பணத்தின் தேவை யாருக்குத் தான் இல்லை. நமது அன்றாட தேவையில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை வாங்க பணம் தேவைப்படுகிறது.
நாம் பணம் சம்பாதிக்கத் தான் தினமும் காலையில் இருந்து மாலை வரை போராடுகிறோம். பல பேர் இரவு ஷிப்ட் வேலை பார்த்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? அதனை சேர்த்து வைக்க வேண்டாமா? நாளை என்பது நம் கையில் இல்லை என்றாலும் எதிர் கால பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பணம் சேர்க்க வேண்டியுள்ளது. இந்த பணத்தை எப்படி சேர்ப்பது?
உழைப்பை மூலதனமாக்கினால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும். அவ்வாறு சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் நம்மிடம் தங்க வேண்டும் அல்லவா? அதற்கு நாம் வசிக்கும் வீடும் அதன் அமைப்பும் ஒரு காரணமாக அமைகிறது. நமது வீட்டை வாஸ்து முறைப்படி அமைத்துக் கொள்வதன் மூலம் வீட்டில் பணம் சேரும். ஏற்கனேவே வீடு கட்டியாகி விட்டது. இப்பொழுது வாஸ்துபடி அமைய திருப்பி இடித்து கட்ட வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பயப்படாதீர்கள். ஏறகனவே இருக்கும் வீட்டில் ஒரு சில மாற்றங்களை அல்லது ஒரு சில பொருட்களை சரியான திசையில் வைப்பதன் மூலம் பணத்தை ஈர்க்கலாம். வாஸ்து முறைப்படி சரியாக திசையில் பயன்படுத்த வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றிக் காண்போம்.
வீட்டில் பித்தளை அல்லது வெள்ளை நிறத்தால் ஆன யானை சிலையை வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும். அதே போல் வீட்டு வாசலில் விநாயகர் சிலை அல்லது படத்தை வைப்பது மிகவும் நல்லது. இது பணவரவில் இருக்கும் தடைகள் மற்றும் தாமதங்களை நீக்கும்.
நம்மில் பெரும்பாலோர் பணத்தை பீரோவில் தான் வைப்போம். எனவே உங்களின் பீரோ அல்லது பணம் வைக்கும் அலமாரி வடதிசை நோக்கி இருக்க வேண்டும். அதாவது பீரோவை திறக்கும் போதும் அது வடதிசை நோக்கி இருக்க வேண்டும். அப்படி வைக்க வசதி இல்லாதவர்கள் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் பீரோவை வைக்கலாம். இதனால் பணம் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.சிலருக்கு வாஸ்து தோஷத்தினால் பணம் சேராமல் இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவே தங்காது. அப்படி இருப்பவர்கள் வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் செல்வம் பெருகும். பணம், நகை வைக்கும் பீரோவில் ஒரு மயிலிறகை வையுங்கள். செல்வம் அதிகரிக்கும்
பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும். உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.
மகாலட்சுமியின் அருள் நிறைந்த வலம்புரி சங்கினை நம்முடைய வீட்டில் வைத்தால் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது.
வடகிழக்கு திசை என்பது வீட்டில் மிகவும் புனிதமான இடமாகும். இதனால் வடகிழக்கு திசை எப்போதும் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இது மன அமைதியை தருவதுடன், நெகடிவ் எண்ணங்களை நீக்கி விடும். இந்த இடத்தில் பாரமான பொருட்களை வைத்தல் கூடாது. வீட்டின் வடகிழக்கு மூலையில் வாட்டர் ஃபவுண்டைன் வைப்பது மிக நல்லது. இது வீட்டில் பணம் வந்து கொண்டே இருக்க செய்யும்.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் நீர் சார்ந்த எந்தவொரு பொருளையும் வைத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் அதை அகற்றி விட வேண்டும். தென்கிழக்கு திசையில் சிவப்பு நிறத்தில் ஆன பல்பு மாட்டி வைக்கலாம்.
சூரிய வெளிச்சம், காற்று போன்றவற்றை தேவையான அளவு வீட்டிற்குள் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக படுக்கையறை. இந்த படுக்கையறை நாம் நிம்மதியாக உறங்கி எழும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் எப்பொழுதும் சூரிய ஒளியும் காற்றும் உள்ளே வந்து செல்லும் படி அமைய வேண்டும். ஆகையால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது படுக்கையறை ஜன்னல்களை திறந்து காற்று, வெளிச்சம் உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இந்த நேர்மறை ஆற்றல் இருந்தால் தான் நம்மால் சிறப்பாக செயல்பட்டு பணத்தை சம்பாதிக்க முயும்.
கடிகாரமானது வாஸ்துவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடிகாரம் ஓடாமல் நின்றாலோ அல்லது தாமதமாக பின்னோக்கி ஓடினாலும் பணத்தேக்கம் நிச்சயம் ஏற்படும்.வீட்டில் மாட்டியிருக்கும் கடிகாரம் எந்த சூழ்நிலையில் ஒடாமல் நின்று விடக் கூடாது. அப்படி நின்றால் உடனே அதை சரி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் வேறு மாற்ற வேண்டும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025