சந்திராஷ்டமம் – மேஷம்
நமது வாழ்விற்கும் சந்திரனுக்கும் அதிக தொடர்பு உண்டு. சந்திரனை மனோகாரகன் என்று குறிப்பிடுவார்கள். மனோகாரகன் என்றால் மனதை ஆளக் கூடியது அல்லது மனதை கட்டுப்படுத்தக் கூடியது என்று கூறலாம். எனவே தான் ஜோதிடத்தில் சந்திராஷ்டமத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்திராஷ்டமம் என்றால் என்ன ?
சந்திராஷ்டமம் - சந்திரன் + அஷ்டமம். சந்திரன் என்றால் நமக்கு தெரியும். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள். உடலுக்கும் மனதிற்கும் காரணமான சந்திரன், ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் போது சந்திராஷ்டமம் ஏற்படுகின்றது. அல்லது நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்டமம் ஆகும்.
சந்திராஷ்டம காலம்
ஜோதிடத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. இந்த பன்னிரண்டு ராசிகளுள், சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்தில் இரண்டே கால் நாட்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும். இந்த காலத்தை சந்திராஷ்டம காலம் என்கிறோம்.
சந்திராஷ்டம நாட்களில் எதிர்மறையான தாக்கத்தைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?
முக்கியமான காரியங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுதல் கூடாது. பயணம் தவிர்க்க வேண்டும்.பெரிய அளவிலான அல்லது ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளுதல் கூடாது. உங்கள் குடும்பம், தொழில், வணிகம் மற்றும் நிதி அம்சங்களைப் பற்றிய எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவம் தவிர்க்கவும். வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களில் இருந்து விலகி இருங்கள்
சந்திராஷ்டம நாளில் நற்பலன் உண்டா?
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம்.மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் ,சந்திரன் எட்டில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும், அந்நாட்களில் மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்துவரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபத்தினைத் தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.
மேஷ ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் (2025).
அசுவினி நட்சத்திரம் 4 பாதங்கள், பரணி நட்சத்திரம் 4 பாதங்கள் மற்றும் கிருத்திகை 1,ம் ஆம் பாதம் மேஷ ராசியில் வரும்.
நீங்கள் மேஷ ராசியின் கீழ் மேற்கூறிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருந்தால், கீழே உள்ள விளக்கப்படம் மூலம் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம நாட்களைக் கண்டறிந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
Mesham | Mesha Rasi Chandrashtama Days 2025 | |
Month | Starting Date & Time | Ending Date & Time |
January | 23.01.2025, 10.32 pm | 26.01.2025, 08.26 am |
February | 20.02.2025, 06.49 am | 22.02.2025, 05.40 pm |
March | 19.03.2025, 02.06 pm | 22.03.2025, 01.46 am |
April | 15.04.2025, 08.27 pm | 18.04.2025, 08.21 am |
May | 13.05.2025, 02.27 am | 15.05.2025, 02.07 pm |
June | 09.06.2025, 08.50 am | 11.06.2025, 08.10 pm |
July | 06.07.2025, 04.01 pm | 09.07.2025, 03.15 am |
August | 02.08.2025, 11.52 pm | 05.08.2025, 11.23 am |
30.08.2025, 07.53 am | 01.09.2025, 07.55 pm | |
September | 26.09.2025, 03.24 pm | 29.09.2025, 03.55 am |
October | 23.10.2025, 10.06 pm | 26.10.2025, 10.46 am |
November | 20.11.2025, 04.14 am | 22.11.2025, 04.47 pm |
December | 17.12.2025, 10.26 am | 19.12.2025, 10.51 pm |