மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம் என்பது வீடு மற்றும் வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் எவ்வளவு நீள அகலம் இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது ஆகும். மனையடி அளவுகளைக்கொண்டு அறைகளை அமைக்கும் பொழுது வாஸ்து பலம் கூடும். மனையடி சாஸ்திரப்படி மனையானது ஒரே சீரான நில மட்டம் கொண்டதாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு அளவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளன. எனவே ஒரு வீடு கட்டும் போது மனையடி சாஸ்திரப்படி அளவு அமைப்பதன் மூலம், அந்த வீட்டில் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
| 6 | நன்மை |
| 7 | ஏழ்மை |
| 8 | இராஜ்ஜியம் |
| 9 | மிகவும் தீயது |
| 10 | பால் சோறு உண்டு |
| 11 | வளம், புத்திர சம்பத்து |
| 12 | ஏழ்மை, குழந்தை குறைவு |
| 13 | நோய், எதிரி உண்டு |
| 14 | நித்தம் பகை, நஷ்டம் |
| 15 | நிலை பாதித்தல் |
| 16 | செல்வமுண்டு |
| 17 | அரச அந்தஸ்து |
| 18 | நஷ்டம் |
| 19 | மனைவி, மக்கள் இழப்பு |
| 20 | மகிழ்ச்சி, வளம் |
| 21 | நன்மை |
| 22 | எதிரி அஞ்சுவான் |
| 23 | தீரா நோய் |
| 24 | மனைவிக்கு கண்டம் |
| 25 | தெய்வ அருள் இல்லை |
| 26 | இந்திரனைப் போல வாழ்க்கை |
| 27 | வளம், செல்வம் |
| 28 | ஐஸ்வர்யம் |
| 29 | சுற்றம் பெருகும் |
| 30 | லட்சுமி கடாட்சம் |
| 31 | சிவ கடாட்சத்துடன் நன்மை |
| 32 | முகுந்தனருள் பெற்று வாழ்வார் |
| 33 | நன்மை உண்டு |
| 34 | வீட்டை விட்டு விரட்டும் |
| 35 | ஜீவனம் உண்டு |
| 36 | அரச அந்தஸ்து |
| 37 | இன்பமும் லாபமும் உண்டு |
| 38 | நினைத்த காரியம் கை கூடாது |
| 39 | ஆக்கம், வளர்ச்சி |
| 40 | எதிரிகளால் பாதிப்பு |
| 41 | குபேர சம்பத்து |
| 42 | லட்சுமி கடாட்சம் |
| 43 | நன்மை இல்லை |
| 44 | கண்கள் பாதிப்பு |
| 45 | நல்ல மக்கள் பெறுவர் |
| 46 | வீட்டை இழப்பர் |
| 47 | தொடர்ந்து ஏழ்மை |
| 48 | நெருப்பு கண்டம் |
| 49 | கெட்ட ஆவிகள் பாதிப்பு |
| 50 | நன்மை உண்டு |
| 51 | வழக்கு ஏற்படும் |
| 52 | தான்யம் பெருகும் |
| 53 | வீண் செலவு |
| 54 | லாபம் |
| 55 | பந்து விரோதம் |
| 56 | புத்திர உற்பத்தி |
| 57 | புத்திரர் அற்பம் |
| 58 | விரோதம் வளரும் |
| 59 | சுப தரிசனம் |
| 60 | பொருள் விருத்தி |
| 61 | பகை ஏற்படும் |
| 62 | வறுமை உண்டாகும் |
| 63 | இருப்பு குறையும் |
| 64 | வெகு சம்பத்து |
| 65 | பெண் நாசம் |
| 66 | புத்திர பாக்கியம் |
| 67 | பயமுண்டாகும் |
| 68 | திரவிய லாபம் |
| 69 | அக்னி கண்டம் |
| 70 | அன்னியருக்குப் பலன் |
| 71 | பிரியம் |
| 72 | வெகு பாக்கியம் |
| 73 | வாகன பிராப்தி |
| 74 | பிரபல விருத்தி |
| 75 | சுகமுண்டு |
| 76 | புத்திர அற்பம் |
| 77 | அமோக வாழ்வு |
| 78 | புத்திர தோஷம் |
| 79 | கன்றுகாலி விருத்தி |
| 80 | லட்சுமி வாசம் |
| 81 | இடி விழும் |
| 82 | ரோஷம் |
| 83 | மரண பயம்சௌக்கியம் |
| 85 | ஸ்ரீமான் |
| 86 | ஹிம்சை அதிகம் |
| 87 | தண்டனை உண்டு |
| 88 | சௌக்கியம் |
| 89 | பல வீடு கட்டுவான் |
| 90 | போக பாக்கியம் |
| 91 | சிறந்த கல்வி உண்டு |
| 92 | ஐஸ்வரியம் |
| 93 | தேசாந்திர வாழ்க்கை |
| 94 | அன்னிய தேசம் போவான் |
| 95 | தனவான் |
| 96 | வேறு பிரதேசம் செல்வான் |
| 97 | கப்பல் வியாபாரம் செய்வான் |
| 98 | வேறு நாடு செல்வான் |
| 99 | இராஜ்ஜியம் ஆள்வான் |
| 100 | க்ஷேமத்துடன் வாழ்வான் |

