தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில மாதங்கள் திருமணம் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். சில மாதங்கள் வீடு கட்ட, வீடு குடி போக, மேலும் சில மாதங்கள் சுப விசேஷங்கள் செய்ய உகந்த மாதங்களாக கருதப்படுகிறது. சில மாதங்களில் சுப விசேஷங்கள் தவிர்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் புரட்டாசி மாதம் பற்றிக் காண்போம்.
தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த, புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி மாதமாகும். பொதுவாக ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரம், திதி, கிழமை ஆகியவை தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் மாதத்தின் அனைத்து நாட்களுமே சிறப்பு பெற்று, புண்ணிய பலன்களை தரும் மாதங்களில் ஒன்று தான் புரட்டாசி. புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டுக்குரிய மாதம் என்பதால், இந்த மாதத்தில் இந்து மத மக்கள் திருமணங்கள், வீடு கிரகப்பிரவேசம் போன்ற எந்த விதமான சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் ஆகும். பெருமாளுக்கு விரதம் இருந்து அவரின் பரிபூர்ண ஆசிகளைப் பெறுவதற்கு நாம் இந்த மாதத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த மாதத்தில் தான் மகாளய பட்சம் வருகிறது. அந்த நேரத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வருகை தருகிறார்கள். எனவே அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை கொண்டாட வேண்டிய தருணமாக இந்த மாதம் விளங்குகிறது.
மேலும் இந்த மாதத்தில் தான் நவராத்திரி பண்டிகை வருகிறது. முத்தேவியர்களை போற்றி வணங்க வேண்டிய காலம் ஆகும்.
எனவே இவற்றில் தான் நமது கவனம் இருக்க வேண்டும். என்பதை கருத்தில் கொண்டு இந்த மாதம் நாம் திருமணம் உள்ளிட்ட எந்த விசேஷங்களையும் செய்வதில்லை எனலாம்.
வீடு என்றால் அதற்கு வாஸ்து முக்கியம். எந்தவொரு வீடு அல்லது கட்டிடம் கட்டுவதற்கு முன்னும் வாஸ்து பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும். அவருக்கு பூஜை செய்த பிறகு தான் கட்டத் துவங்க வேண்டும். புரட்டாசி மாதத்தில் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருப்பார். மற்ற சில மாதங்களில், அவர் விழித்திருப்பதால் அந்த மாதங்களில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்தால் எந்த தடையுமின்றி, வீடு முழுமையாக கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில் வாடகை வீடு சொந்த வீடு எந்த வீடாக இருந்தாலும், வீடு குடு போக, பால் காய்ச்சக் கூடாது என்று சொல்லுகிறார்கள்.
சித்திரை மாதத்தில் வீடு கட்டினால் வீண் செலவு ஏற்படும்.
வைகாசி மாதத்தில் வீடு காட்டினால் செயல் வெற்றி கிடைக்கும்.
ஆனி மாதத்தில் வீடு காட்டினால் மரண பயம் ஏற்படும்.
ஆடி மாதத்தில் வீடு காட்டினால் வீட்டில் உள்ள கால்நடைக்கு நோய் ஏற்படுமாம்.
ஆவணி மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்படும்.
புரட்டாசி மாதத்தில் வீடுகட்டினால் குடும்பத்தவர்க்கு நோய் பாதிப்பு ஏற்படும்.
ஐப்பசி மாதத்தில் வீடு கட்டினால் உறவினரால் கலகம் ஏற்படும்.
கார்த்திகை மாதத்தில் வீடு கட்டினால் லட்சுமி தேவி அருள் கிடைக்கும்.
மார்கழி மாதத்தில் வீடு கட்டினால் வீடு எழும்பாமல் தடை வந்து கொண்டே இருக்கும்.
தை மாதத்தில் வீடு கட்டினால் அக்னி பயம் கடன் தொல்லை அதிகரிக்கும்.
மாசி மாதத்தில் வீடு கட்டினால் சௌபாக்கியம் உண்டாகும்.
பங்குனி மாதத்தில் வீடு கட்டினால் வீட்டுப்பொருள் பொன், பண விரயம் ஏற்படும் என்பது வாஸ்து நம்பிக்கை.
புரட்டாசி மாதத்தில் கல்வி கற்க தொடங்கலாம். அதுவும் குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் விஜயதசமி அன்று கல்வி கற்க ஆரம்பித்தால் நல்ல கல்வி அறிவு கிடைக்கும் என்பது ஐதீகம். இது தவிர இந்நாளில் குழந்தைகளுக்கு புதிய விஷயங்கள் ஏதாவது கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம், ஏன் புதிய தொழில் கூட இந்நாளில் தொடங்கலாம். இதனால் தொழில் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025