கெளரி நல்ல நேரம் (Gowri Nalla Neram Dates)
October 2025
25
Saturday
நல்ல நேரம்
07:58 AM to 09:17 AM
கெளரி நல்ல நேரம்
காலை
11:56 AM to 01:15 PM
மாலை04:37 AM to 06:18 AM
கெளரி நல்ல நேரம்
கெளரி பஞ்சாங்கம்:
கெளரி பஞ்சாங்கம் என்பது ஆதி காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கக்கூடிய முறை. அதாவது கிருத யுகத்திலிருந்து பின்பற்றப்படுவதாக நம்பப்படுகிறது. பாற்கடலைக் கடையும் நிகழ்விற்கு முன்பே கெளரி பஞ்சாங்கம் இருந்து வருகிறது என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள், குறிப்பாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், புதிய அல்லது குறிப்பிடத்தக்க செயலைத் தொடங்க நல்ல நேரம் மற்றும் கௌரி பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகிறார்கள். கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக இணைந்திருக்கும் உயர்ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய நேரத்தை இது குறிக்கிறது.
கெளரி பஞ்சாங்கம் என்றால் என்ன?
ஒரு நாளின் கால அளவான 60 நாழிகைகளை (24 மணி) 16 பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவும் 3¾ நாழிகை அதாவது 1½ மணி நேரமாகப் பிரித்து குறிப்பிட்ட பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதினாறு பிரிவுகள் பகலில் எட்டாகவும் இரவில் எட்டாகவும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டுப் பிரிவுகளின் பெயர் விவரம் வருமாறு:
சூரியன் (ஞாயிறு) உத்தியோகம்; சந்திரன் (திங்கள்) அமுதம்; செவ்வாய் , ரோகம்;, புதன் லாபம்,; வியாழன் (குரு) தனம்; சுக்கிரன் (வெள்ளி) சுகம்,; சனி (சனி) ரோகம், ;இராகு-கேது விஷம் எனப் பிரித்துக் கொண்டு பகல் பொழுது கெளரி நேரம் அமைக்க ராகு காலத்தை முதலில் நிரப்பிக் கொண்டு அந்தந்த கிழமையின் அதிபதியின் கௌரி தொடங்கி வரிசையாக எழுத வேண்டும். இரவு நேரத்தில் வரும் கெளரி அமைக்க ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் பகலில் ஐந்தாவதாக வரும் கௌரியை இரவில் முதலாவதாக வைத்தது வரிசையாக எழுத வேண்டும். திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளில் பகலில் ஆறாவதாக வரும் கௌரியை இரவில் முதலாவதாக வைத்து வரிசையாக எழுத வேண்டும்.
கௌரி பஞ்சாங்கம் கடைபிடிப்பதன் பலன்கள்:
பகல் மற்றும் இரவின் சுப மற்றும் அசுப நேரத்தை அடையாளம் காண பஞ்சாங்கம் நமக்கு உதவுகிறது. கிரகங்கள் நம்மை ஆள்கின்றன. கிரகங்களின் நிலை பொறுத்து தான் நமது ஜாதகம் அமைகிறது. அதேபோல், நமக்கு வெற்றியையும் லாபத்தையும் தரும் ஒரு செயலைத் தொடங்க அல்லது செய்ய சரியான நேரத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கும், நமக்குச் சாதகமாக, சாதகமான நேரத்தைக் குறிக்க வேண்டும்.
கௌரி பஞ்சாங்கம் நமது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய பகல் மற்றும் இரவின் மோசமான தருணங்கள் அல்லது நேரங்களைத் தடுக்க உதவுகிறது.
கெளரி நல்ல நேரம் என போடப்பட்டிருக்கும் நேரத்தில் நாட்காட்டியில் எமகண்டம், ராகு காலம், குளிகை காலம் என போடப்பட்டிருந்தால் அந்த நேரத்தைக் கண்டிப்பாகத் தவிர்ப்பது நல்லது.
- உத்தியோகம்
- அமுதம்
- ரோகம்
- லாபம்
- தனம்
- சுகம்
- சோரம்
- விஷம் ஆகும்

