Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
வேண்டுதலை நிறைவேற்றும் வேல்மாறல் | VEL MARAL in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வேண்டுதலை நிறைவேற்றும் வேல்மாறல்

Posted DateOctober 1, 2024

வேல்மாறல் என்றால் என்ன? அருணகிரி நாதர் அவர்கள், கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி மற்றும் முருகனைப் பற்றி மணி மந்திர ஔஷதம் என்னும் வகுப்பை வழங்கியிருக்கிறார்.  வள்ளிமலை சச்சிதாநந்த சுவாமிகள் அருணகிரி நாதர் வழங்கிய ஔஷதத்தை தொகுத்து அறுபத்தி நான்கு பாடல்களாக வழங்கினார். ஔஷதம் என்றால் மருந்து.  வேல் வகுப்பு அல்லது வேல்மாறல் என்பது  மருந்து.  மருந்து என்பது நோய் தீர்க்கக் கூடியது.  இந்த மருந்தை  அருணகிரி நாதர் பிறவி மருந்தாக வழங்கியிருக்க்கிறார். இந்த வேல் வகுப்பின் தொகுப்பை மாற்றி அமைத்த  அறுபத்தி நான்கு பாக்கள் கொண்ட அழகான தொகுப்பு வேல் மாறல் ஆகும். வேல் மாறல் ஆற்றல் நிறைந்த அற்புதமான பதிகம். வேலை வணங்குவதன் மூலம்  வேலின் வலிமை  மற்றும் வேலின் ஆற்றல் கிடைக்கும்.

கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக முருகப் பெருமான் கருதப்படுகிறார். அவரை வணங்குவது போலவே அவரது வேலையும் வணங்குவது சிறப்பு வேலை மட்டும் பிரதானமாக வைத்து வழிபடும் பல கோவில்கள் உள்ளன. நாம் வீட்டிலும் வேலை வைத்து வணங்கி வழிபடுவது சிறப்பு. ஆனால் வீட்டில் பெரிய அளவில் அல்லாது சிறிய அளவில் வேலை வைத்து வணங்க வேண்டும்.

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சொல்லி வர வேண்டும். 48 நாட்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து  இதை படிப்பது சிறப்பானது. மன பயம் நீங்கி, மன நிம்மதி, மனமகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். முருகனுக்குரிய முக்கிய விரத நாட்களில் இந்த மந்திரத்தை சொல்வது பல மடங்கு அதிகமான பலனை தரும். இதை முறையாக சொல்லி வருபவர்களுக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும். நோய் தீர வேண்டும், பிரச்சனைகள் தீர வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை படிக்கலாம்.

வேலை மட்டும் பிரதானமாக கொண்டு வழிபாடு செய்து நமது முன்னோர்கள் அதன் சிறப்பை காட்டி இருக்கிறார்கள். இச்சா சக்தி, கிரியா சக்தி, மற்றும்  ஞான சக்தி என்னும் மூன்று சக்திகளுள் வேல் ஞான சக்தியாக விளங்குகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் அனைத்து ஆற்றலையும் ஒன்றாக இணைத்து வேலினுள் வைத்து சிவன் சக்தியிடம் அளிக்க சக்தி தனது ஆற்றலையும் அதனுள் வைத்து வேலினை முருகப் பெருமானுக்கு வழங்கியுள்ளார். எனவே எல்லா ஆற்றலும் உள்ளது  இந்த வேல். இது அழிக்கும் ஆயுதம் மட்டும் அன்றி. காக்கும் ஆயுமு’தம் ஆகும். பகைவர்களுக்கு அழிக்கும் ஆயுதமாகவும்  பக்தர்களை காக்கும் ஆயுதமாகவும் வேல் செயல்படுகிறது.

வேலின் கூர் முனையில் ஒரு எலுமிச்சம் பழம் சொருக வேண்டும். வேல் மிகவும் சிறியதாக இருந்தால்  வேலுக்கு கீழ் ஓரு எலுமிச்சம் பழம் வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை சந்தனம் குங்குமம் பொட்டு  வைத்து வேல் மாறலை படிக்க வேண்டும். தினம் தோறும் படிப்பது நல்லது. தினமும் படிக்க இயாதவர்கள் செவ்வாய்க் கிழமை அல்லது சஷ்டி போன்ற நாட்களில் படிக்கலாம். மிகுந்த பிரச்சினையில் இருப்பவர்கள் அதில் இருந்து வெளி வர வைராக்கியத்துடன்  நாற்பத்தி எட்டு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும்.

 தினமும் தொடர்ச்சியாக 48 நாட்கள் காலை ஆறு மணியிலிருந்து 7 மணிக்குள் வேல்மாறலை பாராயணம் செய்பவர்களுக்கு வேண்டியது வேண்டியபடி நடக்கும். குறிப்பாக அவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று நினைப்பவர்கள் இந்த முறையில் பாராயணம் செய்ய கடின உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியில் இருந்து ஏழு மணிக்குள் இந்த வேல்மாறலை படிக்க வேண்டும். தொடர்ச்சியாக 7 நாட்கள் அதாவது ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை இந்த வேல்மாறலை படிப்பதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்டுவதற்குரிய யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. வேல் மாறலை படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் கண்டிப்பான முறையில் வெள்ளியினால் ஆன சிறிய வேல் வாங்கிக் கொள்ள  வேண்டும். வேல்மாறல் படிக்கும் நாள்தோறும் வேலிற்கு பசும்பால், சந்தனம், தண்ணீர் இவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சிவப்பு நிற திரியை பயன்படுத்தி ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிற மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.     அதே சமயம் “ஓம் நமோ சரவணபவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் நிதானமாக மேல்மாறலை படிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் நினைத்தது நடக்கும்