை 08:19 AM - 10:03 AM
எமகண்டம் 04:55 PM - 06:38 PM
திதி ஆரம்பம்: Apr.30,2026 11:42 AM
திதி முடிவு: May.01,2026 01:22 PM
May 2026
30 Saturday
ராகுகாலம் 09:50 AM - 11:40 AM
குளிகை 06:11 AM - 08:00 AM
எமகண்டம் 03:19 PM - 05:09 PM
திதி ஆரம்பம்: May 30,2026 02:28 AM
திதி முடிவு: May 31,2026 04:44 AM
June 2026
29 Monday
ராகுகாலம் 08:02 AM - 09:53 AM
குளிகை 03:26 PM - 05:17 PM
எமகண்டம் 11:44 AM - 01:35 PM
திதி ஆரம்பம்: Jun.28,2026 05:36 PM
திதி முடிவு: Jun.29,2026 07:56 PM
July 2026
29 Wednesday
ராகுகாலம் 01:38 PM - 03:24 PM
குளிகை 11:51 AM - 01:38 PM
எமகண்டம் 08:19 AM - 10:05 AM
திதி ஆரம்பம்: Jul.28,2026 08:49 AM
திதி முடிவு: Jul.29,2026 10:35 AM
August 2026
27 Thursday
ராகுகாலம் 03:11 PM - 04:49 PM
குளிகை 10:16 AM - 11:54 AM
எமகண்டம் 06:59 AM - 08:38 AM
திதி ஆரம்பம்: Aug.26,2026 11:39 PM
திதி முடிவு: Aug.28,2026 12:18 AM
September 2026
26 Saturday
ராகுகாலம் 10:25 AM - 11:54 AM
குளிகை 07:27 AM - 08:56 AM
எமகண்டம் 02:51 PM - 04:20 PM
திதி ஆரம்பம்: Sep.25,2026 01:37 PM
திதி முடிவு: Sep.26,2026 12:48 PM
October 2026
25 Sunday
ராகுகாலம் 05:14 PM - 06:33 PM
குளிகை 03:54 PM - 05:14 PM
எமகண்டம் 01:15 PM - 02:35 PM
திதி ஆரம்பம்: Oct.25,2026 02:26 AM
திதி முடிவு: Oct.26,2026 12:11 AM
November 2026
24 Tuesday
ராகுகாலம் 02:41 PM - 03:53 PM
குளிகை 12:18 PM - 01:30 PM
எமகண்டம் 09:55 AM - 11:06 AM
திதி ஆரம்பம்: Nov.23,2026 01:12 PM
திதி முடிவு: Nov.24,2026 09:53 AM
December 2026
23 Wednesday
ராகுகாலம் 12:31 PM - 01:39 PM
குளிகை 11:22 AM - 12:31 PM
எமகண்டம் 09:04 AM - 10:13 AM
திதி ஆரம்பம்: Dec.23,2026 12:17 AM
திதி முடிவு: Dec.23,2026 08:28 PM

பௌர்ணமி

நிலாக்காலம் எல்லாமும் தமிழர்களுக்கு விழாக்காலம் என்பார்கள். முழுமதி அல்லது நிறை மதி எனப்படுவதே பௌர்ணமி. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். அது போல ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமிக்கு ஒவ்வொரு சிறப்பு உண்டு. பெளர்ணமி நாளில் விரதம் இருந்து, வழிபாடு செய்தால் அனைத்து விதமான செல்வ நலன்களும் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை. எந்த மாதத்தில் எந்த தினத்தில் பௌர்ணமி வரும் என்பதை பற்றி இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். பௌர்ணமி தொடங்கும் நேரமும் முடியும் நேரமும் அளித்துள்ளோம். அந்ததந்த இடத்தின் சூரிய உதயத்திற்கேற்ப நேரம் மாறுபடும் என்பதால் உங்கள் இடத்திற்கான நேரக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். சதுர்த்தசிக்கு அடுத்து பௌர்ணமி திதி வரும். பௌர்ணமி ஆரம்பிக்கும் நேரத்தைப் பொறுத்து அன்று விரதம் இருக்கலாம். சில சமயங்களில் சதுர்த்தசி அன்று மாலையே பௌர்ணமி வரலாம். மாலையில் வந்தால் அன்று பௌர்ணமி விரதம் இருப்பது உசிதமல்ல. மறு நாள் தான் விரதம் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சத்திய நாராயண பூஜை செய்யும் போது பௌர்ணமி நேரத்தை சரியாகப் பார்த்து நடத்த வேண்டும்.

பெளர்ணமி வழிபாடு பல காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.பெளர்ணமி தினத்தில் சந்திரன் தனது பிரகாச ஒளியை பரிபூரணமாக வழங்குவதைப் போல, பெளர்ணமி விரத வழிபாடு பரிபூரண பலனைத் தரவல்லது.

பொதுவாகப் பௌர்ணமி அன்று அம்மனுக்கு வழிபாடு செய்வது வழக்கமாகும். பௌர்ணமி தினத்தன்று அம்மன் கோயில்களில் சிறப்புப் பூஜை, விளக்குப் பூஜை மற்றும் அன்னதானம் செய்யப்படுகின்றன. இந்நாளில் பெண்கள் விரதம்  இருந்தால் அவரது குடும்பத்தினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

பௌர்ணமி நாள் இறை வழிபாட்டிற்கு உகந்த நாள். பொதுவாக அன்று அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கம். அது மட்டும் இன்றி அன்று கிரிவலம் செய்வது மிகவும் பலன் தரத்தக்கது. ஆலய தரிசனம் செய்வதும் கோபுர தரிசனம் செய்வதும் பல மடங்கு இறை ஆசிகளை பெற்றுத் தர தக்கது. அன்று தான் சத்தியநாராயண பூஜை செய்வார்கள். ஆலயத்தில் மட்டும் இன்றி வீட்டிலும் இந்த பூஜையை செய்யலாம். வீட்டில் செய்ய இயலாவிட்டால் பெருமாள் கோவிலில் நடை பெரும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது. காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல், சிவபெருமானை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது மற்றும் மகான்களின் தரிசனம் சிறப்பான பலன்களை தரும்.

1. சித்திரை : சித்திரை மாதம் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் நாம் முறையாக அம்மனை பூஜை செய்து வழிபட்டால் சகல சௌபாக்கிங்களும் கிட்டும். குறிப்பாக குழந்தைப் பேறு கிட்டும். அன்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு எலுமிச்சை சாதம், பானகம், ஏலக்காய், கிராம்பு நெய்வேத்தியம் செய்ய செல்வம் நிலைக்கும். தானியம் பெருகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

2. வைகாசி : தமிழ் மாதத்தின் இரண்டாவது மாதமான வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து பூஜை செய்தால் முக்தி கிட்டும். மறுபிறவி இல்லாத நிலை அடையலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், விளாம்பழமும் வைப்பது சிறப்பானது. இதனால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

3. ஆனி : இந்ந மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும். இன்றைய தினம் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். ஆனி பௌர்ணமி வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம்.இந்நாளில் சாவித்திரி பூஜை செய்து வழிபடுவதன் மூலம் மாங்கல்ய பலம் அதிகரிக்கம். குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தைப் பேறு சித்திக்கும். ஆனி பெளர்ணமியில் விரதமிருந்து கண்ணபிரானை வழிபடுவதால் காதல் கைகூடும்.

4. ஆடி : ஆடி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. இந்த நாளில் பால்திரட்டும், கருப்பு பட்டாடையும், கருஊமத்தைப்பூவால் ஆன மாலையையும் உபயோகிக்கின்றனர். மூங்கில் அரிசி பாயசமும் படைக்கும் பொருளாக உள்ளது.அன்றைய தினத்தில் நம் குல தெய்வத்தை நினைத்து, மந்திரங்கள் ஜபித்து வழிபடுவதன் மூலம் குல தெய்வ அருள் கிட்டும். அன்று விரதம் அனுஷ்டித்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, வாழைப்பழத்தை சாதத்துடன் கலந்து நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும். இந்த பௌர்ணமியிலும ஸ்ரீ சாவித்திரி விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும். ஒரு சிலர் கோபத்ம விரதம் கூட இந்த நாளில் மேற்கொள்வார்கள்.

5. ஆவணி : இந்த பௌர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும் . இந்த நாளில் ஸ்ரீ அம்பிகையை துதித்து விளக்கேற்றி , நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். பல நாட்களாக எத்தனை முயற்சி செய்தும் தீராத கடன் பிரச்சனைகள் நீங்கும். திருமணத் தடை நீங்கும், கணவன் - மனைவி பிரச்சனை நீங்கும், பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள், வராக் கடன் வரும்.

6. புரட்டாசி : புரட்டாசியில் வரும் பௌர்ணமி அன்று விரதமிருந்து திருமாலை வணங்கி, மாவிளக்கு இட்டு. வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் நடைபெறும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். புராட்டாசி பௌர்ணமிக்கு நைவேத்தியமாக இளநீர் படைப்பது விசேஷமானது. புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது.

7. ஐப்பசி : ஐப்பசியில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும். வெண் பொங்கலும், நெய் பொங்கல் படைத்து ஸ்ரீ அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதில் கலந்து கொள்வது விசேஷ நற்பலன்களை அளிக்கும்.

8. கார்த்திகை : இது திரிபுரி பூர்ணிமா என்றும் திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இது சில சமயங்களில் தேவ-தீபாவளி எனவும் அழைக்கப்படுகிறது. அன்றையதினம் வீட்டில் விளக்கேற்றி ஈசனை வழிபட, விரதம் மேற்கொண்டு, சிவன் தலத்திற்கு சென்று வழிபட்டால் பேரும், புகழும் நிலைத்து நிற்கும். இந்த மாத பௌர்ணமி தீபத் திருவிழாவாக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

9. மார்கழி : மார்கழி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும் உடல் நலம் சீராகும். நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும். மார்கழி பௌர்ணமி நாளில் சக்தி சொரூபினியாக விளங்கும் துர்கை அம்மனை வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமண வைபோகம் கைகூடும். கருத்துவேறுபாடுகளால் பிரிந்து தம்பதியர் மீண்டும் இனைந்து வாழும் சூழல் அமையும்.

10. தை : தை மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட்டு, வெல்ல பாயசம் நைவேத்தியம் படைத்து, வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். தை மாதம் வரும் பௌர்ணமியில் திருவிடைமருதூர் திருக்கோயில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

11. மாசி : மாசி மாதம் வரும் பௌர்ணமியில் ஸ்ரீ மகாலட்சுமியை துதித்து, பாடி, தாமரை மலர்களால் பூஜித்து, கல்கண்டு பாயசம் நைவேத்தியம் செய்தால் எதிர்பாராத விதமாக செல்வம் பெருகும். மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும்.

12. பங்குனி : பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து வழிபாடு செய்தால் தர்மம் செய்த பலன் கிடைக்கும். பொங்கல் படைத்து, ஹரிஹரனை வணங்கி, விரதமிருந்தால் சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும். பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். மற்ற நாட்களில் வழிபாடு செய்து பலன் பெறுவதை விட, இந்த பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், இரட்டிப்பு பலனை பெறலாம்.