Kala Bhairava Jayanthi: Invoke Kala Bhairava for Instant Manifestation, Wealth, Wisdom & Obstacle Removal Join Now
2025 Festival Dates | விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவனால் நமக்கு அளிக்கப்பட நல்ல நாளாகும். எனவே தினமும் நாம் இறைவனை மனதார நினைக்க வேண்டும். அவன் அருளை வேண்டி வணங்க வேண்டும். நமது மனம் அவனிடத்தில் லயிக்க வேண்டும். இது நமது அன்றாட வாழ்வில் சில சமயங்களில் சாத்தியமாவதில்லை. இயந்திர கதியில் நாம் வாழ்க்கை நடத்துவது தான் அதற்குக் காரணம். ஆகும். எனவே தான் நமது முன்னோர்கள் இறைவனை வணங்குவதற்கும் அவன் அருள் வேண்டி அவனை வழிபடுவதற்கும், விரதம் மற்றும் உபவாசம் இருப்பதற்கும் சில நாட்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நாட்கள் பெரும்பாலும் திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ஆன்மீக அன்பர்கள் பயன் பெறும் வகையில் அத்தைகய விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டியை இங்கு உங்களுக்கு அளித்துள்ளோம். இந்த புது வருடத்திற்கான அதாவது 2025 ஆம் வருடத்திற்கான விசேஷ நாட்களை தேதி வாரியாக அளித்துள்ளோம். இந்த விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி நீங்கள் முக்கியமான விசேஷ நாட்களை முன்கூட்டியே அறிந்து இறைவனை வழிபடவும், விரதம் இருக்கவும் உதவிகரமாக இருக்கும்.

சங்கடஹர சதுர்த்தி
17.01.2025 வெள்ளி
16.02.2025 ஞாயிறு
17.03.2025 திங்கள்
16.04.2025 புதன்
16.05.2025 வெள்ளி
14.06.2025 சனி
14.07.2025 திங்கள்
12.08.2025 செவ்வாய்
10.09.2025 புதன்
10.10.2025 வெள்ளி
08.11.2025 சனி
07.12.2025
08.12.2025
திங்கள்
செவ்வாய்
சஷ்டி – வளர்பிறை
05.01.2025 ஞாயிறு
03.02.2025 திங்கள்
05.03.2025 புதன்
03.04.2025 வியாழன்
03.05.2025 சனி
01.06.2025 ஞாயிறு
01.07.2025 செவ்வாய்
30.07.2025 புதன்
29.08.2025 வெள்ளி
28.09.2025 ஞாயிறு
27.10.2025 திங்கள்
26.11.2025 புதன்
25.12.2025 வியாழன்
பிரதோஷம்
11.01.2025 சனி
27.01.2025 திங்கள்
10.02.2025 திங்கள்
25.02.2025 செவ்வாய்
11.03.2025 செவ்வாய்
27.03.2025 வியாழன்
10.04.2025 வியாழன்
25.04.2025 வெள்ளி
10.05.2025 சனி
24.05.2025 சனி
08.06.2025 ஞாயிறு
23.06.2025 திங்கள்
08.07.2025 செவ்வாய்
22.07.2025 செவ்வாய்
06.08.2025 புதன்
20.08.2025 புதன்
05.09.2025 வெள்ளி
19.09.2025 வெள்ளி
04.10.2025 சனி
18.10.2025 சனி
03.11.2025 திங்கள்
17.11.2025 திங்கள்
02.12.2025 செவ்வாய்
17.12.2025 புதன்
கிருத்திகை
09.01.2025 வியாழன்
06.02.2025 வியாழன்
05.03.2025 புதன்
01.04.2025
02.04.2025
செவ்வாய்
புதன்
29.04.2025 செவ்வாய்
26.05.2025 திங்கள்
22.06.2025 ஞாயிறு
20.07.2025 ஞாயிறு
16.08.2025 சனி
12.09.2025 வெள்ளி
10.10.2025 வெள்ளி
06.11.2025 வியாழன்
03.12.2025 புதன்
பூரம்
18.01.2025 சனி
14.02.2025 வெள்ளி
13.03.2025 வியாழன்
09.04.2025
10.04.2025
புதன்
வியாழன்
07.05.2025 புதன்
03.06.2025 செவ்வாய்
01.07.2025 செவ்வாய்
28.07.2025 திங்கள்
24.08.2025 ஞாயிறு
21.09.2025 ஞாயிறு
18.10.2025 ஞாயிறு
14.11.2025 வெள்ளி
12.12.2025 வெள்ளி
தேய்பிறை – அஷ்டமி
21.01.2025 செவ்வாய்
20.02.2025 வியாழன்
22.03.2025 சனி
20.04.2025 ஞாயிறு
20.05.2025 செவ்வாய்
18.06.2025 புதன்
17.07.2025 வியாழன்
16.08.2025 சனி
14.09.2025 ஞாயிறு
13.10.2025 திங்கள்
12.11.2025 புதன்
12.12.2025 வெள்ளி
பௌர்ணமி
13.01.2025 திங்கள்
11.02.2025
12.02.2025
செவ்வாய்
புதன்
13.03.2025 வியாழன்
12.04.2025 சனி
12.05.2025 திங்கள்
10.06.2025 செவ்வாய்
10.07.2025 வியாழன்
08.08.2025 வெள்ளி
07.09.2025 ஞாயிறு
06.10.2025 திங்கள்
05.11.2025 புதன்
04.12.2025 வியாழன்
மாத பூசம்
14.01.2025 செவ்வாய்
11.02.2025 செவ்வாய்
10.03.2025 திங்கள்
06.04.2025 ஞாயிறு
04.05.2025 ஞாயிறு
31.05.2025 சனி
28.06.2025 சனி
25.07.2025 வெள்ளி
21.08.2025 வியாழன்
18.09.2025 வியாழன்
15.10.2025 புதன்
11.11.2025 செவ்வாய்
09.12.2025 செவ்வாய்
அமாவாசை
28.01.2025
29.01.2025
செவ்வாய்
புதன்
27.02.2025 வியாழன்
28.03.2025
29.03.2025
வெள்ளி
சனி
27.04.2025 ஞாயிறு
26.05.2025 திங்கள்
25.06.2025 புதன்
24.07.2025 வியாழன்
22.08.2025 வெள்ளி
21.09.2025 ஞாயிறு
21.10.2025 செவ்வாய்
19.11.2025 புதன்
19.12.2025 வெள்ளி

வரவிருக்கும் வழிபாட்டு, விரத நாட்கள் மற்றும் திருவிழாக்கள்

தைபூசம் 11.02.2025
செவ்வாய்
சிவராத்திரி 26.02.2025
புதன்
மாசிமகம் 12.03.2025
புதன்
பங்குனி உத்திரம் 11.04.2025
வெள்ளி
சித்ரா பௌர்ணமி 12.05.2025
திங்கள்
வைகாசி விசாகம் 09.06.2025
திங்கள்
ஆனி திருமஞ்சனம் 02.07.2025
புதன்
வரலட்சுமி விரதம் 08.08.2025
வெள்ளி
ஆவணி அவிட்டம் 09.08.2025
சனி
விநாயகர் சதுர்த்தி 27.08.2025
புதன்
புரட்டாசி மகாளய அமாவாசை 21.09.2025
ஞாயிறு
நவராத்திரி 22.09.2025
to 02.10.2025
சரஸ்வதி பூஜை 01.10.2025
புதன்
விஜயதசமி 02.10.2025
வியாழன்
தீபாவளி 20.10.2025
திங்கள்
கந்தசஷ்டி 22.10.2025 to 27.10.2025
புதன் முதல் திங்கள் வரை
சூரசம்ஹாரம் 27.10.2025
திங்கள்
திருக்கல்யாணம் 28.10.2025
செவ்வாய்
அன்னாபிஷேகம் 05.11.2025
புதன்
கார்த்திகை தீபம் 03.12.2025
புதன்
வைகுண்ட ஏகாதசி 30.12.2025
செவ்வாய்
ஆருத்ரா தரிசனம் 13.01.2025
திங்கள்
கார்த்திகை திங்கள்
முதல் சோமவாரம்
17.11.2025
திங்கள்
இரண்டாம் சோமவாரம் 24.11.2025
திங்கள்
மூன்றாம் சோமவாரம் 01.12.2025
திங்கள்
நான்காம் சோமவாரம் 08.12.2025
திங்கள்
ஐந்தாம் சோமவாரம் 15.12.2025
திங்கள்

சங்கடஹர சதுர்த்தி – இது முழு முதற் கடவுளான விநாயகர் வழிபாட்டிற்கு உரிய நாள். “சங்கட” என்றால் தடைகள் அல்லது தொல்லைகள் “ஹர” என்றால் நீக்குவது என்று பொருள். இந்த நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் உங்கள் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் துன்பங்கள் நீங்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் “சங்கடஹர சதுர்த்தி” நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

சஷ்டி வளர்பிறை – இது முருகப் பெருமான் வழிபாட்டிற்கு உரிய நாள் ஆகும். முருகப் பெருமானுக்கு உரிய விசேஷ நாட்களில் இதுவும் ஒன்றாகும். சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப் பேறு கிட்டும் என்பார்கள். அது மட்டும் அன்று. சஷ்டி விரதம் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது ஐதீகம். நல்ல விஷயம் துவங்குகிறோம் அது வளர வேண்டும் என்பவர்கள் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்க துவங்கலாம். விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் வளர்பிறை சஷ்டி நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

பிரதோஷம் – இது சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய நாள் ஆகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் வழிபாடாக இது கருதப்படுகிறது. தேவர்கள் வழிபட்டு, நலன் பெற்ற இந்த நேரத்தில் நாமும் சிவ பெருமானை வழிபட்டால் சிவ பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் பிரதோஷ நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

கிருத்திகை – இது முருகப் பெருமானின் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமான் இந்த நாளில் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு எல்லா நலனையும் வளத்தையும் அருள்வார் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ஆவணி மாதம் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது. விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் கிருத்திகை நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

பூரம் – ஆண்டாள், திருமங்கையாழ்வாரின் மகளாகப் பிறந்து, திருமாலின் மீது கொண்ட தீராத பக்தியால், திருப்பாவை, நான்முகம்மாலை போன்ற பக்திப் பாடல்களை இயற்றியவர். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாக போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வழிபடுவதன் மூலம் திருமணம் ஆகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக ஆடிப் பூரம் அன்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் பூரம் நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

தேய்பிறை அஷ்டமி - தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். குறிப்பாக சிவபெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள். பைரவருக்கு மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நோயினால் உண்டான உபாதைகள் தீரும். சனியின் தாக்கம் தீரும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரித்துக்கொண்டே செல்லும். பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். எதிரிகள் தொல்லை நீங்கும். தீய சக்திகளால் ஏற்படும் தொல்லைகள், பாதிப்புகள் நீங்கும். விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் தேய்பிறை அஷ்டமி நாட்கள் தேதிவாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

பௌர்ணமி - ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி திதி மிகவும் சிறப்பான ஒன்று ஆகும். சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது. விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் பௌர்ணமி நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

மாத பூசம் - பூச நட்சத்திர நாளன்று சிவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பிறவிப் பிணியை நீக்க முடியும் என்று கூறப்படுகிறது.அதிலும் குறிப்பாக தைப் பூசம் மிகவும் சிறப்பான நாள் ஆகும். அன்றைய தினம் முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம். தைப்பூச திருநாள் ஞானத்தின் அடையாளமாகவும், இறைவன் ஒளிவடிவானவன் என்பதை உணர்த்தும் நாளாகவும் குறிப்பிடப்படுகிறது. விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் மாத பூசம் நாட்கள் தேதி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

அமாவாசை - அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாகவும், அதோடு முன்னோர்களுக்கு உரிய கிரகமான சூரிய பகவானையும் வழிபடுவதற்கு உரிய நாளாகும். அதனாலேயே அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்த பிறகு, சூரியனுக்கு தண்ணீர் படைத்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.ஒவ்வொரு அமாவாசை அன்றும் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் என்றாலும். தை அமாவாசை , ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறது. விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி- யில் இந்த வருடத்தின் அமாவாசை நாட்கள் தேதிவாரியாக அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைசாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், வரலட்சுமி விரதம், சிவராத்திரி, கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம்,ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, பங்குனி உத்திரம், தீபாவளி, கந்தசஷ்டி, சூர சம்ஹாரம், திருக்கல்யாணம்,அன்னாபிஷேகம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், போன்ற முக்கிய விரத வழிபாட்டு நாட்களின் தேதியையும் விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி மூலம் அறிந்து நீங்கள் பயன் பெறலாம்.