AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
விரதங்களும் பலன்களும் | Viratham & Benefits in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

விரதங்களும் அவற்றின் பலன்களும்

விரதம்  என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம்.

பொதுவாக நாம் நமது அன்றாட வாழ்வில் அமாவாசை, பௌர்ணமி விரதம், சோமவார விரதம் போன்ற சில விரதங்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஒரு சிலர் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சனி விரதம் இப்படி ஏராளமான விரதங்கள் இருப்பார்கள்.

விரதங்களில் நான் ஏகாதசி என்று விஷ்ணு பகவான் கூறியுள்ளார். அன்று  சிலர் நிர்ஜல (நீர் கூட அருந்தாமல்) விரதம் இருப்பார்கள்.

விரதம் என்பது உணவு உண்ணாமல் இருப்பது, கடவுளை தியானம் செய்வது என்ற வகையில் தான் நாம் இருக்கிறோம். இதில் நமது உடலுக்கு நாம் ஒய்வு கொடுக்க மேற்கொள்ளும் விரதமாகக் கூட கருதலாம். முக்கியமாக ஏகாதசி விரதம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நாம் நமது உடலுக்கு அளிக்கும் ஒய்வு என்று கருதலாம். மேலும் சில விரதங்கள் உணவு சார்ந்ததாக அல்லாமல் இருப்பதும் உள்ளது அவை

மௌன விரதம்:

ஒரு நாள் முழுவதும் பேசாமல் அமைதியாக இருப்பது. இது நமது மனதை சுத்தி செய்யும் விரதமாகக் கொள்ளலாம்.

பிரம்மச்சரிய விரதம்:

இது காம ஆசைகளை அடக்கும் விரதம் என்று கொள்ளலாம்.

விரத வகைகள்

விரதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. 1. சாகம் (எதிர்ப்பார்ப்புடன் செய்வது) 2.நிஷ்காம் -(எதிர்பார்ப்பு இல்லாத நிலை)

சாகம்: நாம் மனதில் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக விரதம் இருந்து கடவுளை வழிபடுவது ஆகும். நாம் நமது மனதில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை எண்ணி அது நிறைவேற இவ்வளவு நாட்கள், அல்லது வாரம் ஒரு நாள் வீதம் இவ்வளவு வாரம் விரதம் இருக்கிறேன் என வேண்டிக் கொண்டு விரதம் இருப்பது.

நிஷ்காம்:  

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடவுளை சரணாகதி அடைந்து விரதம் இருத்தல். இவ்வாறு விரதம் இருப்பது மிகக் கடினமே. மனிதர்களாகப் பிறந்த நாம் இந்த கலியுகத்தில் ஆசைகளைத் துறந்து இறைவனே கதி என்று இருப்பது நமக்கு சாத்தியமற்றதாக ஆகிறது

நாம் இருக்கும் விரதங்கள் யாவும் சாகம் வகையைச் சார்ந்ததாகத் தான் இருக்கும்.

சில முக்கிய விரதங்கள் மற்றும் அவற்றிற்கான பலன்களைப் பற்றிக் காண்போம்:

சோமவார விரதம்

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் சிவ பெருமானை நினைத்து இருக்கும் விரதம். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது. இந்த விரதம் இருப்பதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

செவ்வாய்கிழமை விரதம்:

இது முருகப் பெருமானை நினைத்து இருக்கும் விரதம். இந்த விரதம் இருப்பதன் மூலம் முருகனின் அருள் கிட்டும். எதிரிகள் பயம் விலகும். தைரியம் கூடும். கடன் தொல்லை நீங்கும்.

வியாழக்கிழமை விரதம்

வியாழக்கிழமை அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு  குரு பகவானை வணங்கி வழிபட்டு வருதவதன்  மூலம் குருவருள் கிட்டும். செல்வங்கள் சேரும்.

வெள்ளிக்கிழமை விரதம்:

வெள்ளிக்கிழமை ஒருவேளை  மட்டும் உணவு உண்டு விரதம் இருப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிட்டும். பெண்களுக்கு மாங்கலய பலம் கூடும்.

சனிக்கிழமை விரதம் :

சனிக்கிழமை விரதம் இருந்து ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவதன் மூலம்  சனி தோஷங்கள் அகலும்.

பிரதோஷம்:

பிரதோஷம் அன்று விரதம் இருப்பதன் மூலம் பாவங்கள் நீங்கும். சகல வளங்களும் கிட்டும். இறவைனின் பரி பூரண அருள் நமக்கு கிட்டும்.வாழ் நாள் முழுவதும் விரதம் இருப்பது சிறப்பு.

சித்ரா பவுர்ணமி விரதம்

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் சித்திரகுப்தரை நினைத்து இருக்கும் விரதம். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் எம பயம் நீங்கும். நமது முன்னோர்கள் நற்கதி அடைவார்கள்.

தை அமாவாசை விரதம்

தை அமாவாசை அன்று அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள  வேண்டும். நமது முன்னோர்கள் முக்தி அடைவார்கள். இதனால் குடும்ப நலன் பெருகும். முன்னோர்களின் ஆசி கிட்டும்.

கந்தசஷ்டி விரதம்

ஆறுநாள் விரதம் இருந்து முருகரை வழிபட வேண்டும்.  முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு பால் மற்றும் பழம் எடுத்துக் கொள்ளலாம். இந்த விரதம் இருப்பதன் மூலம் சந்ததி பாக்கியம் கிட்டும்.

கிருத்திகை விரதம்

இந்த விரதத்தை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிக்க வேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு பெறலாம்.

திருவாதிரை விரதம்

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் நாளில் நடராஜரை  வணங்கி வழிபாட்டு விரதம் இருக்கலாம். அன்று திருவாதிரை களி செய்து உண்ண வேண்டும். இந்த விரதம் இருப்பதன் மூலம் நாட்டியக் கலையில் பரிமளிக்கலாம்.

மகா சிவராத்திரி விரதம்:

மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி. அன்று விரதம் இருப்பது சிறப்பு. சிவாலயம் சென்று ஆறு சாம பூஜைகளிலும் கலந்து கொள்வது சிறப்பு. அன்று இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை வணங்கி வழிபடுவதன் மூலம் நற்கதி கிட்டும்.

உமா மகேஸ்வர விரதம்

கார்த்திகை மாத பவுர்ணமி அன்று சிவன் மற்றும் பார்வதி குறித்து விரதம் இருப்பது. ஒரு வேளைமட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். இந்த விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள்.

கல்யாணசுந்தர விரதம்

பங்குனி உத்திரம் அன்று சிவனை சிவன் பார்வதி குறித்து விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். இந்த விரதம் இருப்பதன் மூலம் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். திருமணத் தடைகள் நீங்கும்.