துளசி மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பகவான் விஷ்ணுவிற்கு துளசி மாலை சாற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. எத்துனை பூ மாலை சாற்றினாலும் துளசி இல்லாமல் விஷ்ணு வழிபாடு முடிவு பெறுவதில்லை. மேலும் பகவானுக்கு நைவேத்தியம் செய்யும் போதும் துளசி தளம் வைக்கபடும். அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது துளசி. விஷ்ணு கோவில்களில் துளசி தீர்த்தம் தவறாமல் வழங்கப்படும். மற்றும் துளசி இலைகள் பிரசாதமாக வழங்கப்படும்.
ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மருத்துவத்துறையிலும் துளசி மிக முக்கிய பொருளாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி முக்கியமானதாக கருதப்படுகிறது. துளசி, மூலிகைகளின் ராணியாக கருதப்படுகிறது. வீட்டில் துளசி செடியை வளர்ப்பதால் அனைத்து விதமான எதிர்மறையான விஷயங்களில் இருந்தும் விடுபட முடியும். துளசி மாலை அணிவதும் வாழ்வில் நல்ல விதமான மாற்றங்களை தரும். தினமும் பூஜை செய்த துளசியை சாப்பிட்டு வந்தால் மனம், ஆன்மா, உடல் ஆகியவை தூய்மை அடையும். துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அதனால் தான் விஷ்ணு கோவில்களில் துளசி பிரசாதமாக வழங்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றை குறைக்கும் மருந்தாக துளசி பயன்படுத்தப்படுகிறது.
துளசிச் செடியின் தண்டுகள் மற்றும் வேர்களை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும். இந்த மாலையை அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும். துளசி மாலை அணிந்தால் உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்க இயலு ம். இந்து மதத்தில் மிகவும் புனிதமான மூலிகையாக கருதப்படும் துளசியில் இருந்தது தயாரிக்கப்படும் துளசி மாலை பெரும் மதிப்பு வாய்ந்த ஒன்றாகும். துளசி மாலை அணிந்தால், மனம் அமைதியடையும், மேலும் ஆன்மீக ரீதியான விஷயங்கள் மீது அதிக கவனம் செலுத்த முடியும். துளசி மரத்தால் செய்யப்பட்ட மாலைகள் தியானத்திற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது, மேலும் துளசி மாலை அணிந்து தியானம் செய்யும்போது, மனம் அமைதியடைகிறது. துளசி மாலை அணிவதால் பாவங்கள் நீங்கும். பெருமாளின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கும். கெட்ட கனவுகள், விபத்துக்களில் இருந்து காக்கக் கூடியது துளசி மாலை.
துளசிக்கு இணையானது துளசி மாலை ஆகும். துளசி மாலை கழுத்தில் அணிந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஜெபம் செய்யும் போது உருட்டுவதற்கும் பயன்படுத்தப்படுக்றது. ஒரு சிலர் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து துளசி மாலையை அணிந்து கொண்டு பூஜை முதலானவற்றை மேற்கொள்கிறார்கள ஒரு சிலர் அதனை ஜெபிப்பதற்காக ஜெபமாலையாக பயன்படுத்துவார்கள். துளசி மாலையை தொடர்ந்து அணிபவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
துளசி மாலையை வாங்கி வந்தால் வீட்டிற்கு வந்து அதனை அப்படியே அணிந்து கொள்வது கூடாது. வாங்கி வந்த மாலையை ஒரு கிண்ணத்தில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி அதற்குள் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது அப்படி வைக்க வேண்டும்; பிறகு எடுத்து சுத்தமான நீரில் அதனை கழுவி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் தான் அதில் தெய்வ சக்தி இருக்கும். பிறகு துளசி மாலையை நல்ல சுத்தமான துணியால் துடைத்து, பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு முன் வைத்து, வழிபட வேண்டும். அதற்கு பிறகே நல்ல நேரம் மற்றும் நல்ல நாள் பார்த்து துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.* துளசி மாலை அணிபவர்கள் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற தாமச உணவுகளை சாப்பிடக் கூடாது. அதே போல் மது, புகை, புகையிலை போன்ற போதை வஸ்துக்களையும் பயன்படுத்தக் கூடாது. துளசி மாலை, மிகவும் புனிதமான மற்றும் தெய்வீக சக்தி படைத்த மாலை என்பதால் அதை அணிபவர்கள் மனதாலும், உடலாலும் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025