Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு

Posted DateAugust 12, 2024

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் பிரதோஷமும் இணைந்து வந்திருக்கிறது. பொதுவாக பிரதோஷம் சிவனை வழிபட உகந்த நாள். அதிலும் இன்றைய நாள் அற்புதமான நாள் ஆகும். அம்மன் அருளும் சிவன் அருளும் நிறைந்து இருக்கும் இந்த நாளில் சிவ பார்வதி வழிபாடு மேற்கொள்வது அற்புதமான பலன்களை பெற்றுத் தரும். இன்றைய வழிபாடு உங்கள் ஜாதகத்தில் இருக்கும். நாக தோஷங்களை நீக்க வல்லது. சிவனுக்கு வில்வ இலை சாற்றினால் கூட மகிழ்ந்து வரம் அளிக்கக் கூடியவர் எனவே சிவனுக்கு வில்வ இலையும் அம்மனுக்கு அரளி மாலையும் சாற்றி இன்றைய தினம் வழிபடுவதன் மூலம் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.

இன்றைய தினம் நீங்கள் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் முதலில் நந்தியை தரிசனம் செய்ய வேண்டும். பிறரு அவரிடம் அனுமதி பெற்று சிவனை தரிசிக்க வேண்டும். நந்தி மற்றும் சிவனுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி அளிக்கலாம்.அருகம்புல் மாலை வாங்கி நந்திக்கு சாற்றலாம். பச்சரிசியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெல்லம் கலந்து விடுங்கள். அதனை நந்திக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு அதனை பிரசாதமாக நீங்களும் எடுத்துக் கொண்டு பிற பக்தர்களுக்கும் விநியோக்கிக்க வேண்டும்.

பிரதோஷ நேரத்தில் நீங்கள் சிவபெருமானுக்கு எலுமிச்சை பழ சாதம் செய்து நைவேத்தியம் செய்யலாம். மாலை பச்சரிசியை வேக வைத்து வடித்து, அதில் எலுமிச்சம் பழ சாதத்தை கலவை சாதமாக தயார் செய்து கொள்ள வேண்டும். உங்கள் சக்திக்கு ஏற்றவாறு நீங்கள் செய்யலாம். இந்த பிரசாதத்தை வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு  சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். சில கோவில்களில் இதை உள்ளே கர்ப்ப கிரகத்திற்கு எடுத்துச் சென்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். சில கோவில்களில் இதற்கு அனுமதி இருக்காது.

அவ்வாறு அனுமதிக்காத பட்சத்தில் நீங்கள் வீட்டில் தாயார் செய்து கொண்டு வந்த எலுமிச்சை சாதத்தை சிவன் கோவில் வாசலில் இருந்தபடி சிவனுக்கு அர்ப்பணம் என்று கூறி பிறகு அதனை தொன்னையில் வைத்தது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

மேலே சொன்ன இந்த எளிய வழிபாட்டை செய்வதன் மூலம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் தீரும். திருமண உறவில் காணப்படும் பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சினை, கடன், வேலையின்மை போன்ற பிரச்சினைகள்  தீரும் என்பது ஐதீகம்.