Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
Murugan Mantras Tamil | முருகனின் மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் நினைத்தது நடக்கும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

முருகனின் இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.

Posted DateNovember 9, 2023

முருகு ஏன்றால் அழகு என்று பொருள். தமிழ்க் கடவுளான முருகன் அழகன் மட்டுமல்ல அருளையும் வழங்குபவர். அவ்வுலகிற்கு அருள் வேண்டும்  என்றாலும் இவ்வுலகிற்கு பணம் வேண்டும். இந்தக் காலத்தில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. மேலும் பல ஆரோக்கியக் குறைபாடுகளும் நமது நிம்மதியைக் குறைக்கிறது. நோயற்ற வாழ்வும் பணமும் இருந்து விட்டால் நிம்மதியான வாழ்க்கை சாத்தியமாகும். அவை இல்லாத காரணத்தால் தான் உறவுகளிலும் பிரச்சினைகள் உருவாகின்றன எனலாம். இவை அனைத்தையும் சமாளித்து வாழ்வில் முன்னேறுவது தான் நமக்கு சவாலாக உள்ளது. மேலும் இதனால் ஏற்படும் கடன் தொல்லைகள் நிலப் பிரச்சினைகள் / இருப்பிடம் போன்ற பல பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது. இது மட்டும் இல்லாமல் வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றங்கள், துரோகங்கள், தொடர் தோல்விகள், கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் என பல பிரச்சினைகள் ஏற்படத் தான் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் தொடர் போராட்டங்களில் இருந்து நாம் விடுபட என்ன தான் செய்வது? வாழ்வில் எவ்வாறு வெற்றி பெறுவது? கவலை வேண்டாம். இதற்கெல்லாம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகனை வணங்குவதன் மூலம் அவனது அருளால் நாம் இந்த தடைகளை எல்லாம் தாண்டி வாழ்வில் வெற்றி பெறலாம்.

முருகனை தினமும் வழிபட்டு வருவதன் மூலம் மேற்கண்ட துயரங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல விலகி ஓடிவிடும். கண் கண்ட  தெய்வமாக விளங்கும் முருகன் நம்மை காத்து அருள் புரிவான் என்ற நம்பிக்கையில் கீழ்கண்ட மந்திரத்தை தினமும் 108   முறை என்ற வீதத்தில் 48 நாட்கள் ஜெபித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டமான சூழ்நிலை மாறி நிம்மதி பெறலாம். இந்த முருகப்பெருமான் வழிபாடு உங்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றியையும் தேடித் தரும்.  

“ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே, சடாக்ஷரனே, என் வாக்கிலும் நாவிலும்  நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா’

அகத்தியர் அருளிய இந்த முருகன்  மந்திரத்தை 48 நாட்கள் 108 முறை ஜெபிப்பதால்  தோஷ நிவர்த்தி  உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் பெருகும்.  எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம். அனைத்தையும் வசீசிகரிக்கும் தன்மை உண்டாகும். ந்மது நாக்கில் இருந்து பிறக்கும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய  வாக்காக அமையும்.

வாழ்வில் வெற்றி பெற இந்த முருகப் பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து நன்னீராடி  பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, திருச்செந்தூர் முருகப் பெருமானை மனதில் நினைத்து ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி, என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்கள் மற்றும் அட்சதை சாற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். பின்னர் மேலே சொன்ன மந்திரத்தைக் கூறுங்கள். முடிந்தால் ஒரு முறை திருச்செந்தூருக்கு சென்று வாருங்கள். அந்த வாய்ப்பையும் உங்களுக்கு முருகனே அருளுவான். கவலையும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, குடும்பத்தில் ஒற்றுமை,  நிம்மதியான வாழ்க்கை, மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்  மேல் சொன்ன  இந்த முருகர் மந்திர ஜெபம் மற்றும் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் வேண்டுதல் 48 நாட்களில் நிறைவேறும்.ஓம் முருகா போற்றி முருகா முருகா முருகா