கடக ராசிக்கு சந்திராஷ்டமம் 2026 – முழு விவரம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சந்திராஷ்டமம் – கடகம்

கடக ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் (2026).

வேத ஜோதிடப்படி உங்கள் ராசியில் இருந்து எட்டாம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்கள் உங்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் ஆகும். உங்கள் ராசிக்கு எட்டாம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் முழு இரண்டே கால் நாட்களும் சந்திராஷ்டம நாட்கள் ஆகும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

சந்திராஷ்டமம் - 'சந்திர', என்றால் சந்திரன் மற்றும் 'அஷ்ட', எட்டு. சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் (அஷ்டம ஸ்தானம்) சஞ்சரிக்கும் போது சந்திராஷ்டமம் எனப்படும். வேத ஜோதிடத்தின்படி, உங்கள் ராசியில் இருந்து எட்டாவது வீட்டில் இரண்டரை நாட்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் முழு நேரம் சந்திராஷ்டம நாட்கள் என்று கூறப்படும். இது இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள் உங்களை எவ்வாறு பாதிக்கலாம்?

எட்டாவது வீடு சந்திரன் இயற்கை வலுவிழக்கும் வீடு. வேத ஜோதிடத்தின் படி, 8 வது வீடு ஏற்ற தாழ்வுகளின் வீடாக நம்பப்படுகிறது மற்றும் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும்.சந்திராஷ்டம நாளில் மனதில் சமநிலை இருக்காது. எனவே அந்த நாட்களில் எந்தவொரு விஷயத்திலும் கவனமாகச் செயல்படவேண்டும். ஜோதிட நம்பிக்கைகளின்படி சந்திராஷ்டம நேரத்தில் முக்கிய பணிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பயணம் தவிர்க்க வேண்டும். ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளுதல் கூடாது. சந்திராஷ்டம நேரத்தில் மனதில் சமநிலை இருக்காது. முக்கிய முடிவுகளை எடுப்பது இயலாமல் இருக்கும். எனவே அந்த நாட்களில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.

சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க வேண்டியவை

பொறுப்பற்ற செயல்கள் மற்றும் ஆவேசமான பேச்சைத் தவிர்க்கவும்.தேவையற்ற அபாயங்கள் அல்லது முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். முடி அல்லது நகங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.புதிய மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டம நாட்கள் நன்மை தருமா?
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். கடன் சுமை குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமானாலும் நல்ல லாபத்தினைக் காண்பர்.
கடக ராசிக்கான சந்திராஷ்டம நாட்கள் (2026).
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம் 4 பாதங்கள் மற்றும் ஆயில்யம் 4 பாதங்கள் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசியின் கீழ் வருகிறார்கள். நீங்கள் கடக ராசியின் கீழ் மேற்கூறிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருந்தால், கீழே உள்ள விளக்கப்படம் மூலம் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம நாட்களைக் கண்டறிந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
 
கடகம் கடகம் ராசி சந்திராஷ்டம நாட்கள் 2026
மாதம் ஆரம்ப தேதி மற்றும் நேரம் முடிவு தேதி மற்றும் நேரம்
ஜனவரி 21.01.2026, 01:35 AM 23.01.2026, 08:33 AM
பிப்ரவரி 17.02.2026, 09:06 AM 19.02.2026, 03:00 PM
மார்ச் 16.03.2026, 06:14 AM 18.03.2026, 11:36 PM
ஏப்ரல் 18.03.2026, 11:36 PM 15.04.2026, 09:37 AM
மே 10.05.2026, 12:13 PM 12.05.2026, 07:25 PM
ஜூன் 06.06.2026, 07:04 PM 09.06.2026, 03:36 AM
ஜூலை 04.07.2026, 12:48 PM 06.07.2026, 09:57 AM
31.07.2026, 06:38 AM 02.08.2026, 03:27 PM
ஆகஸ்ட் 27.08.2026, 01:35 PM 29.08.2026, 09:37 PM
செப்டம்பர் 23.09.2026, 09:57 PM 26.09.2026, 05:33 AM
அக்டோபர் 21.10.2026, 07:00 AM 23.10.2026, 03:04 AM
நவம்பர் 17.11.2026, 03:30 PM 20.11.2026, 12:50 AM
டிசம்பர் 14.12.2026, 10:36 PM 17.12.2026, 09:13 AM