சந்திராஷ்டமம் – ரிஷபம்
சந்திராஷ்டமம் என்பது, ஒருவரின் பிறந்த ஜாதகத்தில், ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருக்கும் காலம். இது இரண்டே கால் நாட்களுக்கு நீடிக்கும். சந்திரனின் இந்த நிலையை "அஷ்டமம்" என்று அழைப்பர், எனவே இது "சந்திராஷ்டமம்" என குறிப்பிடப்படுகிறது.
சந்திரனை மனோகாரகன் என்று சோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. சந்திராஷ்டம நாட்களில், முக்கிய சுப நிகழ்ச்சிகளை நடத்துவது தவிர்க்கப்படும். சந்திராஷ்டம காலத்தில், எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வம், முன்னோர்கள், இஷ்டதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்குவது நன்மை தரும்,
சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் , நமது வாழ்வில் அது ஒரு முக்கிய நாளாக கருதப்படும் நிலையில் இந்த நாளில் செய்ய கூடியதும் கூடாததும் என்னென்ன? என்பதை பார்ப்போம்,
சந்திராஷ்டமத்தில் செய்யக்கூடியது:
சந்திராஷ்டம தினத்தில், கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. ஆன்மீக புத்தகங்கள், நல்ல கதைகள் போன்றவற்றை படிப்பது நல்லது.ஏழை எளியோருக்கு உணவு, தானம் போன்ற தர்ம காரியங்களை செய்யலாம். மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டமத்தில் செய்யக்கூடாதவை:
திருமணம், புதிய வீடு வாங்குதல், புதிய வியாபாரம் தொடங்குதல் போன்ற சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் சண்டையிடக்கூடாது. கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாளில் நன்மை பெற இயலுமா?
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம். ரிஷப ராசியினருக்கு பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சலை சந்தித்தாலும் அதற்கான லாபம் நிச்சயமாகக் கிடைக்கும்.
ரிஷப ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் (2025).
கிருத்திகை நட்சத்திரம் 2,3,4 பாதங்கள், ரோகிணி நட்சத்திரம் 4 பாதங்கள் மற்றும் மிருகசீரிடம் 1,2 ஆம் பாதம் ரிஷப ராசியில் வரும்.
நீங்கள் ரிஷப ராசியின் கீழ் மேற்கூறிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருந்தால், கீழே உள்ள விளக்கப்படம் மூலம் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம நாட்களைக் கண்டறிந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
Rishabam | Rishabam Rasi Chandrashtama Days 2025 | |
Month | Starting Date & Time | Ending Date & Time |
January | 26.01.2025, 08.26 am | 28.01.2025, 02.52 pm |
February | 22.02.2025, 05.40 pm | 25.02.2025, 12.56 am |
March | 22.03.2025, 01.46 am | 24.03.2025, 10.25 am |
April | 18.04.2025, 08.21 am | 20.04.2025, 06.04 pm |
May | 15.05.2025, 02.07 pm | 18.05.2025, 12.04 am |
June | 11.06.2025, 08.10 pm | 14.06.2025, 05.38 am |
july | 09.07.2025, 03.15 am | 11.07.2025, 12.08 pm |
August | 05.08.2025, 11.23 am | 07.08.2025, 08.11 pm |
September | 01.09.2025, 07.55 pm | 04.09.2025, 05.21 am |
29.09.2025, 03.55 pm | 01.10.2025, 02.27 pm | |
October | 26.10.2025, 10.46 am | 28.10.2025, 10.14 pm |
November | 22.11.2025, 04.47 pm | 25.11.2025, 04.27 am |
December | 19.12.2025, 10.51 pm | 22.12.2025, 10.07 am |