Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மீனம் ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் 2025 - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மீனம் ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் 2025

வேத ஜோதிடத்தின் படி, சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் ராசியில் சஞ்சரிக்கும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டம நாள் ஆகும். சந்திரன் ஓரு ராசியில் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும். அதன் படி உங்கள் ராசிக்கு எட்டாம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் முழு நாட்களும் உங்களுக்கு சந்திராஷ்டம நாள் ஆகும்.

சந்திரன் மனோகாரகன் மற்றும் உங்கள் மனதின் காரணி. சந்திரன் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது உங்கள் மனநிலை, மன உறுதி, அமைதி மற்றும் மகிழ்ச்சியை பாதிக்கும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் - 'சந்திர', என்றால் சந்திரன் மற்றும் 'அஷ்ட', எட்டு. சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் (அஷ்டம ஸ்தானம்) சஞ்சரிக்கும் போது சந்திராஷ்டமம் எனப்படும். வேத ஜோதிடத்தின்படி, உங்கள் ராசியில் இருந்து எட்டாவது வீட்டில் இரண்டரை நாட்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் முழு நேரம் சந்திராஷ்டம நாட்கள் என்று கூறப்படும். இது இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள் உங்களை எவ்வாறு பாதிக்கலாம்?

சந்திராஷ்டமத்தின் மிக முக்கியமான பகுதி, சந்திரன் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட நட்சத்திரத்தின் வழியாக அதாவது 16 வது நட்சத்திரத்தின் வழியாக சந்திரன் பயணிக்கும் நேரம் ஆகும். இது ஒரு தொந்தரவான கட்டமாக இருக்கலாம். எட்டாவது வீடு சந்திரன் இயற்கை வலுவிழக்கும் வீடு. வேத ஜோதிடத்தின் படி, 8 வது வீடு ஏற்ற தாழ்வுகளின் வீடாக நம்பப்படுகிறது மற்றும் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும்.சந்திராஷ்டம நாளில் மனதில் சமநிலை இருக்காது. எனவே அந்த நாட்களில் எந்தவொரு விஷயத்திலும் கவனமாகச் செயல்படவேண்டும். ஜோதிட நம்பிக்கைகளின்படி சந்திராஷ்டம கட்டத்தில், அந்த ராசிக்காரர்களுக்கு நிலையான மனம் இருக்காது என்று கூறுகிறது. எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்கள் உங்கள் மனதை பாதிக்கும் நேரம் இது. இது நிச்சயமற்ற தன்மை, பதட்டம், மனச்சோர்வு மற்றும் கவனம் இல்லாமை போன்ற உணர்வுகளை உருவாக்கும், நீங்கள் சிறப்பாக செயல்பட அல்லது சரியான முடிவுகளை எடுக்க அனுமதிக்காது.

சந்திராஷ்டம நாட்களில் எதிர்மறையான தாக்கத்தைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?

முக்கியமான காரியங்களைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுதல் கூடாது. பயணம் தவிர்க்க வேண்டும்.பெரிய அளவிலான அல்லது ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளுதல் கூடாது. உங்கள் குடும்பம், தொழில், வணிகம் மற்றும் நிதி அம்சங்களைப் பற்றிய எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவம் தவிர்க்கவும். வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களில் இருந்து விலகி இருங்கள்

சந்திராஷ்டம நாட்களில் நன்மை பெற முடியுமா?

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம்.பிள்ளைகளின் பெயரில் இருந்துவரும் சேமிப்புகள் உயரும். வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் செயல் வடிவம் பெறும். கூட்டு முயற்சிகள் வெற்றியைப் பெற்றுத் தரும். குடியிருக்கும் வீட்டினில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வர். கடன் சுமை குறையும். வாழ்க்கைத் துணையின் பணியில் இவர்கள் செய்யும் உதவிகள் நல்ல தன லாபத்தினைப் பெற்றுத் தரும். தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகும்.

மீன ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் (2025).

நட்சத்திரங்கள் பூரட்டாதி 4 ஆம் பாதம் உத்திரட்டாதி 4 பாதங்கள், மற்றும் ரேவதி 4 பாதங்கள் மீன ராசியின் கீழ் வருகின்றன. நீங்கள் மீன ராசியின் கீழ் மேற்கூறிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருந்தால், கீழே உள்ள விளக்கப்படம் மூலம் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம நாட்களைக் கண்டறிந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
Meenam Meenam Rasi Chandrashtama Days 2025
Month Starting Date & Time Ending Date & Time
January 21.01.2025, 10.03 am 23.01.2025, 10.32 pm
February 17.02.2025, 06.02 pm 20.02.2025, 06.49 am
March 17.03.2025, 01.15 am 19.03.2025, 02.06 pm
April 13.04.2025, 07.39 am 15.04.2025, 08.27 pm
May 10.05.2025, 01.42 pm 13.05.2025, 02.27 am
June 06.06.2025, 08.06 pm 09.06.2025, 08.50 am
July 04.07.2025, 03.19 am 06.07.2025, 04.01 pm
31.07.2025, 11.15 am 02.08.2025, 11.52 pm
August 27.08.2025, 07.21 pm 30.08.2025, 07.53 am
September 24.09.2025, 02.56 am 26.09.2025, 03.24 pm
October 21.10.2025, 09.36 am 23.10.2025, 10.06 pm
November 17.11.2025, 03.35 pm 20.11.2025, 04.14 am
December 14.12.2025, 09.41 pm 17.12.2025, 10.26 am