Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
ஜோதிடர்கள் வேறுபட்ட கணிப்புகளை வழங்கும் காரணங்கள் – முழு விளக்கம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஜோதிடர்கள் வேறுபட்ட கணிப்புகளை வழங்குவதற்கான காரணங்கள்

Posted DateAugust 13, 2025

ஜோதிடம் என்பது  ஒரு பாரம்பரிய அறிவியல் ஆகும், இது கோள்களின் நிலை மற்றும் இயக்கங்களை அடிப்படையாக கொண்டு மனிதர்களின் வாழ்க்கை, எதிர்காலம், மற்றும் நிகழ்வுகளை கணிக்க முயற்சிக்கும் ஒரு முறையாகும். என்றாலும் இது அறிவியல் மட்டும் அன்று. இதனை ஒரு கலை என்றும் கூறலாம். கை வந்த கலை என்ற ஒரு சொலவடை உண்டு. ஒரு சிலருக்கு ஜோதிடம் என்பது கை வந்த கலையாக அமைந்து விடும். ஜோதி என்றால் ஒளி அல்லது விண்மீன் என்று பொருள். இடம் என்றால் நிலை  என்று பொருள். எனவே ஜோதிடம் என்பது விண்மீன்களின் நிலையைக் கொண்டு கணிக்கும் அறிவியல் ஆகும்.  ஜோதிடத்தில் ஜாதகம், நட்சத்திரம், பாவங்கள் அல்லது வீடுகள், தசைகள், போன்றவை உள்ளடங்கும். ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கை நிகழ்வுகளை முன்னறியலாம்

முக்கிய ஜோதிட வகைகள்:

∙ பாரம்பரிய இந்திய ஜோதிடம் (வேத ஜோதிடம்)

∙ ஜாமக்கோள்

∙ வெஸ்டர்ன் அஸ்ட்ராலஜி

∙ சைனீஸ் அஸ்ட்ராலஜி

வழக்கமாக, ஜாதகச் சக்கரம் தயாரிக்கும்போது, ஒருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை தேவைப்படும். இதன் அடிப்படையில் தான் ஜாதகத்தைப் புனைந்து, அதிலிருந்து பலன்கள் கூறப்படுகின்றன.

ஜோதிடர்கள் வேறுபட்ட கணிப்புகளை வழங்குவதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன. இதில் முக்கியமானவை: ஜோதிட முறைகளின் வேறுபாடு, அவர்களின் தனிப்பட்ட திறமைகள், மற்றும் பிறப்புத் தகவல்களின் துல்லியமின்மை போன்றவை. மேலும், ஜோதிடம் என்பது மிகுந்த சிக்கலான ஒரு துறை என்பதால், பல்வேறு அணுகுமுறைகள் மற்றும் கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது. கீழே விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது:

 வேறுபட்ட ஜோதிட முறைகள் இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஜோதிடம் ஒரே மாதிரியானது அல்ல. வேதஜோதிடம் (இந்திய ஜோதிடம்), மேற்கத்திய ஜோதிடம் போன்ற பல மாறுபட்ட முறைகள் உள்ளன. உதாரணமாக, வேதஜோதிடம் சைடீரியல் (Sidereal) ராசிச்சக்கரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் மேற்கத்திய ஜோதிடம் ட்ரோப்பிக்கல் (Tropical) ராசிச்சக்கரத்தைப் பயன்படுத்துகிறது. இவை ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நிலையை வேறுபடுத்தி, வேறுபட்ட பலன்களை வழங்கும்.

 முன்பே கூறியது போல ஜோதிடம் என்பது ஓரு கலை ஆகும். கலை என்பதை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

ஜோதிடக் கணிப்புகளுக்கு அடிப்படை விதிகள் இருக்கின்றன. என்றாலும்  அதை விளக்கும் விதம் ஒவ்வொரு ஜோதிடரின் அனுபவம், நம்பிக்கை, மற்றும் பார்வைமுறையைப் பொறுத்தது. உதாரணமாக ஒரு மருத்துவரைப் போல — ஒரே அறிகுறிக்கு ஒரு மருத்துவர் ஓர் மருந்து சொல்வார், மற்றொருவர் வேறொரு வழியைக் கூறுவார்.

ஜோதிடத்தைக் கணித்துக் கூறுவதில் பல பாணிகள் உள்ளன. ஒவ்வோருவர் ஒவ்வொரு பாணியைப் பின்பறலாம். ஒவ்வொன்றிலும் விதி முறைகள் மாறுபடும்.

முன்பே கூறியது போல ஜாதகத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், தசைகள் போன்ற பல கணக்கீட்டு முறைகள், மற்றும் முன்னுரிமைகள் உண்டு. இவற்றில் ஜோதிடர்களின் பார்வை மாறுபடலாம்.

இரண்டாவது ஜாதகம் கணிக்கும் போது  நேரம் மற்றும் இடத்தில் சற்று மாற்றங்கள் காணப்படலாம். ஜாதகம் அமைக்கும் போது பிறப்புக் காலத்தில் 1 நிமிடம் வேறுபட்டால் கூட , கிரகங்களின் நிலைமைகள் மாறலாம். அதற்கேற்ப பலன்களும் மாறுபடலாம்.

சிலர் நேரத்தை சரியாக கணிக்காமல் தோராயமாக தருவதால், பின்னூட்டமும் மாறிவிடும்.

ஜோதிடரின் அனுபவம்  பலனைக் கணித்துக் கூறுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஜோதிடரின் மன நிலையம் அவர்கள் கூறும் கணிப்பு முறையில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஒரு ஜோதிடர் நேர்மையான பார்வையுடன் சொல்லலாம், மற்றொருவர் பயமுறுத்தும் வகையில் கூறலாம்.

சிலர் உங்கள் கேள்வியின் அடிப்படையில் பதில் கூறுவர் — எ.கா. திருமணம் எப்போது? பணம் வரும் நேரம் எப்போது? என்கிறீர்களானால் அதற்கேற்பத் தரப்படும் விவரங்கள் மாறலாம்.

ஒரு சிலருக்கு ஜோதிடம் தெரிவதுடன் உள்ளுணர்வு என்று கூறப்படும் intuition power இருக்கும். இது எல்லாருக்கும் அமைந்து விடாது. அவர்கள் உங்கள் வாழ்வில் நடந்த நடந்து கொண்டிருக்கும் மற்றும் நடக்கப் போகும் விஷயங்களை கூடத்  துல்லியமாகக் கூறுவார்கள்.

ஒரு சிலர் பரம்பரை பரம்பரை வழியாக ஜோதிட குடும்பத்தில் வந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நன்கு ஜாதகம் கணிக்கத் தெரிந்திருக்கும்.

ஒரு சிலர் ஜோதிடத்தை படித்து தாங்கள் அறிந்து கொண்டதன் அடிப்படையில் பலன் கூறுவார்கள்.

ஒரு சிலர் குறி சொல்வது போல அருள் வந்து கூறுவார்கள். இவர்கள் கூறுவது துல்லியமாக இருக்கும்.

ஒரே ஜோதிட முறையிலிருந்தும், ஜோதிடர்களின் அனுபவம், அறிவு மற்றும் ஆளுமை போன்ற காரணிகளால் அவர்களின் பார்வையில் வேறுபாடுகள் ஏற்படலாம். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கிரக யோகம் மீது அதிக கவனம் செலுத்தலாம், மற்றவர் மற்றொரு அம்சத்தை முக்கியமாகக் காணலாம்.

ஒருவரின் நேர்த்தியான பிறப்புக் காலம் மிகவும் முக்கியம். பிறப்புக்காலம் தவறாக உள்ளபட்சத்தில், ஜாதக கட்டம் முற்றிலும் மாறி, பலன்களிலும் மிகப்பெரிய வேறுபாடுகள் ஏற்படலாம்.

ஜோதிடம் மிகவும் பரந்த துறை. எந்த ஜோதிடருக்கும் எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றிருக்க முடியாது. சிலர் சில நுட்பங்களைப் பற்றிய அறிவில் குறைவாக இருக்கலாம். இதனால், அவர்கள் கொடுக்கும்  வேறுபடலாம்.

சில ஜோதிடர்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக, உண்மையான ஜோதிடக் கணிப்புகள் அல்லாத, “கேட்க நல்ல” பலன்களை வழங்கலாம்.

ஜோதிடம் உண்மையல்ல என்று சிலர் கூறுவதற்குக் காரணம் – அதன் கணிப்புகளை சோதித்துப் பார்க்கும் வகையில் நிரூபிக்க முடியாத தன்மை. அதாவது, ஒரு கணிப்பு தவறு என்பதை அறிவியல் முறையில் நிரூபிக்க முடியாது.

ஒவ்வொரு ஜோதிடரும் ஜாதகத்தை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்ப்பார்கள். சிலர் தொழில், சிலர் திருமணம், சிலர் உடல்நலம் என்பவற்றில் கவனம் செலுத்துவார்கள். இதன் அடிப்படையில் பலன்களும்  மாறுபடலாம்.

இந்த காரணங்களால் தான், வெவ்வேறு ஜோதிடர்களிடமிருந்து வெவ்வேறு பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.