Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
வீட்டில் சிவலிங்கம் வைத்து வணங்கலாமா? எத்தனை சிவலிங்கம் வைக்கலாம்?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வீட்டில் சிவலிங்கம் வைத்து வணங்கலாமா? எத்தனை சிவலிங்கம் வைக்கலாம்?

Posted DateFebruary 9, 2024

பொதுவாக நாம் நமது வீட்டில் தெய்வப் படங்களை வைத்து வழிபடுவோம். மேலும் ஒரு சிலர் தெய்வ விக்கிரகங்களை வைத்து வழிபடுவார்கள். வீட்டில் வைத்து வழிபடும் விக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். நமது இந்து மதத்தில் பல தெய்வங்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவார்கள். இதில் பெரும்பாலும் மிகப் பெரிய இரண்டு பிரிவுகளாக திகழ்வது விஷ்ணு பக்தர்கள் மற்றும் சிவ பக்தர்கள்.

பொதுவாக கோவிலில் நாம் சிவனாக வழிபடுவது லிங்கத்தைத் தான். எல்லாக் கோவில்களிலும் சிவன் லிங்க வடிவில் தான் இருப்பார். பலரின் சந்தேகம் என்னவென்றால் லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்பது தான்.

கண்டிப்பாக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் வழிபடும் முறை மிக முக்கியமானது. நீங்கள் லிங்கத்தை எந்த உலோகத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பஞ்சலோகம், கண்ணாடி கிறிஸ்டல் என எந்த உலோகமாக வேண்டுமானாலும் இருக்கலாம். லிங்கம் எப்பொழுதும் விபூதி  வாசத்துடன் இருக்க வேண்டும். லிங்கத்தை தண்ணீரில் வைக்கலாம். அல்லது விபூதியில் வைக்கலாம்.  

ஒரு தட்டை எடுத்துக்  கொள்ளுங்கள்  அதில் தூய தண்ணீரை வைத்து அதன் மேல் லிங்கத்தை வைக்கலாம். அல்லது தூய்மையான தரம் மிக்க விபூதியை தட்டில் பரப்பி அதன் மீது லிங்கத்தை வைக்கலாம்.

பொதுவாக நாம் நமது  வீட்டில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யலாம், ஆனால் சாஸ்திரப்படி ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சிவலிங்கங்கள் இருக்கக்கூடாது என ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வாறு சிவலிங்கத்தை வைத்து பூஜை  செய்யும் போது சுத்தம் மிக அவசியம். அசைவம் உண்ணுதல் கூடாது. பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். வில்வ இலை சாற்றி பூஜை செய்யலாம்.