திருநீறு சைவத்தின் அடையாளமாகவும் சைவச் சின்னமாகவும் கருதப்படுகிறது. இந்தத் திருநீறு பல வகையான நன்மைகளை நமக்கு பெற்றுத் தருகிறது.
விபூதி, இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. விபூதி என்றால் மேலான ஐஸ்வரியங்களை தரக் கூடியது என்று பொருள். திருநீறு என்றால் நமது வினைகளை நீராக்குவது என்று பொருள்.ரட்சை என்றால் ஆன்மாவை பாதுகாப்பது என்று பொருள். பஸ்மம் நமது வினைகளை பஸ்மம் ஆக்குவது என்று பொருள். பசிதம் என்றால் அறியாமையை அழிப்பது என்று பொருள். மல மாயையை நீக்குவதால் சாரம் என்று அழைக்கப்படுகிறது
ஒரு சமயத்தில் யுகம் முடிவடைந்து புது யுகம் பிறந்தது. பல லட்சம் ஆண்டுகள் முடிந்து யுகம் ஆரம்பித்த பொழுது உயரினங்களை உற்பத்தி செய்ய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் படைத்தல் தொழிலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் பார்வதி தேவி அருகாமையில் இருந்தார் பார்வதி தேவி சிவனை நோக்கி இந்த உலகத்தில் உயிர்களை எதன் அடிப்படையில் நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று கேட்க அதற்கு சிவன் பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தான் உயிர்கள் உருவாக்கப்படுகின்றன என்றார். நெருப்பு நான்கு பூதங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் உயிர்கள் உருவாகின்றன என்றார்.
மேலும் நான் தான் இந்த பிரபஞ்சத்தில் நெருப்பாக இருக்கிறேன் என்றும் கூறினார். வானத்தில் மின்னலாகவும் அடியில் எரிமலைக் குழம்பாகவும் உள்ளேன் என்றும் கூறினார்.இதனைக் கேட்ட பார்வதி சிவ பெருமானிடம் அக்னி கோலத்தை தரிசிக்க தனக்கு ஆவலாக உள்ளதாகக் கூறுகிறார்.
அவளது வேண்டுகோளை ஏற்று சிவ பெருமான் அக்னி கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு முகங்கள். ஏழு கைகள், ஏழு நாக்கு மூன்று கால்கள் தலையில் நான்கு பெரிய கொம்புகளுடன் காட்சி தருகிறார். இதனைக் கண்ட பார்வதி சிவ பெருமானைக் கண்டு வியந்து வணங்குகிறார். இதன் பிறகு பார்வதி தனக்கு காப்புப் பொருளாக தாங்கள் ஏதாவது வழங்க வேண்டும் என்று கேட்கிறார். சிவ பெருமானும் தனது செம்பொன் திருமேனியின் அக்னியில் படிந்த சாம்பலை எடுத்து அவளுக்கு அளிக்கிறார்.
மேலும் இதனை காப்புப் பொருளாகக் கொண்டு நீ உலகத்தை வழி நடத்துவாயாக என்று ஆசி கூறுகிறார். பார்வதி தேவியும் அதில் சிறிது எடுத்து தனது திருமேனியில் பூசிக் கொள்ள்கிறார். சிவ பெருமானும் அக்னி ரூபத்தில் இருந்து தனது இயல்பு நிலைக்கு மாறுகிறார். இவ்வாறு சில காலம் சென்ற பிறகு பார்வதி தேவி ரிஷப தேவர் என்ற முனிவருக்கு சாம்பலை வழங்குகிறார். ரிஷப தேவர் அளப்பரிய சக்தி மற்றும் ஞானம் பெறுகிறார்.
இந்த சக்தி தன்னுடன் முடிவடைந்து விடாமல் இருக்க கோ உலகத்தில் உள்ள சுபத்திரை, சுரபி, சுசிலை,சுமனை, நந்தை என்னும் ஐந்து பசுக்களுக்கு வழங்குகிறார். கோவுலத்தில் உள்ள பசுக்கள் மூலம் அது பூ லோக பசுக்களை வந்து சேருகின்றது. எனவே தான் பசுவின் சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்பட்டு நமக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
எனவே தினமும் விபூதி பூசி கொள்பவர்களுக்கும் தவம் மேற்கொண்ட பலன் கிடைக்குமாம். இதனால் தெய்வமே நேரில் வந்து அருள் புரியும். சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் என்று கூறப்படுகிறது. நாமும் தினமும் விபூதி இட்டுக் கொள்வோம், ஈசனின் அருள் பெறுவோம்
நீறில்லா நெற்றி பாழ் என்று கூறுவார்கள். இதனை நெற்றியில் அணிவதால் சகல செல்வத்தையும் பெறலாம். மகாலட்சுமியாக கருதப்படும் பசுவின் சாணத்தில் இருந்து முறைப்படி திருநீறு தயாரிப்பதால் அதில் மகா லடசுமியின் வாசம் இருப்பதாக ஐதீகம். எனவே திருநீறு அணிவதால் லட்சுமி கட்டாட்சம் கிட்டும். முக வசியம் ஏற்படும். அன்றாடம் திருநீறு அணிபவர்களை பிறரால் வசியம் செய்ய இயலாது. அனைத்து தெய்வத்தின் அருளும் கிட்டும்.
கூன் பாண்டிய மன்னனின் வெப்ப நோயை தீர்க்க திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்று பதிகம் மிகுந்த சக்தி பெற்றுள்ளது! உஷ்ணத்தால் வரக்கூடிய வெப்ப நோய்கள், அம்மை, காய்ச்சல் போன்ற விஷயங்களை எளிதாக தீர்க்க கூடிய இப்பாடல் சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். எவ்விதமான நோய்களாக இருந்தாலும் இந்த பதிகத்தை பாடும் பொழுது சிவபெருமானே நம் நோய் தீர்க்கும் மருந்தாக மாறிவிடுவார் என்பது நம்பிக்கை. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இப்பாடலை தினந்தோறும் காலை, மாலையில் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு பாடினால் பயன் பெறலாம்!
September 19, 2025
September 17, 2025
September 15, 2025